பாஜக.,வின் கூட்டம் நாட்டை காப்பாற்ற நடந்தது, காங்கிரசின் கூட்டம் கட்ச்சியை காப்பாற்ற நடந்தது”

January-21-14

டில்லியில் நடந்த பாஜக., தேசியகவுன்சில் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார் . அவர் தனது பேச்சை தொடங்குவதற்கு முன்பாக பாரத் மாதா கீ,., பாரத் மாதா கீ என்று உரத்த குரலில் கோஷம் எழுப்பினார் பின்னர் அவர் பேசியதாவது: கடந்த 2 நாட்களாக நாம் இந்தநாட்டின் அரசியல் சூழலை ஆராய்ந்துள்ளோம். வரும் 2014தேர்தல் வித்தியாசமானதாக இருக்கும். நல்லமாற்றத்தை பார்க்க முடியும் .
நாடு உரிய தலைமை இல்லாமல், உரியகொள்கைகள் இல்லாமல் இருந்து வருகிறது. இதுபோன்ற நிலையை நாம் இது வரை பார்த்தது இல்லை. கடந்த 2 நாட்களாக காங்கிரஸ்கட்சி கூட்டம் நடந்தது. இது இந்தகட்சியை காப்பாற்ற நடந்தது. ஆனால் நாங்கள் இந்நாட்டை காப்பாற்ற இங்கு

முயற்சித்துவருகிறோம். சமீபத்திய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்ப்பாளர் யார் என்று சொல்லவில்லை. இதனால் காங்கிரஸ் ., தொண்டர்களே மன உளச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். பிரதமர்வேட்பாளரை எதிர்பார்த்த இவர்களுக்கு 3 சிலிண்டர் தான் கிடைத்தது. பிரதமர் வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸ் அஞ்சுகிறது. இதற்கு தோல்விபயமே ! நான் காங்கிரசை கேட்கிறேன், ராஜிவ் காந்தியை பாராளுமன்ற போர்டு குழுவா பிரதமராக தேர்வுசெய்தது ?

என்னை டீ விற்றவன் என்று கேலிசெய்கின்றனர். எனதுபணி எனக்கு தெரியும். வலிமைவாய்ந்த காங்கிரஸ் டீ விற்பவரை பார்த்து அச்சமுறுவது ஏன்? நாட்டில் உள்ள அனைத்து டீவிற்பவர்களும் நாட்டின்பெருமை மிக்கவர்களாக தற்போது கருதப்படுகின்றனர். நாடுமுழுவதும் டீக்கடைகாரர்கள் குறித்த பேச்சு ஹாட்டாப்பிக்காக உள்ளது. டீவிற்றவர் இந்த நாட்டை எவ்வாறு வெற்றிகரமாக நடத்தமுடியும் என்று அவர்கள் கேட்கின்றனர். ஆனால் இந்த டீவிற்றவனிடம் எப்படிபோராட போகிறோம் என நினைத்து அஞ்சுகின்றனர்.

மன்மோகன் சிங்கை எம்.பி.,க்கள் தேர்வுசெய்யவில்லை. சோனியா நியமித்தார். இதனை மறுக்கமுடியுமா ? வளர்ச்சிபணிகள் எதுவும் நடக்கவில்லை. மோசமான நிலையில் இந்தியா இருக்கிறது. இதுபோன்ற ஊழல் நடந்ததை கடந்த 20 ஆண்டுகால வரலாற்றில் நாங்கள் பார்த்தது இல்லை. தேர்தலில் வெற்றிபெற முடியாது, ராகுல் பிரதமராக முடியாது என்ற காரணத்தினால்தான் அறிவிக்கவில்லை. எந்த தாயாவது (சோனியா ) தனது மகனை தோல்விக்காக தியாகம்செய்ய முன்வருவாரா? அவமானத்தை சந்திக்கநேருமே என்று சோனியா அஞ்சுகிறார்.

ஊழல் நடந்தபோது பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்குதேவை கமிட்டி அல்ல கமிட்மென்ட் வெளிநாட்டில் பதுங்கி கிடக்கும் கறுப்புபணத்தை கொண்டுவந்தால் இந்த நாட்டை செழிப்படைய செய்யமுடியும். சிறந்த நிர்வாகமும், சிறந்த கட்டமைப்பும்தான் இந்தியாவை வளர்ச்சிக்கு கொண்டுசெல்ல முடியும்.

பெண்களுக்கு எதிராக குற்றம்பெருகி வருகிறது. இது இந்தியாவிற்கு அவமானத்தை தருகிறது. மகளிருக்கு எதிரானகுற்றம் தடுக்கப்பட வேண்டும்.லட்சக் கணக்கான மக்கள் பாஜக.,வில் தற்போது இணைந்து வருகின்றனர். வரும் 2014ல் எங்களுக்கு வாய்ப்புகிடைத்தால் நாங்கள் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் வளர்ச்சியை தருவோம்.

Narendra Modi addresses BJP’s National Council at Ramlila Maidan in New Delhi

காங்கிரஸ் காரர்கள் இந்நாட்டை தேன்கூடாக நினைக்கின்றனர். நாம் தாயாக உணர்கிறோம்.இந்த நாட்டில் 100 ஸ்மார்ட்சிட்டி அமைக்கப்பட வேண்டும்.நாட்டில் வாழும் ஏழைகள் அனைவருக்கும் தங்கும் குடியிருப்புக்கள் வழங்கவேண்டும். வேளாண் பொருட்களுக்கு உரியவிலை நிர்ணயிக்க வேண்டும். குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள பால்கூட்டுறவு சொசைட்டிகள் நாடுமுழுவதும் அமைக்கப்பட வேண்டும். அனைத்து இந்தியர்களும் தொழில் நுட்ப துறையில் கற்கும் நிலை உருவாகவேண்டும். நாட்டு மக்களின் நலம் குறித்து நாங்கள் கவலைப் படுகிறோம். ஹெல்த் இன்சூரன்ஸ் தேவையில்லை.

Narendra Modi addresses BJP’s National Council at Ramlila Maidan in New Delhi

ஹெல்த் உத்ரவாதம்தான் தேவை. வறுமையை ஒழிக்க பாடுபடவேண்டும். திறமை, வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம், பாரம்பரியம் முன்னேற்றப்பட வேண்டும். இவைதான் நம்மை உலக அளவில் மதிப்பை உயர்த்த உதவும். நான் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும்முன்பு தேர்தல் வெற்றிக்காக அத்வானியின் ஆசீர்வாதத்தை பெறுவேன். இந்தியா குறித்து எனது எண்ணம் எல்லாம் அனைவரும் மகிழ்ச்சி அடையவேண்டும், வன்முறையற்ற இந்தியா, நமது தாய்நாடே பிறநாட்டை விட அனைத்திலும் உயர்ந்து விளங்கவேண்டும் . வாரிசு அற்ற ஊழலற்ற அரசு வேண்டும். ஜனநாயகமே இந்த நாட்டின் பெரும்சொத்து. வெறும் பிரதிநிதிகளாக இருக்ககூடாது. இந்த ஜனநாயகத்தின் உயிராக விளங்கவேண்டும். இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அறிவுத்திறமையே மற்றொரு மூலதனம் . பல மாநில வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது. என்று பேசினார் .

Narendra Modi addresses BJP’s National Council at Ramlila Maidan in New Delhi

Narendra Modi addresses BJP’s National Council at Ramlila Maidan in New Delhi

Narendra Modi addresses BJP’s National Council at Ramlila Maidan in New Delhi


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service