குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை உள்ளூர் தலைவர்கள் முதல் சர்வதேசத் தலைவர்கள் வரை பலரும் புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.
– மோடியைப் புகழ்ந்த பேரறிவாளர்கள்
மோடி தனது நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி உலகப் பொருளாதாரத்தை உயர்த்தப் பாடுபட்டுள்ளார். இதன் மூலம் உலக மக்கள் தரமான வாழ்க்கை வாழவும் அவர் உதவியுள்ளார்
– அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் எப்.எச். பலேமவேகா.
நான் மோடியின் மிகப் பெரிய விசிறி. அவர் ஒரு டைனமிக்கான தலைவர். குஜராத்துக்காக நிறையச் செய்துள்ளார்
– நடிகர் விவேக் ஓபராய்.
மோடி போன்ற திறமையான ஒரு தலைவரைப் பெற்ற குஜராத் ஆசிர்வதிக்கப்பட்டது. குஜராத்தின் சாதனைகளுக்காக நான் பாராட்டுகிறேன்
– முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
ஏசி ரூம்களிலிருந்து செயல்படுபவரல்ல மோடி. மாறாக தனது மக்களுக்காக வெயிலிலும், அழுக்கிலும் நடமாடுபவர்
– சுஷ்மா சுவராஜ், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர்.
குஜராத்தில் உள்ள தொழிற்சூழல் நிறுவனங்களுக்கு உகந்ததாக உள்ளது. மோடியின் தலைமைத்துவம் சிறப்பானது
– சீன ஸ்டீல் கார்ப்பரேஷன் தலைவர் மற்றும் சிஇஓ சோவு.
நீங்கள் சிறப்பாக செயல்படுவதற்கும், மனிதாபிமானவராக திகழ்வதற்கும் நல்ல உதாரணமாக விளங்குகிறீர்கள். மிகச் சிறந்த ரோல் மாடல் நீங்கள்
– டாக்டர் ரேனு கடோர், ஹூஸ்டன் பல்கலைக்கழகம்.
நவீன இந்தியாவில் பெரும் தாக்குதலை ஏற்படுத்திய தலைவர் உங்களைப் போல வேறு எந்த மாநிலத்திலும் இல்லை
– கெளதம் அடானி, அடானி குரூப்.
மிக எளிமையான வாழ்க்கை வாழ்பவர் மோடி. பிற தலைவர்களைப் போல அல்ல இவர். பாசத்துடன் பேசுகிறார். வளர்ச்சி குறித்து ஆர்வத்துடன் பேசுகிறார். புதிய ஐடியாக்களையும், கொள்கைகளையும் வரவேற்கிறார். ஒரு முதல்வராக மட்டுமல்லாமல், சாமானியராகவும் இருக்கிறார். அவர் பேசுகிறார், பேசுவதை செய்கிறார்
– நடிகர் அமிதாப் பச்சன்.
மிகச் சிறந்த அரசியல் ஒருங்கிணைப்பு மற்றும் நல்லாட்சி மூலம் எப்படி சாதனைகளைப் படைக்கலாம் என்பதை நாட்டுக்குக் காட்டியுள்ளார் மோடி. துல்லியமாகவும், துணிச்சலாகவும் முடிவெடுக்கிறார். அவரது நல்லாட்சி பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது
– என்.விட்டல், முன்னாள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்.
நரேந்திர மோடியின் இரண்டு சிறந்த தரங்களை நான் பார்த்து வியந்துள்ளேன். ஒன்று கற்பனை இன்னொன்று கண்டுபிடிப்பு. அவர் எதையெல்லாம் திட்டமிடுகிறாரோ அதற்கு இவற்றை தவறாமல் பயன்படுத்தி வெற்றி பெறுகிறார்
– எல்.கே.அத்வானி, மூத்த பாஜக தலைவர், முன்னாள் துணைப் பிரதமர்.
குஜராத் மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திரமோடியை நான் பாராட்டுகிறேன். அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சிக்கான சிறந்த தளமாக குஜராத் திகழ்கிறது. இரண்டு முறை முதல்வராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர் மோடி. ஒவ்வொரு மதத்தையும் சேர்ந்தவர்கள் அவரை ஆதரித்துள்ளனர்
– ஆரோன் ஷாக், அமெரிக்க ரெப்ரசன்டேடிவ் சபையின் பிரதிநிதி.
