சத்தீஸ்கரில் நேற்று நடந்த, பா.ஜ., தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, பிரதமர், மன்மோகன் சிங்கை, கடுமையாக தாக்கி பேசினார்.
அம்பிகாபூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முதல்வர், மோடி பேசியதாவது: நம் நாட்டில் உள்ள, இரு சிங்குகளை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். ஒருவர், டில்லியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்; மற்றொருவர், சத்தீஸ்கரில் உள்ள முதல்வர், ராமன் சிங். இருவரும், டாக்டர் பட்டம் பெற்றவர்கள். ராமன் சிங், மருத்துவம் படித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இவரின் நல்லாட்சியில், மாநில மக்கள் செழிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். பிரதமராக உள்ள மன்மோகன் சிங், நிதித் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். அவரின் ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம், நோய் வாய்ப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. அவர் தலைமையின் கீழ், நாட்டின் பொருளாதாரம், உயிருக்குப் போராடும் வகையில், ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள், புதிதாக உருவாக்கப்பட்டன. அப்போது, மத்திய பிரதேசம், பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநில மக்கள் மகிழ்ச்சியில், இனிப்புகள் வழங்கி, மாநிலம் பிரிக்கப்பட்டதை கொண்டாடினர். இரு தரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், காங்., தலைமையிலான மத்திய அரசு, தெலுங்கானா விவகாரத்தை, போர்க்களமாக மாற்றியுள்ளது. இந்த ஒரு விவகாரத்திலேயே, மத்திய அரசின், ஆட்சி செய்யும் திறன், நாட்டு மக்களுக்கு, தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஏழ்மை என்பது, மனம் சம்பந்தப்பட்ட விஷயமே என, ராகுல் கூறுவது, ஏழைகளின் வாழ்வில், “ஆசிட்’ வீசுவதற்கு சமமானது. அவர்களின் வாழ்க்கை துயரத்தை நகைப்புக்கு உள்ளாக்கும் வகையிலானது. இவ்வாறு மோடி பேசினார்.
.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.