சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்தியஅரசு தவறாகப் பயன் படுத்துகிறது என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார். வர்த்தக சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை மும்பை விமானநிலையம் வந்தடைந்தார். அங்கு மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு தரப்பட்டது .
தம்மை வரவேற்கவந்த நூற்றுக் கணக்கான ஆதரவாளர்களிடம் பேசிய மோடி, நான் சிவாஜியின் மண்ணுக்குவந்துள்ளேன். சிவாஜியின் இந்தமண் என்னை ஆசிர்வதிக்கும். இங்கே நீங்கள் கூடியிருப்பது மாற்றத்துக்கான அடையாளம். நமதுநாட்டை பொறுப்பற்றவர்கள் கையில் ஒப்படைக்க கூடாது. நாங்கள் நமதுநாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடக்கூடாது. காங்கிரஸ் அரசால் சாமானியமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என்னால் மத்தியில் நல்ல அரசாங்கத்தை நடத்தமுடியும் என்று நிரூபிக்க முடியும். மத்திய அரசு சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன் படுத்துகிறது என்றார்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.