யார் பிரதமர் என்பது முக்கியம் அல்ல பாஜக. ஆட்சி அமையவேண்டும் என்பதே முக்கியம்”

July-17-13

ஒடிசா சென்றிருந்த குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, பூரியில் ஒடிசா மாநில பாஜக. தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார் அதில் அவர் பேசியதாவது.:-
காங்கிரஸ் மற்றும் ஒடிசாவில் ஆளும் பிஜூஜனதா தளம் கட்சிகளின் ஆட்சியில் நடைபெறும் நிர்வாகசீர்கேடுகள் தொடர்பான பட்டியலை நீங்கள் தயார்செய்துகொள்ள வேண்டும்.

இந்த குறைபாடுகளையும், பாஜக.வின் முக்கியகொள்கைகளையும் விளக்கி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குறைந்தது 10000 வாக்காளர்களுக்கு தொடர்ந்து நீங்கள் எஸ்எம்எஸ். அனுப்பவேண்டும்.

நவீனதொழில்நுட்ப உலகில் நாம் வாழ்கிறோம். கிராமங்களில் இருப்பவர்கள் கூட தற்போது ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ ஆகியவற்றை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்த தொழில் நுட்பத்தை துணையாக்கி கிராம மக்களை சந்திக்க பாஜக.வினர் முயலவேண்டும்.

1990ம் ஆண்டு குஜராத்தில் பாஜக.விற்கு வெறும் 16 எம்எல்ஏ.க்கள் மட்டுமே இருந்தனர். இப்போது அந்தமாநிலத்தை நாம்தான் ஆட்சிசெய்கிறோம். இனியும் செய்வோம். இந்த நிலை ஒடிசாவிலும் ஏற்பட இங்குள்ள தலைவர்கள் உழைக்கவேண்டும்.

பாஜக. சார்பில் பிரதமர் பதவியில் யார் அமரப் போகிறார்கள் என்பது முக்கியமல்ல. மத்தியில் மீண்டும் பாஜக. ஆட்சி அமையவேண்டும் என்பதே முக்கியம். அந்த நோக்கத்தில் நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபடவேண்டும் என்று அவர் பேசினார்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service