ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசை மக்கள் வெறுப்பதாகவும், அரசுமீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் காந்திநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அவரின் 64வது பிறந்தநாளை முன்னிட்டும், தன்னை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் இந்தகூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் பேசிய மோடி, மக்கள் எனக்கு அளித்திருக்கும் நல்லாசி ஒருபோதும் வீணாகிவிடாது. மக்களின் ஆசிகள் என்னுடைய பணியை வலுப்படுத்தும். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று எனது தாயாரின் ஆசி கிடைத்ததே மிகப் பெரிய பாக்கியம்
மக்கள் மத்திய அரசு மீது வெறுப்பு கொண்டுள்ளனர் . எப்போது தேர்தல் வரும் என மக்கள் ஆவலாக காத்திருகின்றனர். இது முன்னதாகவே தேர்தல் வரும் என்பதை காட்டுகிறது , தாங்கள் தேர்வுசெய்த அரசை மக்களே வெறுப்பதை முதல் முறையாக இப்போதுதான் இந்தியாவில் பார்க்கிறேன்.
இதே செப்டம்பர் 17-ந் தேதிதான் ஹைதராபாத்தை நிஜாம் மன்னர்களிடம் இருந்து சர்தார் வல்லபாய் படேல் விடுவித்தார். இந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் .
எனது பிறந்தநாளை தொழிலாளர்களுக்கு அர்ப்பணிக்க ஆசைப்படுகிறேன். நாட்டின் தொழிலாளர்கள் அனைவரையும் மேம்படுத்தும் நாளாக இந்த நாள் இருக்கும் என்றார்.
நரேந்திர மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு தொகுதியிலும் முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினரை உறுப்பினர்களாக சேர்க்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. டெல்லியில் இன்று மாலை பெரிய பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.