மோடி மட்டும் அல்ல ஒவ்வொருவரும் பட்ட கடனை திருப்பிகொடுக்க வேண்டும்”

April-5-13

மோடி மட்டும் அல்ல இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவாங்கியுள்ள கடனுக்கு பொறுப்பாளியாகிறார்கள். அதற்கான, சந்தர்ப்பங்கள் வரும்போது, இந்தியாவிற்கான கடன்களை திருப்பிகொடுக்க வேண்டியது நமது கடமையாகும் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.
காந்தி நகரில் நடந்த ஒரு புத்தகவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியதாவது; ஒருமருத்துவர் உயிர்களை காப்பாற்றுகிற போது, இந்திய தாய்நாட்டிற்காக பட்டகடன்களை அவர், திருப்பிகொடுக்கிறார். அதே போன்று ஒரு ஆசிரியர், சிறந்தமுறையில் கல்வி கற்பிக்கிற போது தாய் திருநாடு பட்டகடன்களை அடைக்கிறார். ஒவ்வொருவரும் கடன்களை திருப்பிகொடுத்தாக வேண்டும். இந்தியத் தாய் திருநாடு, அதற்கான ஆசிர்வாதங்களையும், வாழ்த்துக் களையும் வழங்கும் என நான் நம்புகிறேன்.

இன்றைய பொருளாதார பிரச்சினைகள் பற்றிய விவாதத்தில் நம் நாடு ஈடுபட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற, புதிய தொழில் போட்டிகள் தொடங்கியிருக்கின்றன. நாட்டில் முன்னேற்றத்தை கொண்டு வர அரசியல்விவாதங்கள் நடைபெறுகின்றன. அந்தவகையில், குஜராத்தும் நாட்டு முன்னேற்றத்திற்காக ஒருநிகழ்ச்சி நிரலை கொண்டு வருவதில் பெருமைகொள்கிறது.

இது நாள்வரை நாட்டின் பொருளாதார நிபுணர்களும், மேதைகளும் மட்டுமே இது குறித்து விவாதித்துவந்தனர். ஆனால், இன்று பல்கலை கழகங்களும், ஊடகங்களும், தொழிற்கூட்டமைப்புகளும் விவாதிக்கின்றன. இது வரவேற்க கூடிய ஒருமாற்றமே. நாட்டில் இருக்கும் மாநிலங்களிடையே தொழிற் போட்டி ஏற்பட்டுள்ளது. நேர்மறையான இந்தபோட்டியின் மாற்றத்தை நான் வரவேற்கிறேன். என்று அவர் பேசினார்.

 


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service