நீதிபதி மார்க்கெண்டேய கட்ஜுக்கு ஒரு மறுப்புக்கடிதம்–1”

February-15-13

மார்க்கெண்டேய கட்ஜு …..ஒரு முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி..நல்ல மனிதர்…நீதிக்கு பெயர்போனவர்—மனதில் பட்டதை “டக்…டக்..” என்று சொல்பவர்—பிறப்பால் ஒரு காஷ்மீரி பண்டிட்—பரம்பரையாக நீதிபரிபாலனம் செய்த குடும்பத்தில் வந்தவர்..இவர் அப்பாவும் ஒரு சுப்ரீம் கோர்ட் நீதிபதி—ஆவார்—பதவி

ஓய்வுக்குப்பிறகு தற்போது “பிரஸ்கவுன்ஸிலின் “தலைவர்—இதுதான் இவரைப் பற்றி இதுவரை தெரிந்த தகவல்..

ஏன் இவ்வளவு இழுப்பு?—-நேரடியாக சப்ஜெட்டுக்கு வந்துவிடலாமே என நீங்கள் கேட்பது புரிகிறது—

இன்றைய “தி ஹிண்டு” பத்திரிக்கையில் இவரது மோடி பற்றிய ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. ‘தி ஹிண்டு” வில் இவரது கட்டுரை வரும்போதே நினைத்தேன்…ஏதோ வில்லங்கம் இருக்கும் என்று —அது உண்மையாகிவிட்டது..

குஜ்ராத் முதல்வர் நேரேந்திர மோடிமீது ” சேற்றைவாரி இறைத்து ” இருக்கிறார். அவர் வாயிலிருந்து—சாரி—பேனாவிலிருந்து..இறங்கிய “விஷ வரிகளை ” எப்படி இருக்கிறது என படியுங்கள்…

கோத்ரா கலவரத்தின் எதிர்விளைவில் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் 2000 பேராம்—பார்லிமெண்டில் உள்துறை இணை அமைச்சரக இருந்த ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் அவர்கள் ஒருகேள்விக்கு அளிதத பதிலில் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் எண்ணிக்கை —-790—–எனவும் 223 பேரை காணவில்லை எனவும் தெளிவுபட கூறியுள்ளார்.

மதிப்பிற்குரிய முன்னள் நீதிபதி கட்ஜு அவர்கள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் போல் மிகைப்படுத்தி எழுதியுள்ளார்..

அரேபியாவில் தயாரிக்கப்படும் அத்தனை வாசனை திரவியங்களையும் கொண்டுவந்து கொட்டினாலும், குஜராத் கலவரத்தால் மோடி மீது படிந்திருக்கும் கரையை கழுவமுடியாதாம்…இவர் அரசியல் மேடைபேச்சாளர் அளவிற்கு “இறங்கிப் போன ” பரிதாப நிலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை..

சுதந்திர இந்தியாவில் நடந்த மதக்கலவரங்களில், 79 சதவீதம் நேரு—இந்திரா—ராஜிவ் காந்தி ஆட்சிகாலத்தில்தான் நடந்தது…இந்த கரைகளை கட்ஜு எந்த நாட்டு “செண்ட்” கொண்டு கழுவுவார்?—

குஜராத்தில் மட்டும் 1947 ஆம் ஆண்டுமுதல் 2002 ஆம் ஆண்டு வரை 235 மதக்ககலவரங்கள் நடந்துள்ளது..

அதில் 1969 ஆம் ஆண்டு, இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, குஜராத் முதல்வராக காங்கிரசின் ஹிதேந்திர தேசாய் இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரத்தில் மட்டும் 5000 பேர் கொல்லப்பட்டனர்…ஆமதாபாத்தில் மட்டும் 513 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். கலவரம் 6 மாதகாலம் நடந்தது..இந்த கரைகளை கழுவுவதற்கு “கட்ஜு” எப்போது பாதயாத்திரை மேற்கொள்ளப்போகிறார்..என்பதை தெரிவிப்பாரா?

2002 குஜராத் கலவரத்தை 1938 ஆம் ஆண்டு நவம்பரில் ஜெர்மனியின் கிரிஸ்டால்நச் கலவரத்தோடு, ஒப்பிட்டு, யூதர்களை ஜெர்மானியர்கள் “இனப்படுகொலை ” செய்தமாதிரி, முஸ்லீம்களை மோடி கொன்று குவித்திருக்கிறார் என எழுதியிருக்கிறார்.

பாவம்—கட்ஜுக்கு சரித்திரம் தெரிந்தும்—”இனப்படுகொலையும் “பற்றி புரிந்தும்..ஏன் இப்படி ஒருதலை பட்சமாக எழுதினார் என்பது புரியவில்லை..

குஜராத்தில் 790 முஸ்லீம்களும்—254 இந்துவும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்..இந்துக்கள் கொல்லப்பட்டதை கட்ஜு ஏன் சௌகரியமாக மறைத்துள்ளார்? கட்ஜு யாருடைய பிரச்சாரத்துக்கு துணைபோகிறார்?,

1984 இந்திராகாந்தி படுகொலையை அடுத்து, டெல்லியில் காங்கிரஸ்காரர்களால், சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டதே வன்முறை, அதில் 2886 சீக்கியர்கள் மட்டுமே கொல்லப்பட்டனரே…அதுதான் இனப்படுகொலை…ஒரு தாயை (இந்திரா காந்தி) கொன்றவனின் தாய் ( துப்பாக்கியால் சுட்ட –சத்வந்த் சிங் என்ற சீக்கிய பாதுகாப்பு அதிகாரி )சீக்கியன் என்பதால், அந்த இனத்தையே பூண்டோடு அழிக்க ஜகதீஷ் டைட்டலரும், சஜன் குமாரும் இன்றைய மத்திய மந்திரி கமல் நாத்தும், வீடு வீடாக வாக்களார் பட்டியலோடு சென்று, சீக்கியர்களை தேடிப்பிடித்து, கொன்றார்களே—இவர்கள் ஏற்படுத்திய கரையை எவ்வளவு “செண்ட்” போட்டு கழுவப்போகிறார் கட்ஜு ?

