ரக்ஷா சக்தி – பாதுகாப்பை பலமாக்குதல்.. உடல், சமூக, பொருளாதார பாதுகாப்பை மேம்படுத்ததுதல்….”

February-6-14

“நாட்டில் மிகவும் பாதுகாப்பான மாநிலம் இன்று குஜராத்தான். சட்டம் ஒழுங்குடன், சமூக – பொருளாதார பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதையும் முக்கியமானதாகக் கருதுகிறோம்,” – நரேந்திர மோடி.

குஜராத்தில் அனைத்து ரீதியிலான பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் போலியோ மற்றும் தொழுநோய் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. எச்ஐபி / எய்ட்ஸ் நோய் தாக்குதல் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மருத்துவத் துறையில் நவீன கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி தாய் – சேய் இறப்பைக் குறைத்துள்ளது அரசு. நிலநடுக்கத்தை முன்னறிவிக்க சீஸ்மாலஜிகல் ஆராய்ச்சி மையமும் உருவாக்கப்பட்டுள்ளது.

2001-ல் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மக்களின் வாழ்க்கைத் தரம், மனோநிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் அபாரமானவை. சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், குஜராத்தின் சாலைகளில் வன்முறைக்கும் இடமில்லை, ஊரடங்கு உத்தரவுக்கும் அவசியமில்லை.

மனித வள மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, ரக்ஷா சக்தி பல்கலைக் கழகத்தை நாட்டிலேயே முதல் முறையாக குஜராத்தில் ஏற்படுத்தினார் முதல்வர் நரேந்திர மோடி. இந்த பல்கலைக் கழகம் இளைஞர்களை தொழில்முறையில் அணுகும் திறன் மிக்கவர்களாக, நல்ல திறனுள்ள பாதுகாவலர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

புதுப்புது குற்றங்களைத் தடுப்பதற்காக உலகின் அதியுயர் தொழில் நுட்பங்கள், சேவைகளைப் பயன்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது குஜராத். தீவிரவாதம், எல்லை தாண்டும் பயங்கரவாதம் போன்றவற்றை இந்தியா அதிகமாக சந்தித்து வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த குஜராத் அரசு தடய அறிவியல் பல்கலைக் கழகத்தை உருவாக்கியுள்ளது. தேசத்தின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே இந்த காக்கும் சக்தி கொள்கை உருவாக்கப்பட்டது.

மாநிலத்தில் சத்துக் குறைபாடு என்பதே இல்லாமல் ஒழிக்க பால் யோக் திட்டத்தின் கீழ் 40 லட்சம் ஏழைத் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும், பருவப் பெண்களுக்கும் சத்தான உணவும், வைட்டமின் மாத்திரைகளும், ஊட்டச்சத்து மாவும், அயோடின் கலந்த உப்பும் தரமான பாலும் வழங்கப்படுகிறது.

தாய் – சேய் இறப்பு வீதத்தைக் குறைக்கவே சிரஞ்சீவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது அரசு. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள 1000 பெண்கள், 11000 குழந்தைகளை மரணத்திலிருந்து காத்துள்ளது. மருத்துவமனைக்குப் போக முடியாமல் சுமார் 2.5 லட்சம் தாய்மார்கள் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெறுகிறார்கள்.

108 ஆம்புலன்ஸ் சேவை என்பது குஜராத் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். இன்றைக்கு 400 இஎம்ஆர்ஐ ஆம்புலன்ஸ்கள் பணியில் உள்ளன. 400 நடமாடும் நல மையங்களால், 3 லட்சம் பேருக்கும் மேல் பயனனடைந்து வருகின்றனர்.

இந்த 108 ஆம்புலன்ஸ் ஊர்திகளிலேயே 800 பிரசவங்கள் நடந்துள்ளன. 42.5 சதவீதம் பாதுகாப்பான பிரசவத்துக்கு உறுதி தருகிறது இந்த ஆம்புலன்ஸ் சேவை.

இன்றைக்கு பெரும் பிரச்சினையாக உள்ள போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, மிரட்டல் போன்ற குற்றங்களைக் குறைக்க மாநிலத்தின் பெருநகரங்களில் சிசிடிவி காமிராக்களைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது (CCTV-based City Surveillance and Intelligent Traffic Management System -CSITMS).

கடல் வழி தீவிரவாதத்தை ஒழிக்க, கடலோர பாதுகாப்பை மேம்படுத்த 600 பேர் கொண்ட மரைன் கமாண்டோ யூனிட் அமைக்கத் திட்டமிட்டுள்ளது நரேந்திர மோடி அரசு.

இதற்கென 31 எந்திரமயமாக்கப்பட்ட 12 டன் எடை கொண்ட நவீன படகுகள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் மரைன் டைம் போலீஸ் அகாடமி அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தின் கடற்படைக்கு சிறப்பான ஒத்துழைப்பும் தந்து வருகிறது மாநில அரசு.

மனிதகுலம் பாதுகாப்பாக இருக்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிக முக்கியம் என்பது உணர்ந்துள்ளது குஜராத் அரசு. இதற்காக மாற்று வளங்களின் மூலம் ஆற்றல் உற்பத்தி முறையை அதிகம் ஊக்கப்படுத்தி வருகிறது.

சுற்றுச் சூழலைக் காக்கவே சூரிய சக்தி மூலம் 1000 மெவா மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கான பணியை 34 சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு அளித்துள்ளது நரேந்திர மோடி அரசு.

இயற்கை மற்றும் மனிதன் மூலம் ஏற்படும் பேரழிவுகளைக் கட்டுப்படுத்த, தடுக்க பேரிடர் மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தியுள்ளது குஜராத் அரசு. 24 மணிநேரமும் விழிப்போடு இருக்கும் ‘காக்கும் சக்தி’ குஜராத்தை அமைதி தவழும் நிம்மதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் மாநிலமாக மாற்றியுள்ளது!


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service