மோடியின் திட்டமிட்ட வாழ்க்கை”

April-27-14

மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிப்பு வந்தது முதல், பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாள் ஒன்றிற்கு சுமார் 12 மணி நேரம் 2000 முதல் 3000 கி.மீ., வரையிலான தூரம் பயணம் செய்யும் மோடி, 4 முதல் 5 பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்.
நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் 63 வயதாகும் குஜராத் முதல்வரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான மோடி, தனது அன்றாட வாழ்க்கையில் கடைபிடித்து வரும் திட்டமிட்டு, அட்டவணையிடப்பட்ட செயல்பாடுகளே நாட்டின் உயர்பதவிக்கு அவர் தகுதியானவர் என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
தினமும் அதிகாலையில் விழிக்கும் மோடி, ஆன்லைனில் செய்திதாள்களை வாசிக்கிறார். பின்னர் யோகா மற்றும் தியானம் செய்கிறார். இதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் அவர் ஒதுக்குகிறார். முதுகுவலியால் அவர் அவதிப்படும் நாட்களில் யோகாவிற்கு பதில் வாக்கிங் செல்கிறார்.


மோடியின் உணவு முறையும் மிக எளிமையானதாகும். எளிமையான குஜராத்தி உணவுகளையே அவர் சாப்பிடுகிறார். மேலும் பழங்கள் அல்லது பச்சை காய்கறி ஜூஸ்களை காலை உணவாக எடுத்துக் கொள்ளும் அவர், பகல் உணவாக அவல், இஞ்சிசாறு கலந்த தேன் ஒரு ஸ்பூன்( உணவு செரிமாணத்திற்காக) எடுத்துக் கொள்கிறார். இரவில் அரிசி கிச்சடி, தயிர், சப்பாத்தி மற்றும் காய்கறிகளையே சாப்பிடுறார்.
மோடி பெரும்பாலும் வெளியில் சாப்பிடுவதில்லை. இதனால் தேர்தல் பிரசாரங்களுக்கு செல்லும் போது அவர் மதிய உணவை தவிர்த்து விடுகிறார். பொதுவாக பிரசாரக் கூட்டங்களி 30 முதல் 50 நிமிடங்கள் வரை பேசும் மோடி, சில நாட்களில் தனது குரலை பாதுகாப்பதற்காக பேசும் நேரத்தை குறைத்துக் கொள்கிறார். தேர்தல் பிரசார பயணங்களின் போது எண்ணெய் மற்றும் கொழுப்பு சத்துள்ள உணவு வகைகளை மோடி தவிர்த்து விடுகிறார். ஹெலிகாப்டர் அல்லது விமானத்தில் பயணம் செய்யும் போது ஸ்நாக்சாக குஜராத்தி சேவ் மற்றும் எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுகிறார்.


விமான பயணத்தின் போதும் மோடி ஓய்வு எடுப்பதில்லையாம். குஜராத் மாநில அரசின் பைல்களை படித்து சரிபார்க்கும் அவர், கட்சி வேலைகள் அல்லது பிளாக்களில் எழுதுவது போன்ற வேலைகளை செய்கிறார்.

நன்றி; தினமலர்


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service