“யாரோ ஒரு தனிநபருக்காக இந்த அரசை நாம் நடத்தவில்லை. சீர்த்திருத்தம் தந்த வளர்ச்சி இது, நமது சீர்த்திருத்தம் கொள்கை அடிப்படையில் அமைந்தது. அந்த கொள்கை மக்களை மையப்படுத்தி உருவானது” – நரேந்திர மோடி.
மக்கள் சக்தி என்பது மாநிலத்தின் வளர்ச்சியில் மக்களையும் ஒரு அங்கமாகப் பங்கெடுக்க வைப்பதே.
வளர்ச்சியின் பயணத்தில் மக்கள் அனைவரையும் பங்கெடுக்க வைக்கும் நோக்கில் நரேந்திர மோடி எண்ணத்தில் உருவான எல்லோரும், எல்லோருக்காகவும் என்ற மந்திரம்தான் இந்த ‘மக்கள் சக்தி’யின் அடிநாதம்.
தனது சத்பவன மிஷன் மூலம் குஜராத்தின் ஆறு கோடி மக்களுடனும் கைகோர்த்து நிற்கிறார் நரேந்திர மோடி. குஜராத்தின் வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சி என்பதுதான் இந்த சத்பவன மிஷனின் நோக்கம்.
குஜராத்தில் அமைதி, வளர்ச்சியைக் காண மக்கள் சக்தியை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நரேந்திர மோடி உருவாக்கிய இந்த மந்திரம் சரியான விளைவுகளைத் தந்திருக்கிறது.
இந்த முன்மாதிரி மந்திரம் காரணமாக கடந்த பத்தாண்டுகளில் அனைவரின் கவனத்தையும் கவரும் மாநிலமாக திகழ்கிறது குஜராத். ஏதோ இந்தியாவில்தான் சிறந்த மாநிலம் என்றில்லாமல், வளர்ந்து வரும் உலக நாடுகள் அனைத்திலும் முன்மாதிரியாகப் பார்க்கப்படுகிறது குஜராத்.
மக்களை எப்போதும் உதவி பெறுபவர்களாக வைத்திருக்காமல், வளர்ச்சியின் பங்காளர்களாக மாற்றியிருக்கிறார் முதல்வர்.
வீடியோ:
நாட்டிலேயே தொழில் வளர்ச்சியைத் தாண்டி, கிராம மற்றும் நகரப் பகுதிகளில் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது குஜராத்.
மக்கள் சக்தியின் மகிமையைச் சொல்ல இதோ சில விவரங்கள்
‘மக்கள் சக்தி’ என்பது சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் வாழ்விலும் வளர்ச்சி, முகத்தில் புன்னகையை வரவழைப்பதே. ஏழை- பணக்காரன், வலுவுள்ளவன் – வலுவற்றவன் என்ற பேதமின்றி அனைவருக்கும் இந்த வளர்ச்சியில் பங்குள்ளதை உறுதி செய்கிறது ‘மக்கள் சக்தி’
சாத்பவனா விஷன், வஞ்சே குஜராத், ஜ்யோதிகிராம் திட்டம், ஷால ப்ரவேஷோத்சவ், கன்யா கேலவாணி, குணோத்சவ், சின்டின் மற்றும் காமயோகி அபியான், சிரஞ்சீவி யோஜ்னா, – பால் சாகர் & இ மம்தா சாப்ட்வேர் சிஸ்டம், ஹெல்த் ட்ரைவ்ஸ் & ஸ்கூல் ஹெல்த் செக்கப்ஸ், கேல் மஹாகும்ப், கரீப் கல்யாண் மேளாஸ், ஸ்கோப் பார் எஜுகேஷன், குஜராத் நாலெட்ஜ் சொசைட்டி, வுமன் எம்பவர்மெண்ட் (சக்தி மண்டல்ஸ், மஷன் மங்களம் இன்ன பிற..), வன்பந்து யோஜனா, சாகர்கேது யோஜ்னா, சாஹரி கரீப் சம்ருத்தி யோஜனா, அந்த்யோதய் யோஜனா, அவாஸ் யோஜனா, அப்னோ தாலுகோ வைப்ரன்ட் தாலுகோ, நிர்மல் குஜராத், ப்யூர் ட்ரிங்கிங் வாட்டர், 108 அவசர ஊர்தி, ஸ்வாகத் கிரிவென்ஸ் செல் ஆன்லைன், க்ருஷி மஹோத்சவ், வன் மஹோத்சவ், உள்கட்டமைப்பு, வைப்ரன்ட் குஜராத் வர்த்தக முனைப்புகள், குளோபல் வார்மிங் முன் முயற்சிகள்… போன்றவற்றின் மூலம் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி மக்களை வலுவானவர்களாக்கியுள்ளது குஜராத் அரசு.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.