1st

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம்”

November-30-15 Social tagging:

பண்டிகை காலத்தில், சென்னையில் பெய்த பலத்தமழை, அங்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல; மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், ஏராளமானோர் இறந்துள்ளனர்; இறந்தவர்களுக்கு என் அனுதாபத்தை தெரிவித்துகொள்கிறேன்.

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு, தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசுசெய்யும். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து, விரைவில் மீளும் வலிமை தமிழகத்துக்கு உண்டு என, நம்புகிறேன். மத்திய அரசின் நிபுணர்குழுவும், தமிழகத்தில் ஆய்வு நடத்தி உள்ளது.

கடந்த அக்டோபர் 31-ம்தேதி சர்தார் வல்லபாய் படேலின் நூற்றாண்டு தினவிழாவில் குறிப்பிட்டபடி, நாட்டின் ஒருமைப்பாடு, நல்லிணக்கத்துக்காக ‘ஒரே இந்தியா; வலிமையான இந்தியா’ திட்டம் அமல்படுத்தப்படும். இதற்கான லோகோ, வடிவமைப்பு, இதில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க என்ன செய்யலாம் என்பதுகுறித்த ஆலோசனைகளை (‘MyGov.com’ என்ற இணைய தளத்துக்கு) மக்கள் வழங்கவேண்டும். குறிப்பாக, நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் இந்ததிட்டத்தின் மூலம் தொடர்புபடுத்துவது எப்படி என்று ஆலோசனை வழங்குங்கள்.

உறுப்பு தானம் பற்றி முன்பு பேசியிருந்தேன். அதன்பிறகு இப்போது உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் பலசாதனைகளை படைத்து வருகின்றனர். உடல் ரீதியாக குறைகள் இருந்தாலும் மற்றவர்களுக்கு ஊக்க சக்தியாக அவர்கள் திகழ்கின்றனர்.

கடந்த 1996-ம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஜாவீத் அகமது ஊனமடைந்தார். அவரால் நிற்கமுடியாது. எனினும், கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்து சிறந்த சேவை செய்து வருகிறார். அத்துடன் மாற்றுத்திறனாளி களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த பல வழிகளில் பணியாற்றி வருகிறார். டிசம்பர் 3-ம் தேதி மாற்றுத் திறனாளிகள் தினம். அன்றைய தினம் இவருடைய பணியை அங்கீகரித்து கவுரவிக்கப்படும். ஜாவீத் அகமது போன்ற மாற்றுத் திறனாளிகள் நமக்கு உந்து சக்தியாக விளங்குகிறார்கள்.
புவி, வெப்ப மயமாவதால் ஏற்படும் பாதிப்புகள், மிக அபாய கரமானதாக உள்ளது. இந்தவெப்பம், மேலும் அதிகரிக்க கூடாது. இதை கட்டுப் படுத்துவதற்கு, அனைவருக்கும் பொறுப்புள்ளது. உலகநாடுகள், இதற்காக கவலைப் படுகின்றன. புவி வெப்பமய மாவதை தடுப்பது குறித்தும்,

அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும், பல்வேறு நாடுகளில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.உலகின் ஒவ்வொரு மூலையி லிருந்தும், ஏதாவது ஒருபேரிடர் குறித்த செய்திகள் வந்தபடி உள்ளன. இந்தபேரிடர்கள், இதற்குமுன், எப்போதும் நிகழ்ந்திராத ஒன்றாகவும், பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளன. நம்நாட்டிலும், சமீபத்தில், தமிழகத்தில் இது போன்ற ஒரு பெரியபாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகள் தான், கரியமில வாயுவை அதிகமாக வெளியிட்டு, சுற்றுச்சூழலுக்கு சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. தட்ப வெப்ப நிலையை பாதுகாப்பதற்கு, இந்தியா போல், மற்ற வளர்ந்துவரும் நாடுகளும் தீவிரமாக போராட வேண்டும். சூரிய ஒளி மின்சாரத்தை அதிகம் பயன் படுத்துவதன் மூலம், புவி வெப்பமயமாவதை தடுக்கமுடியும்.நம் நாட்டில் உள்ள விவசாயிகள், விஞ்ஞானிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை. பல்வேறு விஷயங்களை அவர்கள், சத்தமில்லாமல் செய்கின்றன

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால், புவி வெப்பமயமாதலை தடுக்கலாம். அதற்காக எல்இடி பல்புகளை பயன் படுத்துங்கள்.

இதற்காக, சாமானிய மனிதர்கள்கூட ஏதாவது ஒருவழியில் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். கான்பூரை சேர்ந்த அதிகம்படிக்காத நூர்ஜகான் என்பவர், சூரியசக்தி விளக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியிருக்கிறார். அந்த விளக்குகளை 500 வீடுகளுக்கு மாதம் ரூ.100-க்கு வாடகையாக தந்துள்ளார். இதன்படி, ஒருநாளைக்கு 3-4 ரூபாய்தான் செலவு. ‘உலகத்துக்கு ஒளி’ என்ற இவரது பங்களிப்பு மற்றவர்களுக்கு ஊக்கமாக இருக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி, மாதம் ஒரு முறை, ‘மன் கீ பாத்’ என்ற தலைப்பில், அகில இந்திய வானொலி மூலமாக, நாட்டுமக்களுக்கு உரையாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார்.  14வது முறையாக, வானொலி மூலம், அவர் ஆற்றிய உரை


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service