பொதுக் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது, எனது ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதலாகும்.”

May-9-14

நெருக்கடிக்கு கீழ்ப் படிந்தும், தமக்கு எதிராக பாரபட்சமாகவும் தேர்தல் ஆணையம் செயல் படுகிறது என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார்.
வாராணசி தொகுதியில் இருந்து 12 கிமீ. தொலைவில் உள்ள ரோஹணியா நகரில் வியாழக்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:

வாராணசியில் எனது பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது, தாய்-மகன் (சோனியா-ராகுல்) அரசின் நாடகமாகும்.

எனது பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பாதுகாப்பு நலனை அவர்கள் காரணமாக கூறுகிறார்கள். வாராணசியில் எனதுகூட்டத்தை நடத்த ஒரு வேளை பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் கூட, ஒரு நபருக்கு (மோடி) தாய்மகன் அரசால் பாதுகாப்பு தர முடியாதா?

உள்ளூர் நிர்வாகத்தினரும், தேர்தல் அதிகாரிகளும் வாராணசியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறுவதை நம்பமுடியாது. அங்கிருந்து 12 கிமீ. தூரத்தில் உள்ள இந்த ரோஹணியா பகுதியில் அப்படி எந்த அச்சுறுத்தலையும் காணமுடியவில்லை.

மத்திய உள்துறை மற்றும் நிதி அமைச்சர்களும் “மோடிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதும்இல்லை’ என்று கூறியுள்ளனர். எனது பொதுக் கூட்டத்துக்கு அனுமதி தர மறுத்ததன் மூலம், நெருக்கடிக்கு கீழ்ப்படிந்து தேர்தல் ஆணையம் பாரபட்சமாகச் செயல்படுவது தெரியவருகிறது.

இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் ஆத்மபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அந்த அமைப்பு யாருடைய நெருக்கடிக்குப் பணிந்து செயல்படுகிறது என்பது எனக்குத்தெரியாது.

காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க மக்கள் முடிவெடுத்து விட்டனர். அதனால் தேர்தல் ஆணையத்தால் அக்கட்சியை வெற்றிபெற வைக்க முடியாது. எனது பேச்சு அவ்வளவு முக்கியமானதல்ல. ஏனெனில் எனது மௌனத்தின் மூலமும் மக்கள் நான் கூறவேண்டிய தகவலை உணர்ந்து விடுவார்கள்.

Shri Narendra Modi addresses rallies in Uttar Pradesh

நாட்டுக்காக உயிர்துறக்கவும் நான் தயாராக இருப்பதால், எனது பாதுகாப்பு குறித்து அரசு கவலைப்படத் தேவையில்லை.

பொதுக் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது, எனது ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதலாகும். மற்ற வேட்பாளர்களுக்கு உரிய உரிமைகளை நான் பெறக்கூடாதா? கங்கைத் தாயை (கங்கை நதி) சந்திக்கவும் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனினும், கங்கைபூஜை மேற்கொள்வதற்காக நான் விரைவில் வாராணசி வருவேன். நான் கடந்த 14 ஆண்டுகளாக குறிவைக்கப்பட்டு வருகிறேன். சிபிஐ அமைப்பே என்னை துரத்தியது என்றார் மோடி.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service