பொருளாதார சுதந்திரத்தில் இந்தியாவின் முதன்மை மாநிலம் குஜராத்”

August-22-13

பொருளாதார சுதந்திரம் என்ற வகையில் இந்தியாவின் முதல் மாநிலமாக குஜராத் உள்ளது என்று பொருளாதார சுதந்திர வகையில் இந்திய மாநிலங்களின் தரவரிசை 2012″ என்ற தலைப்பில் வெளியான ஒரு அறிக்கையில் முடிவு செய்யப்பட்டது.

இந்த அறிக்கை நன்கு அறியப்பட்ட கொள்கை ஆராய்ச்சி மையத்தின் பிபேக் தேப்ராய், லவீஷ் பண்டரி (இன்டிகஸ் அலைய்டிக்ஸ்), சுவாமிநாதன் எஸ் ஐயர் (கேட்டோ பயிலகம்) மற்றும் அசோக் குலாத்தி (விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்குமான ஆணைக்குழு, இந்திய அரசு) ஆகியோரால் தயார் செய்யப்பட்டது.

“குஜராத் இந்திய மாநிலங்களில் பொருளாதார சுதந்திரம் என்ற வகையில் முதல் மாநிலமாக திகழ்கிறது” என்று குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்தார். இந்த அறிக்கை  உலகளாவிய லிபர்டி மற்றும் சுபீட்சம், ஹாங்-காங்கில் உள்ள, கேட்டோ பயிலகம்  பிரெடெரிக்-நாமன் ஸ்டிப்தங் உடன் இணைந்து புதன் கிழமை அன்று வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையின் நோக்கம் இந்தியாவினுள் பொருளாதார சுதந்திர நிலையை அளவிடுவதாகும்.உரிய தகவல்களை கொண்ட இருபது மாநிலங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆதலால் ஒரு அனுபவம் சார்ந்த உறவை, பொருளாதார சுதந்திரம் மற்றும் செழிப்பு, வளர்ச்சி மற்றும் மேம்பாடுகள், ஆகியவற்றுக்கு இடையே மனித நன்மையை உணர்த்தக்கூடிய மொத்த அறிகுறிகளாக  நிறுவ முடிந்தது.

பொருளாதார சுதந்திர குறியீட்டு மூன்று காரணிகளை அடிப்படையாக கொண்டது – அரசின் அளவு, சட்ட அமைப்பு மற்றும் சொத்துரிமை பாதுகாப்பு, மற்றும் வணிகம் மற்றும் தொழிலாளர் கட்டுப்பாடு. இந்த குறியீட்டு பொருளாதார சுதந்திரம் மற்றும் குடிமக்களின் நலனுக்கு இடையேயான உறவை காட்டுகிறது.

இந்தியாவில் பொருளாதார சுதந்திரம் கொண்ட மாநிலங்கள் மேலும் பல நல்ல விஷயங்களை கொண்டுள்ளது அதாவது ஒரு தனி நபருக்கான அதிக வளர்ச்சி, வேலையின்மை நிலை இந்த மாநிலங்களில் குறைவாக உள்ளது, சுகாதார நிலைகள் சிறப்பாக உள்ளது மற்றும் இந்த மாநிலங்கள் அதிக முதலீடுகளை ஈர்க்கிறது.

“குஜராத் ஒரு குறிப்பிடத்தக்க உயர்வை காட்டுகிறது… பொருளாதார சுதந்திரத்தில் 2005 இல் 5 ஆம் இடத்தில் இருந்து இன்று இந்தியாவின் முதல் இடத்திற்கு உயர்ந்துள்ளது. எனினும் வேறு சில மாநிலங்கள் பின்னோக்கி நகர்ந்திருந்தாலும், மிகவும் மோசமான செயல்பாட்டை கொண்டிருந்தது ஜார்கந்த் மாநிலமாகும். பீகார் கணிசமாக முன்னேறியிருந்தாலும் அட்டவணையில் கடைசியாக உள்ளது” என்று அறிக்கை கூறுகிறது.

 

“இந்த மதிப்பீடுகள் குஜராத் தன்னுடையை இழிந்த கடந்த கால வகுப்புவாத வன்முறை மற்றும் அழிவுகளை பின்னுக்கு தள்ளிவிட்டுவிட்டது, மற்ற மாநிலங்கள் வாழ்க்கை பாதுகாப்பு மற்றும் சொத்து ஆகியவற்றை வேண்டிய முறையில் மேம்படுத்த முடியவில்லை என்பதை பிரதிபலிக்கிறது,” மேலும் அந்த அறிக்கையில் குஜராத் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை தொழிலாளர் ஒழுங்குமுறையில், மற்றும் வணிக குறியீட்டு மதிப்புகளில் கண்டிருப்பது மட்டும் இல்லாமல் அதன் மிக சிறந்த நிலையை தொடர்ச்சியாக தக்க வைத்து கொண்டுள்ளது.

“ஒட்டுமொத்த மதிப்பீடுகள் என்பது இந்த அறிக்கையின் படி எளிய சமமான மூன்று மதிப்பெடுகளின் சராசரியாகும். இந்த மதிப்பீடுகளில் முதல் மூன்று மாநிலங்களாக இருப்பது குஜராத், தமிழ் நாடு மற்றும் மத்திய பிரதேசம் ஆகும்.  சிறந்த சட்ட மற்றும் கட்டுப்பாட்டு செயல்பாடுகள் மூலம் குஜராத் மாநிலத்தின் மதிப்பீடு கணிசமான முன்னேற்றத்தை அடைந்தது,” என்று அறிக்கை கூறியிருப்பது குறிப்பிடதக்கது. முதல் 3 மாநிலங்களில் குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் பாரதிய ஜனதா கட்சி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்யும் மாநிலங்கள் என்பது குறிப்பிட தக்கது. மத்தியில் 10 ஆண்டுகளாக பதவியில் இருந்தும் தாம் ஆளும் மாநிலத்தில் ஒன்றை கூட இந்த பட்டியலில் கொண்டு வர இயலாமல் இருக்கும் காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் போல லாயக்கற்ற கட்சி என்பது மீண்டும் ஒருமுறை நிரூபித்து சாதித்து கட்டியுள்ளது.

 

– எஸ்.ஜி.சூர்யா.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service