முதல்வன் அல்ல மக்களின் சேவகன்”

October-10-13

 குஜராத்தின் தவப் புதல்வன் முதல்வராகி 7-அக்டோபர் அன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. தன்னை ஒரு போதும் ஒரு மாநிலத்தின் முதல்வராக எண்ணியதே கிடையாது மாறாக மக்களின் சேவகராகவே தன்னை அர்பணித்துக் கொண்டிருக்கிறார். குஜராத் அரசியல் வரலாற்றில் இது மாபெரும் சாதனை. எந்த ஒரு தலைவரும்

மக்களுக்கான பொது வாழ்வில் ஈடுபட்டு இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து குஜராத் முதல்வராக இருந்தது இல்லை. இந்த 12 வருடங்களில் திரு.மோடி அவர்களின் கீழ் குஜராத் மாநிலம் தொட்ட உயரங்கள் எத்தனை எத்தனை!! தனது அசாத்திய நிர்வாகத் திறனால் தன் மாநிலத்துக்கென்று உலக நாடுகளிடையே தனிப்பட்ட அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

இந்த அருமையானதொரு தருணத்திலே குஜராத் அரசின் மக்கள் நலன் மட்டுமே சார்ந்த சாதனைகளையும், பன்முக வளர்ச்சியையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

பூகம்பத்தின் கோரப்பசி , புயலின் சூறையாட்டம், மின்சாரப் பற்றாக்குறை, வேளாண் மற்றும் தொழிற்துறை இறங்குமுகம், வேலைவாய்ப்பின்மையின் உச்சக்கட்டம், அனைத்திலும் பற்றாக்குறை..இன்னும் எத்தனை எத்தனை கஷ்டங்கள் சவால்கள்…இப்படித் தான் வரவேற்றது நம் குஜராத்தை 21ஆம் நூற்றாண்டு

இப்படியாக பல சவால்களுடன் தொடங்கிய 21-ஆம் நூற்றாண்டை சான்றே நம்பிக்கையுடன் பார்க்கத் தொடங்கினர் அம்மாநில மக்கள். காரணம்..மாற்றம்..ஆம்.. 2001-ஆம் ஆண்டு தொடங்கிய மாற்றம். தங்கள் கனவுகள் நிறைவேற, நம்பிக்கை வெற்றி பெற ஏதோ ஒரு மாற்றம் கண் முன்னே. காரணம் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் அக்டோபர் 7, 2001 ஆண்டு தொடங்கப்பட்ட ‘பஞ்சாமிர்தம்’ திட்டம் . ஆம் அன்று தொடங்கிய வளர்ச்சிப் பயணம் இன்று இதோ தனது 13ஆவது ஆண்டில். மக்களுடன் ஒன்றிப்போன போன நீண்ட நெடிய பயணம்.

மும்பை மாநிலத்தில் இருந்து பிரித்து குஜராத் என்கிற தனி மாநிலமாக உருவாகிய மே-1, 1960 அன்று அனைத்து குஜராத் மக்களும் மிகச் சிறந்த மாநிலமாக உருவாக்கிக் காட்டுவோம் என சபதம் எடுத்துக் கொண்டார்கள். காந்திஜி, சர்தார் படேல், இந்து சாச்சா, பண்டிட் ரவிசங்கர் போன்ற முதுபெரும் தலைவர்களின் வழியைப் பின்பற்றி ஒவ்வொரு குஜராத்தியரும் தங்கள் கனவுகளை நனவாக்க மாநில நலனுக்காக, வளர்ச்சிக்காக தங்களை இன்றுவரை அர்பணித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நீண்ட நெடிய உழைப்பின் பயனாக ஒரு துடிப்பான மாநிலமாக இன்று உலக நாடுகளிடையே ஜொலித்துக் கொண்டிருக்கிறது.

குஜராத் மாநில வளர்ச்சியானது அங்கே வாழும் 6 கோடி குஜராத் மக்களுக்காக என்கிற முனைப்போடு செயலப்டுத்தபடுகிறது. எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் அனைவரையும் மனதில் வைத்தே செயல்படுத்தப் படுகிறது. இத்தகு வளர்ச்சியனால் இந்தியாவே மூக்கில் விரல் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமா உலக நாடுகளும் கூட. மாநில வளர்ச்சியானது தொழில் துறை, விவசாயம் மற்றும் சேவைத்துறை என்று மூன்று அடுக்குகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு துறைக்கும் சம அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது . இத்தகைய முறை வேகமான வளர்ச்சிக்கு உதவுவதோடு சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது தான் சிறப்பிலும் சிறப்பு.

