10 ஆண்டுகால ஆட்சியில், ஏராளமான வளர்ச்சிபணிகளை, பா.ஜ.,வின், சிவ்ராஜ்சிங் சவுகான் செய்துள்ளார்”

November-20-13


மரியாதையாகபேசுவது எப்படி என்பதை, முதலில், உங்கள் கட்சியின் துணைதலைவர் ராகுலுக்கு கற்றுக்கொடுங்கள். அப்புறம், எங்களுக்கு அறிவுரைகூறலாம், என, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, பா.ஜ.க பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, பதிலடி தந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ.க, ஆட்சி நடக்கிறது. இங்கு பா.ஜ.க, வேட்பாளர்களை ஆதரித்து, நரேந்திர மோடி, சத்ரபூர் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், பேசினார். அவர் பேசியதாவது: சமீபத்தில், ஒருபிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க அரசியல் எதிரிகளை அவமதிக்கும் வகையில் பேசுகின்றனர். மரியாதையாகபேச, அவர்கள், கற்றுக்கொள்ள வேண்டும் என, பேசியுள்ளார்.

பிரதமருக்கு, ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். சமீபத்தில், குற்றப் பின்னணி உடைய மக்கள் பிரதிநிதிகளை, பாதுகாக்கும் விதமான அவசர சட்டத்தை, பார்லிமென்டில் நிறைவேற்ற, உங்களின் மத்திய அரசு முயற்சித்தது. இதற்காக, உங்கள் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விஷயங்கள் அனைத்தும், காங்., துணைதலைவர் ராகுலுக்கு, நன்றாக தெரியும். ஆனால், கடைசிநேரத்தில், ஒன்றுமே தெரியாதது போல், நான்சென்ஸ்… யார் இந்தமுடிவை எடுத்தது?

அவசர சட்டத்தை தூக்கி குப்பையில் போடுங்கள் என, ராகுல் பேசினார். இந்தசட்டம், வேண்டுமா, வேண்டாமா என்ற விஷயத்துக்குள், நான், இப்போது போக விரும்பவில்லை. அதேநேரத்தில், ஜனநாயக முறைப்படி தேர்வுசெய்யப்பட்ட மத்திய அமைச்சரவை, பிரதமர் தலைமையில் எடுத்த முடிவை, குப்பையில் போடுங்கள் என, ராகுல், எப்படிவிமர்சிக்கலாம்?

Narendra Modi campaigns in Madhya Pradesh

ராகுலின் இந்தவிமர்சனம், பிரதமரின் முகத்தில் விழுந்த அறை. ஜனநாயக நடை முறைகளை களங்கப் படுத்தும் விதமாக, அவர் பேசியுள்ளார். எனவே, மரியாதையாக எப்படிபேசுவது என்பதை, முதலில், உங்கள் கட்சியின் துணைதலைவருக்கு கற்றுக்கொடுங்கள். அதற்கு பின், எங்களுக்கு அறிவுரை கூறலாம். எங்களுக்கு அறிவுரை கூறுவது போல், ராகுலுக்கு, உங்களால் அறிவுரை கூற முடியுமா? சமீபத்தில் கூட, எங்கள் கட்சியினரை, திருடர்கள் என, ராகுல் விமர்சித்துள்ளார். அதுகுறித்து, நீங்கள், வாய்திறக்க மறுப்பது ஏன்? காங்கிரஸ்  தலைமையிலான, மத்திய அரசு, தங்களின் அதிகாரத்தை பயன் படுத்தி, பா.ஜ.,வை பற்றி, பொய்பிரசாரம் செய்கிறது.

காங்கிரஸ்  கட்சி, பல ஆண்டுகள், ம.பி. ஆட்சிசெய்துள்ளது. ஆனால், எந்தவளர்ச்சி பணிகளையும், அந்தகட்சி, உருப்படியாக செய்யவில்லை. ஆனால், கடந்த, 10 ஆண்டுகால ஆட்சியில், ஏராளமான வளர்ச்சிபணிகளை, பா.ஜ.,வின், சிவ்ராஜ்சிங் சவுகான் செய்துள்ளார். இவ்வாறு, மோடி பேசினார்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service