எல்லாத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்ட ஒரு அரசை துதிபாடி பட்டியல்வாசிக்கிறார், வெறும்கையில் முழம் போடுகிறார் மன்மோகன் சிங் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசியுள்ளார் .
குஜராத் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் . எம்.பி. யும் முக்கிய பிரமுகரும் ஆகிய வித்தல் ரடாடியா அவரது மகனுடன் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக.வில் இணைந்தார்.
அந்த நிகழ்ச்சயில் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது:
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் பிரதமரின் உரையை கவனித்தேன். அவரது உரையில் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியை எட்டுவதர்க்கான திட்டம் ஏதும் இல்லை.
அவரது தலைமையிலான அரசை அவரேதுதிபாடி அதனை பட்டியலிட்டு வாசித்துள்ளார்.இதனால் மக்களுக்கு பயன்எதுவும் கிட்டப் போவதில்லை. வெறும்கையில் முழம் போடுகிறார் பிரதமர்.
ஆனால் அவரோ பாஜக.,வை குறை கூறுவதில் தான் அதிக ஆர்வம்காட்டுகிறார். அவரது அமைச்சரவை சகாக்கள் பார்லியில் வேற்று கூச்சல் மட்டும்தான் போடுகிறார்கள். செயலில்காட்ட திறமையில்லை. எல்லா துறைகளிலும் தோல்வியடைந்து விட்ட ஒரு அரசை வர்ணிப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று மோடி பேசினார்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.