கையில் அதிகாரம், கோப்புகளில் கையெழுத்து, அரசின் பணத்தில் சுக போக வாழ்க்கை இப்படித்தான் தற்போதய பெரும்பாலான அரசியல் தலைவர்களின் தினசரி வாழ்க்கை.
தொழில் நுட்பங்கள் சார்ந்த அறிவு அதிகம் உள்ளவராக அறியப்படும் நமது திரு.மோடி அவர்கள் வேளாண்துறை மட்டுமிற்றி பல்துறை சார்ந்த அறிவை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டதை எண்ணிப்பார்க்கையில், மக்களின் தலைவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அளவு கோலாக இவரைத் தவிர வேறு ஒருவரை தற்போதைய காலகட்டத்தில் கூற இயலாது.
ஆம் செப்-19 2013 அன்று குஜராத் மாநிலம்- காந்திநகர் மகாத்மா மந்திரில் தொடங்கிய இரண்டு நாள் துடிப்பான குஜராத் – உலகளாவிய விவசாய உச்சி மாநாடு -2013 ஐ திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார்.
இது போன்ற கருத்தாழமிக்க மற்றும் பிரம்மாண்ட விவசாயிகள் மாநாடு இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறை. உலகின் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயம் சார்ந்த நிறுவனங்கள் பங்கு பெற்று தங்களது துறை சார்ந்த நிபுணத்துவத்தை விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. மாநாட்டின் சிறப்பம்சமாக விவசாயத்தில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடுகளான இஸ்ரேல்,நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளின் கருத்தரங்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதோடு பஞ்சாப் முதல்வர் திரு பிரகாஷ் சிங் பாதல் அவர்களும் பங்கு பெற்றுச் சிறப்பு செய்தார்.
மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மோடி அவர்கள் ஒரு காலத்தில் விவசாயத்தில் பின் தங்கிய மாநிலமாக இருந்த குஜராத் இன்று விவசாயத் துறையில் வெற்றி பெற்று மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதை சுட்டிக்காட்டி பேசினார். இந்த மாநாடானது வளர்ந்து வரும், வளரத் துடிக்கும் நமது நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள நல்ல ஒரு கருத்து தளமாக கண்டிப்பாக அமையும் என்று உறுதியாகக் கூறினார். இஸ்ரேலில் நடைபெற்ற இது போன்ற மாநாட்டில் தான் பங்கு பெற்றதை நினைவு கூர்ந்த திரு.மோடி அவர்கள் ஏன் இது போன்றதொரு அருமையானதொரு நிகழ்வை நாமும் நம் மாநிலத்தில் நம் மக்களுக்காக நடத்தக் கூடாது என்று அங்கு சென்றிருந்த போது தான் எண்ணியதாகவும் அதை இப்போதும் இந்த குஜராத்தில் நடத்துவதை எண்ணி தான் பெருமிதம் அடைவதாகவும் கூறினார். விநாயகருக்கு சிறப்பு செய்யும் நாளான விநாயகர் சதுர்த்தியையும் பொருட்படுத்தாது மராட்டிய மாநிலத்தில் இருந்த கலந்து கொள்ள வந்திருந்த வளரும் விவசாயிகளை எண்ணி பூரிப்படைந்தார்.
விவசாயிகளுக்காக பாசன வசதிகளை மேம்படுத்த குஜராத் அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் பேசினார். தான் முதவராக பதவியில் அமரும் போது 12 ஆயிரம் ஹெக்டேராக இருந்த பாசனப் பரப்பானது இன்று எண்ணிப் பார்க்க முடியாத வகையில் 9 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளதை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டதோடு, நவீன பாசன யுத்திகள் வெறும் நீரைச் மட்டும் சேமிக்கும் முயற்சி அல்ல என்றும் நமது உழைப்பையும் சேமிக்கும் ஒரு அருமையான ஒன்று என்றும் கூறினார்
குடும்பங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் வேளையில் பாசன நிலப்பரப்பானது எந்த மாற்றமும் இன்றி இருப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய திரு.மோடி அவர்கள் இந்த நிகழ்வானது உணவு உற்பத்திப் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை இது எடுத்துக் கூறுவதாகவும், குறைவான நிலப்பரப்பில் அதிக மகசூல் பெறுவதற்கான முயற்சிகளை நாம் கண்டிப்பா அதுவும் விரைவாக செயல்படுத்த வேண்டியதையும் எடுத்துரைத்தார்.
