ஸ்வாகத்- ஆன்லைனில் பொதுமக்கள் குறைதீர்ப்பு”

February-6-14

”ஜனநாயகத்தில் மக்களின் குரல்தான் முதன்மையானது.. மக்களின் குரலுக்கு மதிப்பளித்தல் என்பதுதான் நல்ல நிர்வாகத்துக்கான முதன்மை தேர்வும் கூட” – நரேந்திர மோடி

(State-Wide Attention on Public Grievance by Application of Technology- மாநிலம் தழுவிய அளவில் தொழில்நுட்ப முறையில் பொதுமக்கள் குறைகளுக்கு தீர்வு காணுதல்)

 

ஸ்வாகத்- இது 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது பொதுமக்களுக்கும் முதல்வருக்கும் நேரடியான தொடர்பை உருவாக்கித் தரக்கூடியது. காந்திநகரில் ஒவ்வொரு மாதத்தின் 4வது வியாழக்கிழமையும் ஸ்வாகத் நாள். அந்த நாளில் அனைத்து துறை அதிகாரிகளும் வருகை தந்து பொதுமக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பர்.

ஸ்வாகத்- தேங்கிக் கிடக்கும் தங்களது குறைகளுக்கு பொதுமக்கள் ஆன்லைன் மூலம் தீர்வு பெற வைக்கும் திட்டம். இது மாதம் ஒரு முறை நடைபெறும். குஜராத்தில் இது மூன்று அடுக்கு முறையில் செயல்படுகிறது. தாலுகா, மாவட்டம், மாநில அளவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அனைத்து பொதுமக்களின் மனுக்களும் மாநில முதல்வரால் பார்வையிடப்படுகின்றன. தேங்கிக் கிடக்கும் பொதுமக்களின் மனுக்களுக்கு பிரச்சனையின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்படும்.

ஸ்வாகத் அமர்வு எப்படி நடைபெறுகிறது – ஒரு கண்ணோட்டம்

ஆன்லைனில் புகார் மனு பதிவு செய்யப்படு ஏற்றப்படும். பின்னர் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் 3 அல்லது 4 மணி நேரத்துக்குள் அதற்கான பதில் அளிக்க வேண்டும்.

அனைத்து சம்பந்தப்பட்ட துறைகளும் மாலை 3 மணிக்கு முன்னதாக பதிலை அனுப்பிவிட வேண்டும். 3 மணிக்கு அனைத்து மாவட்டங்களுடனும் முதல்வர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துவார்.

புகார் மனு கொடுத்தோர் ஒவ்வொருவராக அழைக்கப்படுவார். ஒவ்வொருவரது புகார் மனுவையும் முதல்வர் விரிவாக ஆராய்வார்.

சம்பந்தப்பட்ட துறையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பதிலையும் புகார் கொடுத்த மனுதாரர், மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட வளர்ச்சி அதிகாரி/ காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் முன்னிலையில் முதல்வர் ஆராய்வார்.

புகார் மனு கொடுத்தவர்கள் ஏற்கக் கூடிய, நேர்மையான தீர்வு அதே நாளில் வழங்கப்படும். எந்த ஒரு மனுதாரரும் உறுதியான பதில் இல்லாமல் திரும்பிச் செல்லமாட்டார்கள்.

2001ஆம் ஆண்டு முதல் குஜராத் மாநிலந்தழுவிய வலை அமைப்பான ஜிஎஸ்டபிள்யூஏஎன் செயல்பட்டு வருகிறது. இது மத்திய மாநில தலைமை செயலகத்தையும் அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளையும் இணைத்திருக்கிறது. குஜராத்தின் 25 மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள், நூற்றுக்கணக்கான மாவட்ட அலுவலகங்கள், 225 தாலுகா அலுவலகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட நெட்வொர்க்காக இது செயல்படும். ஸ்வாகத் வழக்குகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நெட்வொர்க் இது.

2011ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி முதல் இது கிராமங்களுக்கும் ”கிராம ஸ்வாகத்” என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்டது. மாநிலத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கக் கூடிய குடிமகனும் கூட தமது பிரச்சனைக்கு உடனடியான தீர்வை பெறுவதற்கு இந்த ஸ்வாகத் ஆன்லைன் திட்டம் உதவியாக இருந்து வருகிறது.

வீடியோ இணைப்பு:

”ஒரு நல்ல நிர்வாகத்துக்கான தேர்வு என்பது மக்களின் குறைதீர்ப்பு முறைதான். மக்களின் குரல்களுக்கு மதிப்பளிக்கக் கூடிய தங்களது பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு காணக் கூடிய ஜனநாயகத்தின் வேராக இருக்கக் கூடியது குறைதீர்ப்பு முறைதான்” என்று நரேந்திர மோடி கூறுவார்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service