”குஜராத் மக்களின் சட்ட ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண எமது அரசு மூன்று நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. முதலாவது, அனைத்து நீதிமன்றங்களின் பணி நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டோம். அவர்கள் ஒப்புக் கொண்டனர். இரண்டாவது, வார விடுமுறை நாட்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். அதற்கும் அவர்கள் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டனர். மூன்றாவதாக மாலை 5 மணிக்குப் பின்னரும் நீதிமன்றங்கள் இயங்கும் வகையில் உள்கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது. நம்மைப் போன்ற ஏழை நாடுகளில் இத்தகைய உள்கட்டமைப்பான மிகப் பெரிய அளவு செலவினமாகும். இதனால் மாலை நேர நீதிமன்றங்களை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் வகையில் தொடங்கினோம். பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு நீதிமன்றங்களில் ஆஜராக முடியாத பொதுமக்கள் எளிதாக மாலை நேர நீதிமன்றங்களில் ஆஜராகலாம். இதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தையும் பெற்றுக் கொள்ள முடியும். மாலையில் நீதிமன்றங்களிலும் ஆஜராகிவிட முடியும்”- நரேந்திர மோடி.
இது அடிக்கடி சொல்லப்படுகிற ஒன்று.. “ தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்”. இருப்பினும் குஜராத்தில் மாலை நேர நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட பின்னர் வழக்குகள் விரைவாக முடித்து வைக்கப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி நாட்டிலேயே முதலாவது மாலை நேர நீதிமன்றங்களை உருவாக்கியது குஜராத் மாநிலம். 2010ஆம் ஆண்டு மே 18-ந் தேதி வரை இத்தகைய நூற்றுக்கணக்கான மாலை நேர நீதிமன்றங்களில் 6,73,000 வழக்குகள் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மாலைநேர நீதிமன்றங்கள் சாதாரண மனிதனின் பணி நேரத்தை வீணடிக்காமல் உரிய நீதியை பெறுவதை உறுதி செய்துள்ளன. சிறு சிறு வழக்குகள் தீர்க்கப்பட்டு சிக்கலான வழக்குகளில் கவனம் செலுத்தவும் மாலைநேர நீதிமன்றங்கள் உதவுகின்றன.
வீடியோ இணைப்பு
லோக் அதாலத் முறையிலும் குஜராத் மாநிலம் சாதனை படைத்துள்ளது. 10, 780 லோக் அதாலத்துகள் மூலம் 5,42, 380 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு 296.22 கோடி தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலத்தின் மற்றொரு சிறப்பு பெண்கள் நீதிமன்றங்கள். பெண்கள் அமைப்புகள் ஒருங்கிணைந்து பெண்களின் குறைகளுக்கும் வழக்குகளுக்கும் ஆலோசனைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படுகிறது.
“மாலை நேர நீதிமன்றங்களைத் தொடங்கும் முன்பு குஜராத்தில் 45 லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடந்தன. இது தற்போது 18 லட்சமாக குறைந்துள்ளது. 100 மாலை நேர நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. ஒட்டுமொத்த நீதித்துறையுமே கூடுதல் நேரம் பணி செய்கின்றனர்” என்கிறார் நரேந்திர மோடி.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.