மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றாமல், கர்வத்துடன் செயல்படும், காங்., தலைமயிலான மத்திய அரசு, அடுத்த லோக்சபா தேர்தலில், தூக்கி ஏறியப்படும்,” என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், புனேயில், நேற்று நடந்த, பா.ஜ., கூட்டத்தில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசியதாவது: ஜனநாயக நடைமுறையில், அரசாங்கம், மக்களுக்கு கடமைப்பட்டது. ஆனால், மத்தியில், தற்போதுள்ள, காங்., தலைமையிலான அரசு, மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றாமல், கர்வத்துடன் செயல்படுகிறது. இப்படிப்பட்ட அரசை, அடுத்த லோக்சபா தேர்தலில், மக்கள், தூக்கி ஏறிவர். “ஆட்சிக்கு வந்த, 100 நாட்களில், அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்போம்’ என, காங்கிரஸ் கட்சியினர், மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், தாங்கள் கூறியபடி, அவர்கள் நடக்கவில்லை. மொரார்ஜி தேசாய், வாஜ்பாய் போன்றவர்கள்,ஆட்சியில் இருந்தபோது தான், விலைவாசி குறைவாக இருந்தது. மத்தியில் அமையும் அரசு, மக்களின் சேவகராக செயல்பட வேண்டுமே தவிர, ஆட்சியாளர்கள் போல், செயல்படக் கூடாது. தற்போது, நாடு முழுவதும், காங்கிரசுக்கு எதிரான, காற்று வீசுகிறது. இந்த காற்றில், காங்கிரஸ் ஆட்சி, தூக்கி எறியப்படும். எனக்கு, எதிராக, காங்கிரஸ் கட்சி, தவறான பிரசாரத்தை, கட்டவிழ்த்து விட்டுள்ளது. இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.