கடந்த ஜூலை மாதம் அஸ்ஸாமில் அதாவது பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜ்ய சபாவிற்கு தெர்ந்தெடுத்த மாநில முதல்வர் அருண்கோகை 271 முஸ்லீம்களை இனக்கலவரத்தில் சுட்டுக்கொன்றாரே…அவர்களின் கரையை எத்தனை அரேபியன் “செண்டை” வரவழைத்து கழுவப்போகிறார் கட்ஜு ?

நாடுமுழுதும் டெல்லி பாலியல் வன்கொடுமைகொலையின் அதிர்ச்சில் கொதிதெழுந்த போது, குஜராத் கல்லூரிமாணவிகள் “எங்கள் மாநிலத்தில் ஈவ் டீசிங்” என்ரால் என்ன என்று தெரியாது என்று பேட்டி கொடுத்தார்களே…அதுகூட மோடி மாணவிகளை பயமுறுத்தி வாங்கிய “ஸ்டேட்மெண்ட்” தானோ ?

நேற்று நடந்த குஜராத் நகராட்சி தேர்தலில் ஜாம் நகர்-மாவட்டம்-சலயா-நகராட்சியில் 27 சீட்டில் 24 முஸ்லீம் வேட்பாளர்களை மோடி நிறுத்தி அத்தனை பேரும் வெற்றி பெற்றார்களே…காங்கிரஸ் நிறுத்திய அத்தனை முஸ்லீம் வேட்பாளர்களும் தோற்றுப்போனார்களே…அதுவும்கூட பயத்தினால்தானோ..?

நடந்து முடிந்த குஜராத் சட்ட்மன்ற தேர்தலில், முஸ்லீம் மெஜாரிடியான 19 சட்டமன்ற தொகுதிகளில், 12 இல் முஸ்லீம் அல்லாத பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்றர்களே…காங்கிரஸ் நிறுத்திய 7 முஸ்லீம் வேட்பாளர்களும் தோற்றூப்போனார்களே…அதுகூட மோடியின் பயமுறுத்தலால்தானோ ?

வேறு ஒரு கருத்தையும் கட்ஜு அவர்கள் உதிர்த்துள்ளர்கள்..இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானதில்லையாம்…இஸ்லாமிய கிரிஸ்தவர்களுக்கும் பொதுவானதாம்…எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு இது ?

இதைத்தானே பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் காலம் காலமாக சொல்லிவருகிறது..இந்நாட்டின் உப்பைத்தின்று– வளங்களை அனுபவிப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்நாட்டிற்கு விசுவாசமாக இருக்கவேண்டும்..என்கிறோம்..

ஆனால் அவர்களோ ” எங்களது மத விசுவாசம் பூகோள எல்லைகளை தாண்டியது—நாங்கள் வாட்டிகனுக்கும்—மெக்காவுக்கும் மட்டுமே விசுவாசமானவர்கள் ” என்கிறார்கள்..இதை சரி என்கிறாரா கட்ஜு..?..

ஆக –கட்ஜு இந்த விஷயத்தை எழுப்பியது சரி—சொன்ன இடம்தாம் தவறு…இந்துக்கள் அல்லாதவர்களிடம் இதை சொல்லி—அவர்களின் இந்திய விசுவாசத்தை கேட்டரிந்து அவர் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இறுதியாக கட்ஜுவுக்கு ஒரு கேள்வி..

குஜராத்தில் பலியான முஸ்லீம்களுக்கு ஆதராவாக குரல் கொடுக்கும் கட்ஜுவே—, நீங்கள் பிறந்த–உங்கள் இனமான “காஷ்மீர் பண்டிட் மக்களில்” 1000 பேரை வெட்டி சாய்த்து, அவர்களின் சொத்துக்களை கத்திமுனையில் அபகரித்து, சொந்தநாட்டிலேயே டெல்லி தெருக்களில், இன்றும் உங்களின் இனத்தினர் 5 லட்சம் பேரை அகதிகளாக்க யார் காரணம் ? காஷ்மீர் இந்துக்களா ?—முஸ்லீம்களா ?

நீங்கள் டெல்லியில் சகல வசதிகளோடு, சௌக்கியமாக இருப்பதால், துன்பத்தில் உழன்று, தெருக்களில் அல்லாடும், “காஷ்மீர் பண்டிட்களுக்கு” ஆதரவாக குரல் எழுப்ப உங்களூக்கு மனம் வரவில்லையோ.?

பாவம் கட்ஜு –வயதானகாலத்தில் சரித்திரம் தெரிதிருந்தும் ஒரு தலைபட்சமாகவும், , “மனம் சிதைந்தும்” பேசியிருக்கிறார்..சாரி—எழுதியிருக்கிறார்…

பெரியவர்களை மன்னிக்க முடியாது…

நடந்ததை மறக்கவும் முடியாது…

என்ன செய்யலாம்>>?

நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக மாநில பொருளாளர்


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service