நாட்டின் முதல் பிரதமர், நேருவை போன்று , குஜராத் முதல்வர், நரேந்திர மோடியும் மிகவும் பிரபலமானவர், என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர், அசோக் சிங்கால் கருத்து தெரிவித்துள்ளார்.
உ.பி., ஆமதாபாத்தில் நடைபெற்றுவரும், கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அசோக் சிங்கால் கூறியதாவது: ஒட்டுமொத்தமாக, நாட்டின் அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல் பிரதமர், ஜவகர்லால்நேரு; அதே போன்றதொரு நிலை இப்போது முதல் முறையாக நிலவுகிறது.
அடுத்த பிரதமராக, நரேந்திர மோடியே வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அரசியலுக்காக, நாட்டில் அமைதியைகெடுக்க எங்கள் இயக்கம் ஒரு போதும் முயன்றதில்லை; அது எங்களது விருப்பமும்மல்ல. விஸ்வ இந்து பரிஷத், இந்து சமுதாயத்தின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டது. இந்துக்களின் கனவை நனவாக்குவது குறித்து விஸ்வ இந்து பரிஷத் செயலாற்றிவருகிறது. என்று அசோக் சிங்கால் தெரிவித்தார்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.