இந்த மாநாட்டிற்கு குஜராத் முதல்வர் திரு. நரேந்திர மோடி வந்திருந்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த முன்ணணி விவசாயிகளை கௌரவித்தார். விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்த விவசாயிகள், விவசாயம் மட்டுமல்லாது, விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, நீர் மேலாண்மை, தேனீ வளர்ப்பு, பட்டுப் பூச்சி உற்பத்தி, சமூகக் காடு வளர்ப்பு, புன்செய்/நன்செய் வேளாண்மை, பசுமை அங்காடி (Green house farming), வலை அங்காடி (Net house) மற்றும் இயற்கை விவசாயம் போன்றவற்றில் சிறந்து விளங்குபவராவர். விருதுக்கு தேர்ந்தெடுக்கபட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் 51,000 ரூபாய் பணமுடிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கினார் திரு மோடி அவர்கள். இந்த நிகழ்ச்சியின் போது வந்திருந்த வேளாண் பெருமக்களிடம் உற்சாகமாக மோடி அவர்கள் உரையாடியதை பார்க்க முடிந்தது.
“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.”
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. இந்தத் துன்பங்களை களையத் தான் இந்த சர்வதேச விவசாய முயல்கிறது என்று சொல்லவும் வேண்டுமோ?
விவசாய மாநாட்டிலிருந்து சில நிழற்படங்கள், உங்கள் பார்வைக்கு
நன்றி தமிழில் ; வீரமணி நம்பி
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.