நரா என்பதற்கு சமஸ்கிருதத்தில் மனிதன் என்று பொருள். இந்திரா என்றால் மன்னன் என்று பொருள். நரேந்திர பாய், மனிதர்களின் கடவுள். மன்னர்களின் மன்னன். மோடியிடம் தெளிவான பார்வை மற்றும் குறிக்கோள் என்ற அர்ஜூனன் உடன் இருக்கிறார். இதன் மூலம்தான் அவர் நிறைய முதலீடுகளையும், முதலீட்டாளர்களையும் நமது நாட்டுக்குக் கவர்ந்து கொண்டு வந்துள்ளார்
– அனில் அம்பானி, அடாக் குரூப் தலைவர்.
மோடியின் வளர்ச்சியில் காந்திஜியின் வேகத்தைப் பார்க்கிறேன்
– திருமதி ஷீலா பப்பூ கோஸ்க், மொரீஷியஸ் அமைச்சர்.
சிறந்த கண்ணோட்டம், உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்தல், ஒற்றுமையான அரசு ஆகியவற்றுக்கு மோடியே முழுக் காரணமும்
– ரத்தன் டாடா, டாடா குழும தலைவர்.
நல்ல அரசியலுடன் பொருளாதாரமும் இணைந்து செல்ல முடியும் என்பதை மோடி நிரூபித்துள்ளார். குஜராத் மாநிலம் பொருளாதார சீர்குலைவிலிருந்து தப்பியுள்ளது. இதுவே மோடியின் கண்ணோட்டத்திற்கும், தலைசிறந்த தலைமைத்துவத திறமைக்கும் சிறந்த சான்றுகளாகும்
– டாக்டர் ஜியாப்ரி லீ, ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்.
ஆட்டோ மொபைல் தயாரிப்புக்கு சிறந்த களமாக குஜராத் விளங்குகிறது. மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வை, சிறந்த முடிவு, உறுதியான தலைமைத்துவம் ஆகியவையே குஜராத்தின் இந்த வெற்றிக்குக் காரணம்
– ஹிடஹிரோ யோகூ, ஜெட்ரோ தலைவர்.
குஜராத்திகள் பெரிதாக சிந்திக்கிறார்கள். தோல்வி குறித்து கவலைப்படுவதில்லை. மேலும், கூடுதலாக, நீண்ட உறவு மீது நம்பிக்கை வைக்கிறார்கள். மோடியும், அவரது குழுவினரும், இதன் காரணமாகவே வென்றுள்ளனர்
– ஆனந்த் மஹிந்த்ரா, மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா குழுமத் தலைவர், நிர்வாக இயக்குநர்.
குஜராத் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. தயாரிப்பை அதிகரிக்கிறது. நகர்ப்புறமயமாக்கலை விரைவுபடுத்துகிறது. டோலரா பகுதியில் ஒரு புதிய அதி நவீன நகரம் உருவாகி வருகிறது. இதற்கான அத்தனை பாராட்டுக்களும் மோடி அரசின் திறமையான குழுவினருக்கும், அவரது தலைமைக்குமே போய்ச் சேர வேண்டும்
– அமிதாப் கந்த், டெல்லி -மும்பை இண்டஸ்ட்ரியல் காரிடார் தலைவர்.
இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் ஒரு புதிய பென்ச் மார்க் நிர்ணயிக்கப்பட்டுள்ளு. அது உண்மையான வளர்ச்சிக்கான வெற்றி பெற்ற அரசியலாகும். எத்தனை நாடுகளின் பொருளாதாரங்கள் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளன?. ஆனால் அதில் குஜராத் உயர்ந்த இடத்தில் இருக்கிறது
– ரான் சோமர்ஸ், அமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில் தலைவர்
இந்த ஆண்டு வைப்ரன்ட் குஜராத் நிகழ்வு, மிகப் பெரியதாகவும், உலகளாவிய பங்கேற்புடனும் நடந்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறந்த அடித்தளத்தை நாம் அமைத்துள்ளோம். மோடி அவர்களின் சிறந்த கண்ணோட்டமும், தலைமையும், மிக விரிவான எதிர்காலத்திற்கு வித்திட்டுள்ளன
– பங்கஜ் படேல், ஜைடஸ் கடிலா தலைவர்.
