“மகாத்மா காந்தி பிறந்த போர்பந்தரில் 200 ஆண்டுகளுக்கு முன் பூமிக்கடியில் மிகப் பெரிய குளம் கட்டி தண்ணீரைத் தேக்கி வைத்திருந்ததை நாம் அறிய வேண்டும். அந்த மாதிரி நீர் சேமிப்பு திட்டங்களை நாம் உயிர்ப்பிக்க வேண்டும்” – நரேந்திர மோடி.
பூமியின் வாழ்வாதாரம் தண்ணீர்தான். நீர் மேலாண்மையில் அதிசயிக்கத்தக்க வகையில் பெரும் புரட்சியே செய்து வெற்றி பெற்றிருக்கிறது குஜராத்.
நீர் சக்தி என்ற புரட்சியின் மூலம் வாழ்க்கை சக்தியையே மக்கள் பெற்றுள்ளர். அவர்களின் இழந்த புன்னகையை திரும்பப் பெற வைக்க நீர் சக்தி திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
உலகின் மிகப் பெரிய நீர் சக்தி திட்டமான நர்மதாவின் சர்தார் சரோவர் அணையின் உயரத்தை 90 மீட்டரிலிருந்து 121.9 மீட்டராக உயர்த்தப்பட்டது. நீர்ப்பாசனம், நீர்மின்சக்தி மற்றும் குடிநீர் சப்ளையில் இந்த திட்டத்தின் பங்களிப்பு மகத்தானது.
14000 கிராமங்கள், 154 நகரங்களுக்கு குடிநீர் வழங்கும் மாநில அளவிலான நீர்த் தொகுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அரசின் 7 ஆண்டுகள் தொடர்ச்சியான திட்டமிடல் மற்றும் முயற்சியின் பலனாக குஜராத்தில் ஒரு பசுமைப் புரட்சியே நிகழ்ந்துள்ளது.
புதிய முறையில் திறமையான நிர்வாகத்துடன் மேற்கொண்ட திட்டங்களால், மாநிலத்தின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததுதான் குஜராத் வேளாண்மையில் அதிசயங்களை நிகழ்த்தியது. கரம்பு நிலங்கள் வளமான கழனிகளாகின.. விளைச்சல் கொட்டியது. வேளாண் செலவுகளும் இதனால் குறைந்துவிட்டது.
மாநிலத்தின் 30 சதவீத நிலப்பரப்பு 71 சதவீத நீர்வளத்துடனும், 70 சதவீத நிலப்பரப்பு 29 சதவீத நீர்வளத்துடனும் இருந்த சவாலான நிலையை, குஜராத் முழுவதும் மழை நீர் சேகரிப்பு திட்டம் மூலம் சமன்படுத்தியது அரசு.
நீர் வளத்தைப் பெருக்குவதன் அவசியத்தை ஐநாவின் விருது பெற்ற WASMO திட்டம் மூலம் மக்களுக்கு வீடுவீடாகப் போய்ச் சொன்னவர் நரேந்திர மோடிதான்.
நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையில், நீர் நிலை மேம்பாடு, தடுப்பணைகள் கட்டுவது, விவசாய குளங்கள் அமைப்பது, சிமெண்ட் நிரப்பிய மூட்டைகளை அடுக்கி, நீரின் ஓட்டத்தை மட்டுப்படுத்துவது போன்ற திட்டங்கள் மக்கள் இயக்கமாக மாறி குஜராத்தின் நீர்வளத்தைப் பெருக்கியுள்ளன. இதனால் மக்கள் முகத்தில் புன்னகையை மீட்டுள்ளார் நரேந்திர மோடி.
நீர் சக்தி: நீர் உயர குடி உயரும்!
சுஜலம் சுபலம் – நீர் வளம் முழுமைக்கும் ஒரு தொகுப்பு மையம் அமைத்து நீரைப் பாதுகாத்துப் பயன்படுத்தும் திட்டம் இது. தண்ணீர் மேலாண்மையில் சின்னச் சின்ன திட்டங்களை மிகப் பெரிய அளவில் செயல்படுத்தி நீர் புரட்சியே ஏற்பட்டுள்ளது குஜராத்தில்.
நீர்த் துறையில் இந்த நான்கு பிரிவுகளை கவனிப்பது அவசியம்:
நீர் சக்தி கொள்கையில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய முயற்சிகள்… சுஜலம் சுபலம் திட்டம், சர்தார் சரோவர் திட்டம், கடல் – கடற்கரை பாதுகாப்பு, நீர்ப்பாசன திட்டம், உப்புத் தடை திட்டங்கள், வெள்ள பாதுகாப்பு பணிகள், வன்பந்து கல்யாண் திட்டம், சாகர்கேது திட்டம், நீர் சேகரிப்பு, நீர்சக்தி திட்டம், நதிகள் உள் இணைப்பு மற்றும் தடுப்பணைகள்.
விரைவில் ஒருங்கிணைந்த தொழில்சாலை நீர்க் கொள்கையையும் வெளியிட குஜராத் திட்டமிட்டுள்ளது.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.