வட்டார அளவிலான நிர்வாக திட்டம்- அப்னோ தாலுகா, வைப்ரண்ட் தாலுகா”

February-6-14

வட்டார அளவிலான நிர்வாகம் (ATVT – Apno Taluko, Vibrant Taluko – அதிகமான நிர்வாகத்துக்காக அதிகாரங்களை பரவலாக்குதல்

வட்டார அளவிலான நிர்வாக திட்டத்தை நரேந்திர தொடங்கி வைத்து உரையாற்றும் வீடியோ காட்சி:

குஜராத் மாநிலம் உதயமாகி 51வது ஆண்டில் நரேந்திர மோடியால் அப்னோ தாலுகா, வைப்ரண்ட் தாலுகா எனும் வட்டார அளவிலான நிர்வாக திட்டம் செயல்படுத்தப்பட்டது. அடித்தட்டு மக்களுக்கும் மக்கள் நலத் திட்டங்களும் வளர்ச்சிப் பணிகளும் சென்றடைய வேண்டும் என்பதுதான் இத்திட்டம். முதலில் 51 தாலுகா எனப்படும் வட்டாரங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தின் தூண்களாக திகழும் 26 மாவட்டங்களிலும் 225 தாலுகாக்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்று நரேந்திர மோடி விரும்பினார். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தாலுகாவுமே சுயசார்புள்ளவையாக பொருளாதார வளர்ச்சியிலும் சமூக மேம்பாட்டிலும் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும். அதிகாரங்களை தாலுகா அளவில் பரவலாக்கம் செய்யும்போது வேகமாக, வெளிப்படையான செயல்பாடுகள் சாத்தியமாகும். இதன் மூலம் மக்கள் நலத் திட்டங்களை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும்.

குஜராத்: அப்னோ தாலுகா- வைப்ரண்ட் தாலுகா

வீடியோ இணைப்பு :

பல்வேறு நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் தாலுகா அலுவலகங்களிலேயே பெற்றுக் கொடுக்கலாம். இதற்காக பொதுமக்கள் மாவட்ட தலைநகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இதன் மூலம் நிர்வாக அமைப்பில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டது. முதலமைச்சர் நரேந்திர மோடியின் இந்த திட்டமானது அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், வல்லுநர்கள் துணையோடு இறுதி வடிவம் பெற்றது. இதன் மூலம் தாலுகா அலுவலகங்கள் முழுமையான உள்கட்டமைப்பு வசதியைப் பெற்றன.

அடுத்த 4 ஆண்டுகளுக்கு இத்திட்டத்துக்காக ரூ27 பில்லியன் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அடிதட்டு நிலையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக குஜராத் அரசின் முன்னோடித் திட்டம் இது.

தாலுகா சேவா சதன் எனப்படும் இது எப்படி செயல்படுகிறது?

அனைத்து துறை அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்கும்.
மக்களை மையப்படுத்தியதாக நிர்வாகமாக முன்னைவிட சிறப்பாக, வெளிப்படையாக அரசு நிர்வாகம் செயல்படும்.
24 மணி நேரமும் பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும.
மின்னணு நிர்வாகம் மூலம் இத்திட்டம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்ப்டும்.
ஒரே இடத்தில் அனைத்து திட்ட விவரங்களும் ஒளிபரப்பாகும்.

இதன் மூலம் இடைத்தரகர்களும் ஊழலும் ஒழிக்கப்படுகிறது. பொதுமக்கள் நேரடியாக தாலுகா ஜன் சேவா கேந்திராவை தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்க முடியும். கல்வி அறிவு பெறாத, குறைவான வருவாய் பிரிவினரின் தேவைகள் இந்த கேந்திராக்கள் மூலம் பூர்த்தி செய்யப்படும். தாலுகா அளவிலான மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் முறைப்படுத்தக் கூடிய திட்டம் இது.

 


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service