முன்னேற்றத்தில் பங்கேற்பு (சிறப்பு பொருளாதார மண்டலங்களின் தலைநகரம்)”

February-6-14

”பல ஆண்டுகளாக குஜராத் மாநிலம் சர்வதேச பொருளாதாரத்துடன் இணைந்து இருக்கிறது. சர்வதேச தொழில் நிறுவனங்கள் இங்கு செயல்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உலகம் முழுவதும் கிடைக்கின்றன. இன்று நாங்கள் எப்படி சர்வதேச பொருளாதாரத்தில் பிணைந்திருக்கிறோம் என்று பாருங்கள்.. குஜராத்தை சர்வதேச அளவிலான வாழ்க்கை தரத்துக்கும் தொழில் வளர்ச்சிக்கும் ஏற்ற இடமாக முன்னேற்றியிருக்கிறோம்.

2004 ஆம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்தை நடைமுறைப்படுத்திய முதலாவது மாநிலம் குஜராத். சிறப்பு பொருளாதார மண்டலங்களின் வளர்ச்சியானது தொழில்துறை மேம்பாட்டையும் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்களானது குஜராத்தின் பொருளாதார வளர்ச்சியின் மைய அச்சாக திகழ்கிறது.

”எழுச்சிமிகு குஜராத்” என்ற பெயரிலான உலகநாடுகளின் முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநாடானது மிக நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்திக்காக புரிந்து உணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன.

குஜராத்தில் 3 பிரதான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இருக்கின்றன. கண்ட்லா, சூரத், சூரத் ஆடை பூங்கா. இதேபோல் ஒவ்வொரு துறைக்குமான சிறப்பு பொருளாதார மண்டலங்களைப் பற்றிய விவரங்கள் கீழே உள்ள வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது.

வீடியோ இணைப்பு:

குஜராத் அரசானது சிறப்பு முதலீட்டு பிரதேசங்களை உருவாக்குவதில் முழு ஈடுபாட்டுடன் உள்ளது. தோலெரவில் சிறப்பு முதலீட்டு பிரதேசம் உருவாக்கப்பட்டு வருகிறது. அது உருவாகும் போது உலகிலேயெ மிகவும் திட்டமிட்டு கட்டப்பட்ட மிகப் பெரும் நகரமாக திகழும். நகர்ப்புற கட்டமைப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்குமான முன்மாதிரியாக தோலெர சிறப்பு முதலீட்டு பிரதேசம் உருவாகும்.

இத்தகைய சிறப்பு முதலீட்டு பிரதேசத்தை உருவாக்குவதற்காக தனிச்சட்டத்தை 2009ஆம் ஆண்டு உருவாக்கிய முதல் மாநிலம் குஜராத். அற்புதமான உள்கட்டமைப்பு, சமூக அரசியல் சூழல் ஆகியவை சர்வதேச முதலீட்டாளர்களை வெகுவாக குஜராத்தை நோக்கி ஈர்த்து வருகிறது.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள், சிறப்பு முதலீட்டு பிரதேசங்கள் போன்ற முன்னேற்றத்தில் பங்களிப்பு எனும் கொள்கை மூலமாக தனித்துவமான முன்மாதிரியை குஜராத் முன்வைத்திருக்கிறது.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பற்றி விரிவாக அறிய
http://www.vibrantgujarat.com/images/pdf/special-economic-zones.pdf


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service