பா.ஜ.க.,வின் நாடாளுமன்ற குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி இடம் பெறுகிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது.
இந்திய மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுத்திருக்கும் நரேந்திரமோடி தான் லோக் சபா தேர்தலில் பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த படவேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க.,வின் நாடாளுமன்ற குழுவில் மீண்டும் மோடி இடம் பெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத படுகிறது.
குஜராத்தில் தொடர்ந்து 3 முறை பா.ஜ.க., ஆட்சியை தக்கவைத்து மோடியும் சாதனை படைத்துள்ளார் . பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வாய்ப்பு இருப்பதால் மோடிக்கு நாடாளுமன்ற குழுவில் மீண்டும் இடம் கொடுக்க படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.