ஹொலாந்தேவை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்”

January-24-16

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்தே 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

சண்டீகர் வந்தடைந்த ஹொலாந்தேவை பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களின் ஆளுநர் கப்டன் சிங் சோலங்கி, மற்றும் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்குள்ள புகழ்பெற்ற ராக் கார்டனில் ஹொலாந்தேவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினர்.
‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் இது குறித்து தகவல் வெளியிட்ட பிரதமர் மோடி, “பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேவுக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தோம். இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதோடு, கவுரவமும் அடைகிறோம்” என குறிப்பிட்டிருந்தார்.

சண்டீகரில் மோடி பேசும் போது “இந்தியா வேகமாக வளரும் ஒரு பொருளாதாரம், உங்கள் பொருட்களுக்கான உழைப்பும் சந்தையும் இங்கு உள்ளது. நம் நாட்டின் திறன் மிக்க உழைப்புச் சக்தி, செலவைக் குறைத்து தரத்தை உயர்த்துவதாகும். பிரான்சிடம் ஆதாரங்கள் உள்ளன, நம்மிடம் சந்தையும் தேவையும் உள்ளது.

இங்கு செயல்படும் 400 பிரெஞ்ச் நிறுவனங்கள் இந்தியா குறித்த நேர்மறையான அனுபவத்தை பெற்றுள்ளனர்.

சண்டிகர், நாக்பூர், புதுச்சேரி ஆகியவற்றை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றுவதற்கு பிரான்ஸுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service