குஜராத் முன்னணி தொழில்மாநிலமாக திகழ்கிறது என்று ஊடகங்கள் அடிக்கடி செய்திகளை வெளியிடுகின்றன. உண்மைதான். நாட்டின் மொத்த முதலீட்டில் 22% குஜராத்தில் முதலீடு செய்யப்படுகிறது. நரேந்திர மோடியின் சிந்தனை மற்றும் தலைமைத்துவத்தால் மட்டுமே இது சாத்தியமானது. அதே நேரத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையும் மேம்பாடு அடைந்துள்ளது.
கிராமப்புற மேம்பாட்டில் குஜராத் ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. கடந்த காலங்களில் நரேந்திர மோடி கையாண்ட வரலாற்று சிறப்புமிக்க அணுகுமுறைதான் இதற்கு அடிப்படை காரணம். பிரசாரகராக, கட்சி ஊழியராக நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் அவர் பயணம் மேற்கொண்டிருக்கிறார். கிராமங்களில் உள்ளூர் ஊழியர்களுடன் தங்கி உணவு உண்டு அவர்களது வாழ்க்கை முறையை அனுபவித்திருக்கிறார். இதனடிப்படையில்தான் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களை அவர் உருவாக்கியுள்ளார். கிராமப் புறங்கள் வீடு கட்டுதல், வேலைவாய்ப்பு, குறைதீர்ப்பு நடவடிக்கைகள், கழிப்பிட வசதி, தூய்மை, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை சாதித்தது அவரது கிராமப்புற மேம்பாட்டு திட்டங்கள்.
கிராமங்களில் தேர்தல் நடைபெறும் காலங்களில் மோதல் போக்கும் கசப்பு உணர்வும் அதிகரித்து வந்தன. இதை ஒழிக்கும் வகையில் கிராம பஞ்சாயத்துகளில் ஒருமித்த கருத்துடன் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தால் அந்த பஞ்சாயத்துக்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 3700 கிராமங்கள் சமரச பஞ்சாயத்துகளாக அறிவிக்கப்பட்டு மொத்தம் ரூ.2306.4 லட்சம் நிதி உதவி அரசால் வழங்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் போதுமான கழிப்பிட வசதி இல்லாமல் பொதுமக்கள் குறிப்பாக பென்கள் அவதிப்பட்டு வந்தனர். இதற்கு முற்றுப் புள்ளி வைக்க தொடங்கப்பட்டது நிர்மல் கிராம் யோஜனா. கடந்த 10 ஆண்டுகளில் 4 ஆயிரம் கிராமங்களில் 4 லட்சம் கழிப்பிடங்கள் கட்டப்ப்ட்டுள்ளன.
கிராமப்புற தூய்மையின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு ஸ்வாச் கிராம் ஸ்வாஸ்த் கிராம் திட்டம் அறிவிக்கப்பட்டது. சுகாதாரத்தையும் தூய்மையையும் கடைபிடிக்கும் கிராமங்களுக்கு நிதி உதவி வழங்குவதுதான் இத்திட்டம். இதேபோல் பஞ்சவடி யோஜனா திட்டம் மூலம் மரம் நடும் திட்டம் ஊக்குவிக்கப்பட்டது.
கிராமப்புறங்களில் ஒவியர்கள், வீடற்ற தொழிலாளர்களுக்காக சர்தார் படேல் ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக இலவசமாக நிலம் வழங்கப்படும். இத்திட்டம் மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்து வருகிறது.
மேலும் இ விஸ்வ கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் கணிணிகள் வழங்கப்பட்டு அகண்டவரிசை இணைய இணைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருவாய் சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவை வழங்கப்படுகின்றன. உள்ளூர் பிரச்சனைகள் உள்ளூரிலே தீர்க்கப்பட வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் ஸ்வாகத் திட்டத்தை குஜராத் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
கரீப் கல்யாண் மேளா, கிரிஷி மகோத்சவ, ஜோதிகிராம் யோஜனா போன்றவையும் கிராம மேம்பாட்டில் பிரதான பங்கு வகிக்கின்றன. இதுவரை 1000 கரீப் கல்யாண் மேளாக்கள் நடத்தப்பட்டு 85 லட்சம் மக்களுக்கு ரூ12,500 கோடியில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கிரிஷி மகோத்சவ் மூலம் வேளாண் உபகரணங்கள், கால்நடைகளுக்கான தடுப்ப்பூசிகள், மண் வள அட்டைகள் வழங்குவது போன்ற அடிப்படையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் ரூ720 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. சுமார் 15.17 லட்சம்விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
ஜோதிகிராம் யோஜனா திட்டம் மூலம் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் கிராமங்களுக்குக் கிடைக்கிறது. இதன் மூலம் கிராம மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைந்துள்ளது.
இத்தகைய திட்டங்களால் நகரங்களுக்கு இடம்பெயர்வோர் எண்ணிக்கையானது 33% ஆக குறைந்து போயுள்ளது.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.