குஜராத் அரசு அமைத்துக் கொடுத்துள்ள அருமையான அடிப்படைக் கட்டமைப்பு சூழல் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் காரணமாக, பல நிறுவனங்கள் நல்ல முடிவுகளை எடுக்கத் தூண்டுதலாக அமைந்துள்ளது. குஜராத்தில், முதல்வர் மோடியின் அமலாக்க கலாச்சாரம் மிகச் சிறந்த தலைமைத்துவத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது
– சிரஸ் மிஸ்ட்ரி, டாடா குழுமத் தலைவர்.
நல்லாட்சி என்பது குஜராத்துடன் இணைந்ததாகும். அருமையான அடிப்படைக் கட்டமைப்பு, நிலம் மற்றும் நீர் கிடைப்பது, வேகமாக வளரும் நகரங்கள், ஸ்திரமான அரசியல் சூழல், சிறந்த கலாச்சாரம், நல்லாட்சி உள்ளிட்டவ சிறப்பாக உள்ளன
– சுதிர் மேஹ்தா, டோரன்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவன தலைவர்.
நமது நாட்டின் மிக்ச சிறந்த திறமையான தலைவர்களில், நிர்வாகிகளில் ஒருவர் நரேந்திர மோடி
– டாக்டர் மனோகர் ஜோஷி, மூத்த சிவசேனா தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் மகாராஷ்டிர முதல்வர்.
வளர்ச்சிப் பாதையில் குஜராத்தை எடுத்துச் சென்றுள்ளார் மோடி. மாதிரி மாநிலமாக குஜராத்தை மாற்றியுள்ளார். குஜராத்தின் வெற்றி, மோடியையே சேரும்
– வெங்கயா நாயுடு, முன்னாள் பாஜக தலைவர்.
சிறந்த பொருளாதார மாற்றத்தை மட்டுமல்லாமல், தடையற்ற மின்விநியோகம், மேம்பட்ட சாலைகள் உள்ளிட்டவற்றையும் ஏற்படுத்தியுள்ளார் நரேந்திர மோடி. மேலும் மாநிலத்தின் மிகச் சிறந்த வளர்ச்சிக்கும் அவர் வித்திட்டுள்ளார்
– பினான்சியல் டைம்ஸ்.
மோடியின் தலைமைத்துவம் மிகச் சிறந்தது. நாட்டுக்கு அப்பாலும் மிகச் சிறந்த தலைவராக மோடியைக் காட்டியுள்ளது குஜராத்
– ரத்தன் டாடா.
இந்தியாவை ஊழல் பிடியிலிருந்து மீட்டுக் கொண்டு வரக் கூடியவராக ஒருவரை நினைப்பதாக இருந்தால், சீனாவுக்கு இணையான பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடக் கூடிய ஒரு அறிவார்ந்த தலைவரை நினைப்பதாக இருந்தால் மோடியைத்தான் நினைக்க வேண்டியுள்ளது
– டைம்ஸ் பத்திரிக்கை.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி உள்ளது. அதாவது பத்தாண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதமாக உள்ளது. பூமியில் வேறு எந்த நாட்டையும் விட குஜராத் மாநிலம் வேகமாக வளருகிறது
– ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷன்.
ஒட்டு மொத்த நாட்டின் கலங்கரை விளக்கமாக நரேந்திர மோடியும், குஜராத் மாநிலமும் திகழ்கின்றனர்
– பிரகாஷ் சிங் பாதல், ஷிரோமணி அகாலிதள தலைவர்.
மகாத்மா காந்தியடிகள், கொள்கைகளையும், லட்சியங்களையும் உருவாக்கினார். மறைந்த திருபாய் அம்பானி மிக்ச சிறந்த சிறுதொழிலதிபர்களுக்கான வளத்தை ஏற்படுத்தினார். தற்போது நரேந்திர மோடி, மிகச் சிறந்த மாற்றத்திற்கு காரணகர்த்தாவாக மாறியுள்ளார்
– அனில் அம்பானி, ஆர் காம்.
ஒரு பத்திரிக்கையாளராக, நாங்கள் மோடியை, சீர்திருத்தப்பட்ட அரசியல்வாதியாக, சிறந்த நிர்வாகத் திறமையாளராக, கொள்கைப் பிடிப்புள்ளவராக பார்க்கிறோம்
– சுபாஷ் சந்திரா, ஜீ தலைவர்.
