இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்துடன் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் திங்கள்கிழமை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
தில்லி ரேஸ்கோர்ஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் இருவரும் குர்காவ்னுக்குப் புறப்பட்டு சென்றனர்.
பிரதமர் மோடி, பிரான்சுவா ஹொலாந்த் ஆகியோருடன் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரன்ட் ஃபேபியஸ் உள்பட அந்நாட்டுக் குழுவினரும், இந்திய குழுவினரும் உடன் சென்றனர்.
சூரிய மின்சக்திக் கூட்டு மையத்துக்கு அடிக்கல்: பிறகு, குர்காவ்னில் உள்ள தேசிய சூரியசக்தி நிறுவனத்தில், சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டு மையத்தின் செயலகத்துக்கு பிரதமர் மோடியும், ஹொலாந்தும் அடிக்கல் நாட்டினார்கள்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.