மோடியின் சாதனைகள் உண்மையானவை தானா?அலசி பார்த்தால் அதிகம் புரியும்”

November-3-13

பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின், குஜராத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்கள் குறித்து, பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது உள்ள அரசியல் சூழலில், மோடிக்கும், காங்கிரசுக்கும் இடையே தான் போட்டி என்ற நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில், மோடி குஜராத்தில் சாதித்து உள்ளவற்றை, காங்கிரசின் தேசிய அளவிலான சாதனைகளோடு ஒப்பிட்டு கருத்துக்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மோடியை சாடுபவர் எவரும், அத்தகைய வில்லங்கத்தில் இறங்க மாட்டார்கள் என்பது, தெளிவாகி உள்ளது.ஏனெனில், குஜராத்தில், தொழில், வேளாண், சமூகம் உள்ளிட்ட பல துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், காங்கிரசின் சாதனைகளை விட சிறந்தவை என, புள்ளி விவரங்கள் தெளிவாக தெரிவிக்கின்றன.

தொழில் கலாசாரம்:@@இதை முறியடிக்கும் முயற்சியில், குஜராத்தில் தொழில் கலாசாரம் எப்போதுமே சிறப்பாக இருந்து உள்ளது. அதனால், அந்த மாநிலம் தொடர்ந்துவேகமாக வளர்ந்துள்ளது. இதில் மோடியின் பங்கு ஏதும் இல்லை என்ற, கருத்தை மோடி எதிர்ப்பாளர்கள் முன்வைக்கின்றனர்.அப்படியானால், ராஜஸ் தான் தான் முன்னணி மாநிலமாக இருந்திருக்க வேண்டும். அந்த மாநிலத்தை சேர்ந்த மார்வாடி சமூகத்தினர், சிறந்த தொழில் கலாசாரம் கொண்டவர்கள். ஆனால், அவர்கள், குஜராத்திற்கு புலம் பெயர்ந்து, தொழில் செய்கின்றனர். ஏனெனில், தொழில் செய்வதற்கான சூழல், குஜராத்தில் தான் சிறப்பாக உள்ளது.மேலும், குஜராத் எப்போதுமே வேகமாக வளர்ந்து உள்ளது என்பதும், தவறான கருத்து. இதை, அர்ச்சனா டோலாக்கியா மற்றும் ரவீந்திர டோலாக்கியா என்ற, பொருளாதார வல்லுனர்கள் வெளியிட்டு உள்ள ஆய்வு அறிக்கை உறுதி செய்கிறது.அதன்படி, 1960களில் குஜராத்தின் வளர்ச்சி விகிதம், தேசிய வளர்ச்சி விகிதத்தை விட குறைவாகத் தான் இருந்தது. 1970களில் தேசிய விகிதத்தை விட அதிகமானது. பின், 1980களில், மீண்டும், தேசிய விகிதத்தை விட குறைந்து விட்டது.

வறுமை குறைப்பு:@@இது ஒரு புறம் இருக்க, கிறிஸ்டோபே ஜாபெர்லாட் என்ற, பிரபல அரசியல் ஆய்வாளர், குஜராத்தில் வறுமை குறைப்பில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று, எழுதி உள்ளார். ஆனால், அவர் பழைய புள்ளி விவரங்களை பயன்படுத்தி உள்ளதோடு, தவறான ஆய்வு முறையையும் பயன்படுத்தி உள்ளார் என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.கடந்த, 2004-05ல் குஜராத்தின் வறுமை விகிதம், தேசிய வறுமை விகிதத்தை விட 5.4 சதவீத புள்ளிகள் குறைவாக இருந்தது. 2004 – 05ல் இருந்து, 2011-12 வரையிலான காலகட்டத்தில், குஜராத்தின் வறுமை விகிதம், 15.2 ச.பு.,குறைந்தது. ஏற்கனவே தேசிய விகிதத்தை விட குறைந்து இருந்த குஜராத்தின் விகிதம், 15.2 ச.பு., குறைந்தது மாபெரும் சாதனை. ஒப்பிடுகையில், சமூக முன்னேற்றத்திற்கு முன்னோடியாக கருதப்படும் கேரளாவில், அதே கால கட்டத்தில், வறுமை விகிதம், 12.7 ச.பு., தான் குறைந்தது.

முஸ்லிம்கள் முன்னேற்றம்:@@குஜராத்தில், மொத்த வறுமை விகிதம் குறைந்த அதே நேரத்தில், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் முஸ்லிம்களின் வறுமை விகிதம், மாநில விகிதத்தை விட வேகமாக குறைந்தது. இந்த சாதனைக்காக குஜராத் பாராட்டப்பட வேண்டும்.நானும் (அரவிந்த் பனகரியா), விஷால் மோர் என்ற ஆய்வாளரும், சமீபத்தில் நடத்திய ஆய்வில் இது உறுதியாகி உள்ளது. கடந்த, 2004-05 முதல், 2011-12 வரையிலான காலகட்டத்தில், தாழ்த்தப்பட்டவர்களின் வறுமை விகிதம், 21.8 ச.பு., குறைந்தது. இதனால், தற்போது, தாழ்த்தப்பட்டவர்களின் வறுமை விகிதம், மொத்த வறுமை விகிதத்தை விட, வெறும், 1.4 ச.பு., தான் அதிகமாக உள்ளது. தேசிய அளவில், இந்த இடைவெளி, இன்னும் அதிகம் என்பதை, இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.அதே போல், முஸ்லிம்களின் பொருளாதார நிலையிலும், முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. தற்போது, குஜராத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும், முஸ்லிம்களின் வறுமை விகிதம், 7.7 சதவீதமாக உள்ளது. இது தேசிய அளவில், மற்ற மாநிலங்களை விட குறைவு.நகர்ப்புறங்களின்புள்ளி விவரங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், குஜராத்தில், இந்துக்களின் வறுமை விகிதத்தை விட, முஸ்லிம்களின் வறுமை விகிதம் குறைவு என்று, தெரிகிறது. குறிப்பிட்ட கால கட்டத்தில், கிராமப்புறங்களில் முஸ்லிம்களின் வறுமை விகிதத்தை, 23.3 ச.பு., குறைத்ததன் மூலமும், நகர்புறங்களில், 27.7 ச.பு., குறைத்ததன் மூலமும்,இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது.