விவாசாய நிலங்களின் அளவை குறையாமல் பார்த்துக்கொள்ள தமது அரசானது தொடர்ந்து முயற்சி செய்து வரும் அதே வேளையில் நிலத்தின் தரத்தை உயர்த்துவதற்காக நாம் எல்லா வகையான முயற்சிகளையும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும் அதற்காக குஜராத் அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் ‘மண் சுகாதார அட்டை’ திட்டத்தையும் குறித்து பேசினார்
தனது பேச்சின் போது, வேளாண்மை துறையில் தொழில்நுட்பம் (Technology) மற்றும் மின்னாட்சியை (e-Governace) ஒருங்கிணைக்க நாம் பெரிய அளவில் முயற்சி எடுக்க அழைப்பு விடுத்தார். தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் நாம் பெற்ற பயனை, மகத்துவத்தை பயன்படுத்தி நமது பாரத விவசாயிகள் தங்களது பங்களிப்பை உலகஅளவில் விரிவாக்க உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார். மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதத்தில் விவாசய உற்பத்தியின் பங்கானது மிகவும் சொற்பமே என்றும் அது குறைந்து கொண்டே போவதாகவும் என்று வருந்திய திரு.மோடி அவர்கள் நமது மக்கள் மீதான ஆட்சியாளர்களின் அக்கறையின்மையே இதற்கு காரணம் என்று குறிப்பிட்டார்
கடன் தள்ளுபடி பற்றியே அதிகமாக பேசும் நாம், விவசாயிகள் கடனில் விழுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதைத் தடுக்க நாம் முயற்சிகளை மேற்கொள்வதின் அவசியத்தை வலியுறுத்தினார். வங்கிகளில் வேளாண்மைக்கான உதவிகள் பற்றி மார் தட்டிக்கொள்ளும் மத்திய அரசு, வங்கிகளில் வேளாண்மைகாக கடன் பெறுவோர் வெறும் 30% சதவீதமே என்பதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
விவசாயிகள் தற்கொலைக்கு கந்து வட்டிக் கடன் கொடுமையே காரணம் என்றும், விவசாயிகளை வங்கி அமைப்புகளுடன் இணைப்பதே தீர்வு என்றும், இதற்காக வங்கிகளும், அரசும் விவசாயிகள் மீது நம்பிக்கை கொண்டு அதற்கான வழிகளை எளிமைப் படுத்த வேண்டும் என்றும் அவர் யோசனை கூறினார்.
திறமையான விவசாயிகளையும்,பல்கலைக் கழகங்களையும், அறிஞர்களையும் கொண்ட நாம் ஏன் இன்னும் உற்பத்தியில் மிகவும் பின்தங்கி இருக்கிறோம் என்று கேள்வி எழுப்பிய அவர், அதிக எண்ணிக்கையிலான கால்நடைகளைக் கொண்ட நாம் ஏன் இன்னும் அந்த எண்ணிக்கைக்கு சமமான, அதற்கேற்ற அளவில் பால் உற்பத்தி செய்ய இயலவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
நம் உணவின் முக்கிய அங்கமான பருப்பு வகைகளின் உற்பத்தி பெருக்கத்திற்கான ஆராய்ச்சியில் நாம் இதுவரை ஈடுபடவில்லை என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டார்.
அதே போல் தோடர் மால் காலத்தில் எடுக்கப்பட்ட நில அளவையே நாம் இன்றும் பயன்படுத்தி வருகிறோம், தற்போதைய சரியான நில அளவைக் கணிப்பதற்கான முயற்சிகளை உடனேயே செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததோடு, நமது உற்பத்தியின் அளவை கணிப்பதற்கான எந்த வித சரியாக வழிமுறைகளையும் நாம் பின்பற்றவில்லை என்கிற தனது கவலையையும் வெளிப்படுத்தினார்.
