மக்களவை எவ்வளவு முக்கியமோ அதே போன்று கிராம் சபா அமைப்பும் முக்கியமானதே”

August-20-13

நரேந்திர மோடி காந்திநகர் மகாத்மா மந்திர் உள்ள பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய மாநாட்டில் பேசினார் . கிராமங்களில் வளர்ச்சிக்கு மகாத்மா காந்தியின் தொலைநோக்கு பார்வை 100% தொடர்புடைய என்றார் நரேந்திர மோடி

மக்களவை நாட்டுக்கு எவ்வளவு முக்கியமோ அதே போன்ற கிராம் சபா அமைப்பு அனைத்து கிராமத்திற்கு முக்கிய மனதாக இருக்க வேண்டும்: என்றார் நரேந்திர மோடி

காந்திஜ்யின் தொலை நோக்கு பார்வையை அனைத்து கிராமங்களிலும் செயல் படுத்த பட்டு இருந்தால் ,இன்று யாரும் கிராமங்களை விட்டு நகர்புறங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்க மாட்டார்கள் என்று நரேந்திர மோடி அவர்கள் கூறினார்

பஞ்சாயத்து ராஜ் முறையை குஜராத் கிராமங்களில் வலு படுத்த குஜராத் அரசு மேற்கொண்ட முயற்சிகள் பற்றி நரேந்திர மோடி பேசினார்

கிராமங்களில் தூய்மை மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட வேண்டும் என்றார் நரேந்திர மோடி

வளர்ந்து வரும் கிராமங்களில் வாழும் மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு அவற்றை நிறை வேற்றம் செய்யும் பொறுப்பு பெரிய அரசாங்கங்கள் களுக்கு பொறுப்பு உள்ளது: என்றார் நரேந்திர மோடி

தேசத்துக்கு லோக்சபா போல் கிராமத்துக்கு கிராம சபா முக்கியம் : பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி தேசிய மாநாட்டில் முதல்வர் மோடி பேச்சு.

சனிக்கிழமை 17 ஆகஸ்ட் காலை பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய மாநாடு தொடக்கத்தில் பேசிய திரு நரேந்திர மோடி அவர்கள் கிராம் சுயராஜ்ஜியத்திற்காக மகாத்மா காந்தியின் தொலைநோக்கு பார்வை கிராமங்களின் வளர்ச்சிக்கு இன்று 100% பொருத்தமான வை என்று கூறினார்.

தேர்தலில் ஆதாயம் பெறும் நோக்கில் போடும் திட்டங்கள் மூலம் அல்லது தொண்டு நிறுவனங்களின் மூலம் தங்கள் தேவைகளை நிறைவேற்றி கொள்ளும் நிலை இல்லாமல் கிராம மக்கள் அவர்களது சொந்த காலில் நின்று அவர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி கொண்டு கிராமத்தை முன்னேற்ற வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

லோக்சபா தேசத்துக்கு திட்டம் போடுவது போல் கிராம சபைகளும் கிராமத்துக்கான திட்டமிடுவதால் லோக்சபா போன்று கிராம சபையும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை நாம் பலப்படுத்த வேண்டும். கிராமங்களில் வளர்ச்சி ஏற்படும் வகையில் சரியான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். மாநில தலைநக ரில் முதல்வர் ,அதிகாரிகள் உட்கார்ந்து கிராமங்களின் தேவைகளை பற்றி முடிவெடுக்க முடியாது என்று கூறி, நமது கிராமங்களின் அபிவிருத்தி பொருட்டு கிராம சபைகள் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மோடி அவர்கள் பேசினார்.

பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய மாநாடு காந்தி நகர் காந்தி மந்திரில் நடைபெற்றது. மாநாட்டில் 26 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளாக 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மோடி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டதோடு இந்த மாநாடு “Mini-Rural India” என்றார்.

பஞ்சாயத்து ராஜ் 50 ஆண்டுகள் கொண்டாட்டங்களின் மூலமாக இந்த மாநாட்டுக்கான யோசனை வந்தது என்று கூறினார். நிகழ்ச்சியில் சர்தார் வல்லபாய் படேல் மற்றும் பல்வந்த் மேத்தா அவர்களுக்கு, குஜராத்தில்முதல் முதலமைச்சராக இருந்து பஞ்சாயத் ராஜ் மூலம் அடித்தளமிட்டு சென்றதற்காகவும் மரியாதை தெரிவித்தார். ஸ்ரீ மோடி நிபுணர்கள் திறம்பட பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சியை வலுப்படுத்தும் வழிகளில் இந்த மாநாடு ஆழ்ந்த நோக்கம் கொண்டது மேம்போக்கானது அல்ல என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஸ்ரீ மோடி பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி வலுப்படுத்துவதில் குஜராத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி ஒரு விரிவான விளக்கத்தை கொடுத்தார். ரூ.5 லட்சம் வரைக்கான திட்டங்களுக்கு எந்தவிதமான மேலதிகாரிகளின் யோசனை, முடிவுகளுக்கு காத்திராமல் கிராம பஞ்சயத்துக்களே முடிவெடுக்கும் வகையில் இங்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பல கிராமங்களில் பழங்குடியினர் மற்றும் மலைவாழ்மக்கள் வழிகாட்டுபவர்களாக தலைவர்களாக திகழ்கின்றனர் என்று உதாரணங்களோடு எடுத்துரைத்தார். அவர் கிராமங்களின் வளர்ச்சியில் சமூகம் பங்காற்றியது குறித்தும், நிலநடுக்கம் ஏற்பட்டபிறகு பாதிக்கப்பட்ட கட்ச் மாவட்ட பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் புனரமைக்கப்பட்டதில் மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு சமூகம் அளித்த பங்கு குறித்தும் உதாரணங்களுடன் பேசினார்.

