நான்குமாநில சட்ட சபை தேர்தல்களில், பாஜக., மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள, லோக்சபாதேர்தலில், பாஜக., வெற்றிபெறுவதற்கான, அற்புதமான துவக்கம்,” என்று பாஜக.,வின் பிரதமர்வேட்பாளர், நரேந்திரமோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது: 4 மாநிலங்களில் நடைபெற்ற சட்ட சபை தேர்தல்களில், மொத்தமுள்ள, 589 தொகுதிகளில், பாஜக., 409 தொகுதிகளில், அதாவது, 70சதவீத இடங்களில், வெற்றிபெற்றுள்ளது. இது, அடுத்தாண்டு நடைபெறவுள்ள, லோக்சபாதேர்தலில், 272க்கும் மேற்பட்ட இடங்களில், பாஜக., வெற்றிபெறுவதற்கான, அற்புதமான துவக்கம்.
“ஊழல் இல்லாத, ஓட்டுவங்கி அரசியல் இல்லாத சூழ்நிலை உருவாகவேண்டும்; நாடு வளர்ச்சியடைய வேண்டும்’ என, மக்கள் விரும்புவதையே, தேர்தல்முடிவுகள் காட்டுகின்றன. பாஜக.,வுக்கு, தெளிவான தீர்ப்பை அளித்ததன் மூலம், தங்களின்விருப்பத்தை தெளிவாகவும், உரக்கவும், மக்கள் தெரிவித்துள்ளனர். பாஜக.,வின் மீது, நம்பிக்கைவைத்த மக்களுக்கு மிகுந்த நன்றி. நாட்டுமக்களின் விருப்பங்களையும், கனவுகளையும் நிறைவேற்ற, பாஜக., தொடர்ந்துபாடுபடும். சத்தீஸ்கரில் வெற்றிபெற்றுள்ள, முதல்வர் ரமண் சிங்கையும் தொலை பேசியில் தொடர்புகொண்டு, வாழ்த்து தெரிவித்துள்ளேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
Image Courtesy : Hindustan Times
Image Courtesy : OneIndia
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.