குழந்தைகள் நலன்:@@குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறையை குறைப்பதில், குஜராத் முன்னேறவில்லை என்று, பலர் கூறி வருகின்றனர். ஆனால், அவர்கள் பயன்படுத்தும் புள்ளி விவரம், 2005-06ல் வெளியான தேசிய குடும்ப சுகாதார மதிப்பீட்டில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்.சமீபத்தில் வெளியிடப்பட்ட, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் புள்ளிவிவரங்களின் படி, 2006-07ல் இருந்து 2010-11 வரையிலான காலகட்டத்தில், குஜராத்தில், எடை குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை, 32 ச.பு., குறைந்து உள்ளது. இதை மத்திய அரசின் கணக்கு தணிக்கையாளர், தன், 2012ம் ஆண்டிற்கான அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.இது, 2012 வரை, மேலும் 14 ச.பு., குறைந்து உள்ளதாக குஜராத் அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் (இதற்கான முழு புள்ளி விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை).

பாலின விகிதம்:@@ஒரு சில பிரச்னைகளை, குஜராத் அரசு அடையாளம் காணவில்லை எனக் கூறலாம். ஆனால்,அடையாளம் கண்ட பிரச்னைகள் மீது,உடனே நடவடிக்கை எடுத்து உள்ளது. அதற்கு உதாரணம் தான் ஆண், பெண் விகித பிரச்னை.கடந்த, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்த விகிதம், குஜராத்தில் மிகவும் மோசமாக இருப்பதாக தகவல் வெளியானவுடன், பெண் குழந்தைகளை காப்போம் என்ற பிரசாரத்தை குஜராத் அரசு தொடங்கியது. அதன் விளைவாக, 2004-06 காலகட்டத்தில் 1,000 ஆண்களுக்கு 865 பெண்கள் என, அந்த விகிதம் உயர்ந்தது. 2008-10க்குள் அது, 1,000 ஆண்களுக்கு 903 பெண்களாக உயர்ந்ததாக (ஏறத்தாழ 4 சதவீத உயர்வு) மாதிரி பதிவு தொகுதி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதே காலகட்டத்தில், தேசிய அளவிலான உயர்வு 1,000 ஆண்களுக்கு 892 பெண்களில் இருந்து 905 பெண்களாக தான் உயர்ந்தது (ஏறத்தாழ 1 சதவீத உயர்வு தான்).

கல்வி உரிமை:@@இதே போல், கல்வி உரிமை சட்டத்தின் நிபந்தனைகளை அமல்படுத்தினால், ஏழைகளுக்கு பயன் தரும் சிறிய தனியார் பள்ளிகள் பாதிக்கப்படும் என்பதற்காக, பள்ளிகளுக்கு உரிமம் தரும் முறையில், குஜராத் அரசு புதுமையான அணுகுமுறையை கையாண்டது.அதன்படி, கட்டுமான தேவைகளுக்கு 15 சதவீதம் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, தேர்ச்சி விகிதத்திற்கு 30 சதவீதமும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு 40 சதவீதமும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அந்த கணக்கின் அடிப்படையில் உரிமம் வழங்கப்பட்டது. இது சிறு பள்ளிகளை, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஊக்குவித்தது.இதனால், பல மாநிலங்களில் சிறு பள்ளிகள் மூடப்பட்டு வந்த நிலையில், குஜராத்தில் சிறு பள்ளிகள் மூலம் ஏராளமான ஏழைகள் பயன்பெற்றனர்.

பாராட்டத்தக்க சாதனை:@@இந்திய அளவில், சமூக குறியீடுகளை பொறுத்தவரை கேரளா தான் முன்னிலையில் உள்ளது. ஆனால், நெடுங்காலமாக அங்கு சமூக முன்னேற்ற முயற்சி நடந்து வருவதே, அதற்கு காரணம். தமிழகமும், பல குறியீடுகளின் முன்னேற்றத்தில் முன்னிலையில் உள்ளது.ஆனால், சமூக குறியீடுகளில் குஜராத்தின் பாராட்டத்தக்க முன்னேற்றங்களை யாராலும் மறுக்க முடியாது.மோடியை சாடுபவர்களோ, எது சிறந்ததாக உள்ளதோ அதை நல்ல விஷயங்களுக்கு எதிரியாகவும்; எது மோசமாக இருக்கிறதோ, அதை கண்டு கொள்ளாமல் இருப்பதன் மூலம்,தீமைகளுக்கு ஆதரவாகவும் இருக்கின்றனர்.ஆனால், அதுஇனிமேல் நடக்காது.

கட்டுரையாளர் அரவிந்த் பனகரியா, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக பணியாற்றுகிறார். கட்டுரை, பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு, அதிலிருந்து சில பகுதிகள் பிரசுரிக்கப்பட்டு உள்ளன.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service