வகுப்பு கலவர தடுப்பு மசோதா நியாயமான உணர்வுடன் கொண்டு வரப்படுவதாக தெரியவில்லை”

December-5-13

பிரதமர் மன்மேகான் சிங்குக்கு குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

வகுப்பு கலவர தடுப்பு மசோதாவை மத்திய அரசு இந்த நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட உள்ளதாக அறிகிறேன். தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த மசோதாவை அவசரம், அவசரமாக மத்திய அரசு கொண்டு வருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையிலேயே நாட்டில் வகுப்பு கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நியாயமான உணர்வுடன் இந்த மசோதா கொண்டு வரப்படுவதாக தெரியவில்லை. அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் இந்த மசோதா கொண்டு வரப்படுவதாகத் தெரிகிறது.

மத்திய அரசு அவசர கோலத்தில் கொண்டு வரும் இந்த கலவர தடுப்பு மசோதா நாட்டு மக்களை மத ரீதியாக மேலும் பிளவு படுத்தி விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது. முழுமை இல்லாத இந்த மசோதாவை தவறாக பயன்படுத்தி சாதாரண சிறு பிரச்சினைகளைக் கூட ஊதி பெரிதாக்கி மதச்சாயம், இனச்சாயம் பூசி விடுவார்கள். இதனால் நாட்டில் தேவை இல்லாமல் சிறு விஷயங்களும் கலவரமாக வெடிக்கலாம். இந்த சட்டத்தின் உண்மையான நோக்கம் மறைந்து, எதிர்மறையான முடிவே ஏற்படும்.

வகுப்பு கலவரத்தை தடுக்கும் மசோதா சரியானபடி வகுக்கப்படவில்லை. அது மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் பேரழிவு போன்ற நிலையை ஏற்படுத்தி விடும்.

மேலும் இந்த மசோதா மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. எனவே இந்த மசோதா பற்றி மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

அரைகுறையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த மசோதாவை அமல் படுத்துவதில் பல நடை முறை சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக செக்சன் 3 மற்றும் 4–ல் குழப்பம் நிறைந்துள்ளது. இது சட்டம், ஒழுங்கை அமல்படுத்தும் விஷயத்தில் விரும்பத்தகாததை ஏற்படுத்தி விடும்.

குறிப்பாக அரசியல் ரீதியாக பழி வழங்குவதற்கு வாய்ப்பு கொடுத்தது போலாகி விடும். மத்திய அரசு கொண்டு வரும் இந்த சட்டத்தில் நாட்டின் கூட்டமைப்பு கருதப்பட வில்லை.

சட்டம் – ஒழுங்கை பேணி காக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கே உள்ளது. எனவே அது தொடர்பான சட்டங்களை இயற்றும் உரிமையும் மாநில அரசுகளுக்கே உள்ளது.

மத்திய அரசு அதை பகிர்ந்து கொள்ள விரும்பினால், அது தொடர்பாக ஒரு மாதிரி மசோதாவை முதலில் தயாரித்து, மாநில அரசுகளுக்கு அனுப்பலாம். அந்த மாதிரி மசோதா மீது மாநில அரசுகள் தெரிவிக்கும் கருத்துக்கள், மாற்றங்கள், பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு இறுதி முடிவு செய்யலாம்.

வகுப்பு கலவர தடுப்பு மசோதாவில் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எதிராக உள்ளது.

இத்தகைய இடையூறுகளைத் தாங்கிக் கொண்டு சிறு, சிறு பிரச்சினைகளை கையாள்வது நடைமுறைக்கு ஒத்து வராதது மட்டுமல்ல விரும்பத்தகாததும் ஆகும். எனவே தேசிய மனித உரிமை கமிஷன் மற்றும் மாநில மனித உரிமை கமிஷன் ஆகியவை தற்போதைய விதிப்படியே செயல்பட வேண்டும்.

வகுப்பு கலவரங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள் செய்ய நிதி ஏற்படுத்துவதை வரவேற்கிறேன். இந்த இடத்தில் இழப்பீடு என்பது சரியான வார்த்தை அல்ல.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மறுவாழ்வு பெற உதவிகள் என்பதே பொருத்தமாக இருக்கும். எனது மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த வகுப்பு கலவரமும் இல்லை.

அம்மாநில முதல்–மந்திரி என்ற வகையில் மத்திய அரசின் இந்த மசோதாவில் உள்ள அம்சங்களும், மசோதா கொண்டு வரப்படும் நேரமும் எனக்கு சந்தேகத்தையே தருகிறது.

மத்திய அரசு இதை நிவர்த்தி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service