குடியரசு தினத்தை யொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் (டுவிட்டர்) அவர் தெரிவித்துள்ளதாவது:
இந்திய மக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான குடியரசு தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்து தந்த தலைவர்களுக்கு இந்த நன்னாளில் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய வரைவுக் குழுவின் தலைவராக இருந்த சட்ட மேதை அம்பேத்கருக்கு எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த வாழ்த்துச் செய்தியில் மோடி தெரிவித்துள்ளார்.
Tributes to all great personalities who framed our Constitution. I salute Dr. Ambedkar for his efforts as Chairman of Drafting Committee.
— Narendra Modi (@narendramodi) January 26, 2016
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.