தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மண்டேலா உலக அமைதிக்காக பாடுபட்டவர் அவர் அகிம்சையின் தூதர். அவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்களுக்கு காந்தியை பார்க்கும் பாக்கியம் இல்லை என்றாலும் காந்தியின் கொள்கைகளை தன்னகத்தே கொண்ட மண்டேலாவின் காலத்தில் வாழ்கிறோம் என்பதே பெரும் பாக்கியமாகும் என்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.