இதய அளவில் நரேந்திர மோடி சிறந்த தேசபக்தியாளராக திகழ்கிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் வளர்ச்சிக்காகவும் அவர் பாடுபடுகிறார். நாட்டின் இதர மாநிலங்களுக்கு மிகச் சிறந்த ரோல் மாடலாக குஜராத் திகழும்
– பைய்யூஜி மஹாராஜ், ஆன்மீகத் தலைவர்.
நரேந்திர மோடி தனக்கென தனி பாணியில் செயல்படுகிறார். குஜராத்தை உலக வரைபடத்தில் இணைத்துள்ளார்
– கல்ராஜ் மிஸ்ரா, பாஜக துணைத் தலைவர்.
தனது செயல்களையே பேசும்படி செய்துள்ளார் நரேந்திர மோடி
– ரவிசங்கர் பிரசாத், பாஜக பொதுச் செயலாளர்.
குஜராத்தில் முதல்வர் மோடி ஏற்படுத்தியுள்ள புதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஒப்பிட முடியாதது. மோடியைப் போலவே அனைத்து முதல்வர்களும் செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
– சுனில் ஷெட்டி, பிரபல நடிகர்.
ஆந்திராவில் குஜராத் மாடல் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆந்திர மக்கள் குஜராத்தையும், நரேந்திர மோடியையும் விரும்புகிறார்கள்
– கிஷன் ரெட்டி, எம்.எல்.ஏ, ஆந்திர மாநில பாஜக தலைவர்.
கடந்த பத்து ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தின் அமைதியும், வளர்ச்சியும், வேறு எந்த மாநிலத்துடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு உள்ளது
– பல்பீர் பூ்ஞ்ச், மூத்த பாஜக தலைவர்.
கடந்த பத்து ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தின் அமைதியும், வளர்ச்சியும், வேறு எந்த மாநிலத்துடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு உள்ளது
– பல்பீர் பூ்ஞ்ச், மூத்த பாஜக தலைவர்.
தங்களது நம்பிக்கையை மோடி முறியடிக்க மாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள். மக்களுக்காகவே இருக்கிறார் மோடி. அவரைப் போன்ற தலைவர்களால்தான் மக்களுக்கு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை பிறக்கிறது
– நவ்ஜோத் சிங் சித்து, பாஜக லோக்சபா எம்.பி.
நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் குஜராத் நாட்டில் மட்டுமல்ல, உலகுக்கே முன்மாதிரியாக மாறியுள்ளது
– ராஜ்நாத் சிங், பாஜக தலைவர், முன்னாள் உ.பி. முதல்வர்.
நரேந்திர மோடி, குஜராத்தின் முகத்தை மாற்றியமைத்துள்ளார். டெல்லியில் கூட 24 மணி நேரம் மின்சாரம் கிடையாது. ஆனால் குஜராத்தில் உள்ள 14,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது
– விஜய் கோயல், பாஜக பொதுச் செயலாளர்.
6 கோடி குஜராத்திகள் என்று மோடி கூறும்போது ஒட்டுமொத்த குஜராத்திகள் குறித்தும்தான் அவர் பேசுகிறார். இந்து குஜராத்திகள், முஸ்லீம் குஜராத்திகள் என்று அவர் பிரித்துப் பேசுவதில்லை
– ஷானவாஸ் ஹுசேன், லோக்சபா எம்.பி.
குஜராத்தில் உள்ள தலித்துகள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் எனஅனைத்துத் தரப்பினரையும் மேம்படுத்தியுள்ளார் மோடி
– ராம்தாஸ் அத்வாலே, ஆர்பிஐ தலைவர்.
குஜராத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அறிவியல்பூர்வமான வளர்ச்சியானது, உலக அளவில் பாராட்டுக்களைக் குவித்துள்ளது. இதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்
– டாக்டர் சி.பி.தாக்கூர், மூத்த பாஜக தலைவர்.
நான் மோடியின் நிர்வாகத் திறமையை ஏற்கனவே கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அந்த சாதனைகளை அவர் படைத்தது எப்படி, அவரது தலைமைத்துவப் பண்பு எப்படி என்பதை நேரில் பார்த்த பிறகே உணர்ந்தேன்
– அஜய் தேவ்கன், நடிகர்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.