SAMRAS கிராம் யோஜனா பற்றி பேசினார். தான் 7 அக்டோபர் 2001 அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றதாகவும் ஜெயப்ரகாஷ் நாராயணன் பிறந்த நன்னாளில் செய்தியாளர் கூட்டத்தில் முதன் முதலாக பேசியதாகவும் கூறினார். அப்போது கிராம சபா மற்றும் SAMRAS கிராம யோஜனா என்ற இரு திட்டங்களை வலுப்படுத்துவதற்கான முடிவுகளை அறிவித்தேன். லோக்சபா மற்றும் விதான் சபா தேர்தல் போலில்லாமல் பஞ்சாயத்து தேர்தல்களை கிராமம் கிராமமாக பிரித்து நடத்த வேண்டும், அந்த யோசனையின் அடிப்படையில் அமைக்கப்பட்டதுதான் SAMRAS கிராம யோஜனா திட்டம்.

SAMRAS கிராம ஜோஜனா திட்டத்தை அறிமுகபடுத்தியபோது பலவிதமான விமர்சனங்கள் வந்தன, இத்திட்டம் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றார்கள், பெண்களுக்கான இட ஒதுக்கீடு பேசி கொண்டிருக்கையில் 100 சதவீத பங்களிப்பும் பெண்கள் தரப்பிலிருந்து வரும் ஜனநாயகமாக ஏன் இருக்கக்கூடாது? என்ற நோக்கில் ஆரம்பித்த இந்த திட்டம் இன்று கிராமங்கள் தன்னிறைவு பெற்று திகழ காரணமாக உள்ளது. அந்த பகுதிகளின் தேவை என்ன? என்பதை பெண்கள் அறிவார்கள் என்பதால் வளர்ச்சி வேகமாக உள்ளது. அதன் மூலம் பெண்கள் சம உரிமையுடன் வாழ்கின்றனர்.

ஸ்ரீ மோடி பவன் கிராம் மற்றும் குஜராத் அரசின் Tirth கிராம் முயற்சிகள் பற்றி பேசினார். அவர் E -கிராம் விஸ்வ கிராம் யோஜனா பற்றி பேசியதோடு குஜராத் கிராமங்களில் வளர்ச்சி பயணம் கொள்ள ஒட்டுமொத்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். ஸ்ரீ மோடி குஜராத் விலங்குகள் சரணாலயம் குறித்து பேசியதோடு காந்திநகர் அருகே விலங்கு சரணாலயத்தை பார்வையிட மாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஸ்ரீ மோடி Jyotigram யோஜனா பற்றி பேசியதோடு ம.பி. அரசின் அடல் ஜோதி அபியான் திட்டத்தை பாராட்டியுள்ளார்.

கிராமங்களில் தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். “சுகாதாரத்துக்கு பிறகே ஆலயம்” என்று ஒரு முறை நான் கூறி மக்கள் போதுமான சுகாதார வசதிகள் உருவாக்கி கொள்ள முக்கியத்துவம் தர வேண்டும் என்று பேசினேன் என்றார். ஸ்ரீ மோடி கடந்த காலத்தில் உற்பத்தி துறை மட்டுமே நகரங்களை சுருக்கியது, அங்குதான் அனைத்து தொழில்களும் இடத்தை அடைத்து கொண்டன, ஆனால் இந்த நிலை மாற வேண்டும், தொழில்கள், குறிப்பாக குடிசை தொழில்கள் கிராமங்களில் பரவ வேண்டும் வேண்டும் என்று உறுதிப்பட கூறினார்.

ஸ்ரீ மோடி மேலும் பண்டையகால வருவாய் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும், கிராம புறங்களில் கட்டுமானப் பணிகளை மேம்படுத்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஸ்ரீ மோடி உண்மையான சீர்திருத்தம் என்பது கிராமங்கள் சீரமைக்கப்படுவதே தவிர பணம் படைத்தல் அல்லது பெரிய நிறுவனங்களின் வளர்ச்சி அல்ல என்றார். அவர் வளர்ந்து வரும் சமூகமும் அரசும் கிராம மக்களின் எண்ணங்களை புரிந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

முன்னதாக பேசிய ஊராட்சி அமைச்சர் திரு Shri Bhupendrasinh Chudasama ,மத்திய பிரதேச அரசின் டாக்டர் அருணா சர்மா (ஐஏஎஸ்) தொடர்ந்து பேசினார்கள் ஸ்ரீ மோடி Sarpanchs நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்க பட்டதை பாராட்டி மின் புத்தக வடிவில் மூன்று புத்தகம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் சர்தார் படேல் பற்றிய ஒரு குறுகிய வீடியோ திரையிடப்பட்டது .  நன்றி  தமிழில் ; பாலமுருகன்


 


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service