குஜராத்தின் தொழில் துறை வளர்ச்சி உலகின் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமின்றி இன்று பாரத தேச வளர்ச்சியின் உந்து சக்தியாகத் திகழ்கிறது என்றால் அது மிகை அல்ல. நாட்டின் 5% மக்கள் தொகையை மட்டுமே கொண்ட ஒரு சிறு மாநிலம் அதன் சக்திக்கு மீறிய சாதனை புரிவது சிறப்பிலும் சிறப்பு.

மொத்த பாரத தேசத்தின் 98% சோடா சாம்பல் உற்பத்தி, 80% வைரம் பட்டை தீட்டல் மற்றும் ஏற்றுமதி, 75% உப்பு உற்பத்தி, 62% பெட்ரோலிய வேதிமங்கள், 53% கச்சா எண்ணெய் உற்பத்தி, 51% வேதிபொருட்கள், 35% சரக்கு கையாளல், 30% இயற்கை வாயு தயாரிப்பு இப்படி இந்திய தேசத்தையே பிரம்மிக்க வைக்கிறது குஜராத். இதற்கெல்லாம் ஒரே காரணம் அரசின் சுமூகத் தன்மை மட்டுமே. தேடிவரும் எந்த ஒரு முதலீட்டாளருக்கும் தேவையான அனைத்து வகை உதவிகளையும் முகம் சுளிக்காது, எந்த ஒரு அரசியல் நெருக்குதலுமின்றி செய்து கொடுப்பதால் உலக நாடுகளை கடந்த 6 ‘ துடிப்பான குஜராத்’ நிகழ்வுகளின் மூலம் ஈர்த்திருக்கின்றது நமது குஜராத்.

மத்திய அரசு செயல்படுத்தும் DMIC காரிடாரில் 60% பங்கை குஜராத் கொண்டுள்ளது. அதோடு 40% பாதையானது குஜராத் வழிச் செல்கிறது. அதை பயன் படுத்திகொண்ட மாநில அரசு அந்த பகுதிகளில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து முந்திக்கொண்டு இன்று மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. இதன் ஒரு பகுதியாக ‘தோலேரா’ பகுதியில் உலக வியாபார மையத்தை அமைக்கும் பொருட்டு ஒரு நகரத்தையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது குஜராத் அரசு. துறைமுகம், சாலை, மின்சாரம், குடிநீர், உள் கட்டமைப்பு என்று 1லட்சம் கோடிக்கும் அதிக மதிப்பிலான 135-க்கும் மேற்பட்ட திட்டங்களை துவக்கி செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்தும் அரசு மற்றும் தனியார் கூட்டு பங்களிப்போடு செயல்படுத்துவது தான் சிறப்பிலும் சிறப்பு.இது போலவே விவசாயத் துறையிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு மற்ற துறைகளை போலவே முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயப் பழகலை கழகங்களை வேளாண்மை செய்யும் மக்களோடு இணைக்கும் விதாமாக அருமையான முறை நடப்பிலே இன்று குஜராத்தில் இருக்கிறது, அதிலே ‘மண்வள சுகாதார அட்டை’ திட்டமானது மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய பல சீரிய முயற்சியின் பலனாக ஒரு காலத்தில் 90 ஆயிரம் கோடியாக இருந்த வேளாண் உற்பத்தி இன்று 1.11லட்சம் கோடியாக உயர்ந்து நிற்கிறது. 21 லட்சம் பேல் என்கிற நிலையிலிருந்த பருத்தி உற்பத்தி இன்று 1.20 கோடி பேலாக உயர்ந்த அதே வேளையில், 42லட்ச விவசாயிகள் ‘மண் வள சுகாதார அட்டை’ இன்று பெற்றிருக்கிறார்கள். இது மட்டுமா 1.25கோடிக்கும் மேலான கால்நடைகள் ஆண்டு தோறும் நடைபெறும் சுகாதார முகாம்களில் கண்காணிக்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் அளிக்கப் படுகிறது. மொத்த தேசத்தின் வேளாண் வளர்ச்சியானது 3.5% ஆக இருக்கிறது ஆனால் குஜராத்தின் வேளாண் வளர்ச்சியோ 10.7%. முதல் 40 ஆண்டுகளில் விவசாயத்திற்காக கொடுக்கப்ப மின் இணைப்புகள் வெறும் 6.30 லட்சம். ஆனால் கடந்த பத்தே ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட இணைப்புகளின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டும்.300 கோடியாக இருந்த மின் மானியம் இன்று 3000 கோடியில் நிற்கிறது.

