ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்டிருப்பது போன்று , பிரதமரின்மதிப்பிலும் சரிவு ஏற்பட்டுள்ளது”

August-24-13

ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்டிருப்பது போன்று , பிரதமரின்மதிப்பிலும் சரிவு ஏற்பட்டுள்ளது என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார் .
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிதாக மோர்பிமாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மோடிக்கு சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசியபோது அவர் கூறியது:

ஒருகாலத்தில் இந்திய ரூபாய் மிகுந்த செல்வாக்குடன் இருந்த போது அதைப்பற்றி நிறையபேச்சு இருந்தது. ஆனால் இன்று அதன்குரல் அடங்கி விட்டது. அதேபோல, பிரதமரின் குரலையும் நம்மால் கேட்கமுடியவில்லை. இருகுரல்களும் அடங்கிவிட்டன. இந்திய ரூபாய் இன்று மரணப்படுக்கையில் இருக்கிறது. அவசர சிகிச்சைக்காக அது காத்திருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி பதவிக்கு வந்த போது, ஆட்சிக்குவந்ததும் நூறுநாட்களில் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவோம் என்று கூறினார்கள். இன்று ரூபாயும் ஐ,மு., கூட்டணி அரசும் மதிப்பிழந்துவிட்டது. ரூபாய்மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளதைப்போல, பிரதமரின் மதிப்பிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு நாட்டை தவறானபாதையில் இட்டுச்செல்கிறது. இந்தியாவை அழிவுப்பாதையிலிருந்து மீட்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. ஏன் அழிவுப்பாதையில் இட்டுச் செல்லப்பட்டோம் என்று நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை பதவியிலிருந்து மக்கள் ஏன் விலக்கி வைத்திருக்கிறார்கள் என்று அந்தக்கட்சி சிந்திக்க வேண்டும்.

சுதந்திரம் பெற்ற போது, நம்மை நாமே ஆள்வதையும் நல்லாட்சி அளிப்பதையும் மக்கள் எதிர் நோக்கினார்கள். ஆனால் 60 ஆண்டுகள் கடந்தபின்னரும் நாட்டில் ஏன் நல்லாட்சி இல்லை என்று மக்கள் கேட்கிறார்கள்.

கடந்த பத்து வருடங்களில் குஜராத் வேகமானவளர்ச்சி கண்டு வருகிறது. ஆனால் வளர்ச்சி விகிதத்தைப் பற்றி சிலர் கட்டுக் கதைகளை கூறி வருகிறார்கள்.

குஜராத்தில் வளர்ச்சி இருக்கிறது. இந்தமாநிலம் யாருக்கும் சுமையாக இல்லை. ஆனால் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் குஜராத்பற்றி பொய் பிரசாரம் செய்துவருகின்றனர் என்றார் நரேந்திர மோடி.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service