மத்திய அரசு செயல்படுத்தும் JNNURM திட்டத்துடன் நாட்டின் முக்கிய 500 நகரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் திடக் கழிவு மேலாண்மை செயல்படுத்தி அதன் மூலம் சுற்றியுள்ள கிராம விவசாயிகளுக்குத் தேவையான உரங்களும், தண்ணீரும் உருவாக்கலாம் என்ற யோசனையை பாரத பிரதமருக்கு எடுத்துக் கூறியாதகவும், அதை பாராட்டிய பிரதமர் அதன் பிறகு அதற்கான எந்த ஒரு முயற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை என்றும் வருத்தப் பட்டார்.
ஆனால் அதற்காக தான் சோர்ந்து விடவில்லை என்றும் அந்த திட்டத்தை தமது குஜராத்தில் செயல்படுத்துவதற்காக 50 முக்கிய நகரங்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான வேலைகளை தமது அரசு தொடங்கி விட்டதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.
பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவுக்கு தலைமை தாங்கிய போது தாம் பல துறைகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு யோசனைகளை பரிந்துரை செய்தையும் ஆனால் அதற்கான எந்த ஒரு முயற்சியும் பிரதமர் எடுக்கவில்லை என்று தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார்
வரும் காலங்களில் இயற்கை விவசாயத்தின் மகத்துவம் புரிந்து அதன் பயன்பாடு அதிக அளவில் இருக்கும் என்று கூறிய அவர் இயற்கை விவசாயம் நம் முன்னோர் பின்பற்றிய முழுமையான மற்றும் பாதிப்புகள் இல்லாத ஒரு வழிமுறை பல்வேறு மாற்றங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கை தெரிவித்தார். உலகிற்கே வயிறு நிரப்பும் நம் விவசாயிகளை மேம்படுத்துவதற்கான எல்லா விதாமான முயற்சிகளையும் நாம் கண்டிப்பாக எடுத்தே ஆக வேண்டும் என்று கூறிய அவர் அந்தத் தருணத்தில் விவசாயம் சார்ந்த ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார்.
சிறப்பு அழைப்பாளராக இந்த மாநாட்டுக்கு வந்திருந்து பேசிய பஞ்சாப் முதல்வர் திரு பிரகாஷ் சிங் பாதல் அவர்கள் இந்திய வரலாற்றில் இத்தகு அருமையான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக திரு.மோடி அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்த அவர் இதுபோன்றதொரு நிகழ்வை நமது நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்றும், கூடிய விரைவில் இதே போன்று பஞ்சாபில் நடத்தி காட்டுவோம் என்றும் சூழுரைத்தார்.
விவாசாயம் பற்றி நன்கு அறிந்த, நன்கு செயல்படுத்தும் எந்த ஒரு முதல்வரையும் மத்திய அரசு கலந்தாலோசனை செய்வதில்லை என்றும், பல நூறாண்டுகளாக நம் வயிறு நிரப்பும் விவசாயிகளின் கடினமான காலங்களில் எந்த விதமான உதவிகளையும் அவர்கள் செய்வதில்லை எனவும், கிராமங்களில் புறக்கணிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டுவதாக மிகவும் கடிந்து கொண்டார். கடந்த ஆறு ஆண்டுகளில் பஞ்சாப் மாநிலம் விவசாயத் துறையில் மேற்கொண்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகள வந்திருந்தவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
இன்னொரு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த மத்தியப்பிரதேச மாநில வேளாண்துறை அமைச்சர் திரு.மோடி அவர்களின் பல்துறை அறிவைக் கண்டு வியந்ததோடு ‘இந்தியாவின் எதிர்காலம்’ நமது மோடி அவர்கள் என்று கூறி பெருமைப்பட்டார்.
வேளாண் அறிஞர் முனைவர்.அசோக் குலாத்தி அவர்கள் இந்த மாநாட்டின் தொடக்கத்தில் வேளாண் சம்பந்தமான அருமையானதொரு உரை நிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த விழாவின் தொடக்கத்தில் குஜராத்தின் வேளாண்துறை அமைச்சர் திரு.பாபுபாய் போக்கிரியா அவர்கள் வந்திருந்த அனைவரையும் குஜராத் மாநிலத்தின் சார்பாக வரவேற்றார் .
நன்றி தமிழில் ; தர்மராஜ் முரளிகிருஷ்ணன்
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.