458கி.மீ தூரத்துக்கும் மேலாக நர்மதை கால்வாய் பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது. அதோடு 29 மேலும் பல கால்வாய்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக முடிக்கபப்ட்டிருக்கிறது. நீர் மின்சாரத் தயாரிப்புக்காக இதுவரை 35000 கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு இன்று 2160 கோடி அலகுகளுக்கும் அதிகமான மின்சாரம் தயாரிக்கப் பட்டிருக்கிறது.

மக்களுக்காக, மக்கள் சார்ந்த பல் வகை நுணுக்கமான திட்டங்கள் சேவைத் துறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சுகாதாரச் சேவையானது அனைத்து மக்களுக்கும் துரிதமாக, அதே நேரம் சிறப்பாக கிடைக்கும்படி செய்துள்ளது திரு. மோடி தலைமையிலான குஜராத் அரசு. மாநில அளவில் 500 க்கும் மேற்பட்ட அவசர மருத்துவ வாகனகள் செயல்படுத்தப்பட்டு 108 அவசர சேவை மிகவும் சிறப்பாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஊட்டச் சத்துக் குறைபாட்டை போக்கும் பொருட்டு பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அதன் பலனும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 24 மணிநேர மும்முனை மின்சாரம் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படுவதோடு, கல்வித் துறையில் 100% பள்ளி சேர்க்கை, பெண் கல்வியை ஊக்குவிக்கும் பலதரப்பட்ட மக்கள் நலன் சார்ந்த பல தரப்பட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அருமையான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பஞ்சாயத்து அமைப்புகளில் 100% அதிகாரப்பகிர்வை அமல் படுத்திய முதல் மாநிலம் குஜராத்.

தகவல் தொழில் நுட்பத்துறையில் அரசின் முயற்சிகள், செயல்பாடுகள் அளப்பறியது. GSWAN திட்டத்தின் மூலம் 1.5 லட்சம் கி.மீ நீளத்திலான பைபர் இணைப்பானது (Fibe Optic Network) அமைக்கப்பட்டு, அதில் அரசின் அனைத்து செயல்பாடுகளும் கண்கானிக்கப்பட்டு வருகிறது. இது ஆசியாவிலேயே மிகப் பெரிய அமைப்பாகும். GSWAN அமைப்பின் மூலம் திரு.மோடி அவர்களின் நேரடி கண்காணிப்பில் மக்களிடம் இருந்து வரும் புகார்கள் நேரடியாக பெறப்பட்டு அதற்கான தீர்வுகளும் கொடுக்கப்படுகிறது. அதோடு பசுமைத் திட்டத்தின் மூலம் மிகப் பெரும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு சூரிய, காற்று, கால்வாய் படுக்கை மூலம் மின்சாரம் தயாரிப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது,

ஒரு மாநிலத்தின் வளர்ச்சியானது, அது செயல்படுத்தும் மக்கள் திட்டங்கள் எந்த அளவுக்கு வறுமையில் வாடும் கடைக்கோடி மக்களுக்கு போய் சேர்கிறது என்பதை பொறுத்தே அமைகிறது. கிராமப் புறங்களில் 8 லட்சத்திற்கும் மேலான நிலமில்லா ஏழை மக்களுக்கு தேவையான நிலம் ஒதுக்கப்பட்டு வழங்கப் பட்டிருக்கிறது.

வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள நலிவடைந்த 85 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு , 13000 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான உதவிகள் நேரடியாக 1000க்கும் மேலான வறுமை ஒழிப்பு மேளாக்களின் மூலம் இடைத்தரகர்களின் தொந்தரவின்றி கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரூபாய் 15000 கோடி மதிப்பிலான வன்பந்து கல்யாண யோஜனா, ரூபாய் 11000 கோடி மதிப்பிலான சாகர் கேது யோஜனா, நகர வாழ் நலிவடைந்தவர்களுக்காக ரூபாய் 13000 கோடி மதிப்பிலான திட்டம் என்று பலவகையான மக்களுக்கான திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

இவை அனைத்தும் மோடி என்கிற துடிப்பான மந்திரச் சொல் மூலம் நிறைவேறி இருக்கிறது. இவ்வகை பல் துறை வளர்ச்சியானது நம் தேசத்துக்கு மட்டும் முன்மாதிரி அல்ல, இந்த உலகத்துக்கே என்று சொன்னால் அது மிகை அல்ல.

நன்றி தமிழில் ; தர்மராஜ் மணிகண்டன்


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service