மணிப்பூர் மாநிலம் பகுதியில் இன்று வந்து பேச வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்பாக கருதுகிறேன். இம்பால் பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர் .இவர்களின் தேச பற்றுக்கு மரியாதை செலுத்துகிறேன். நான் இப்பகுதி மக்களுக்களின் கலாச்சாரத்திற்கு நான் தலை வணங்குகிறேன். இவர்கள் பாரம்பரியம் போற்றுதலுக்குரியது. வாஸ்து சாஸ்திரப்படி நீங்கள் வட கிழக்காக வசிக்கிறீர்கள் எனவே நீங்கள் செழிப்புடன் வாழ முடியும். இங்குள்ள மூலிகை மூலம் பெரும் தொழிற்சாலை அமைக்க முடியும். இதன் மூலம் பெரும் வேலை வாய்ப்பு ஏற்படுத்த முடியும்.
இங்கு சிறந்த பொருளாதார வளர்ச்சி பெற முழு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் சிறந்த வளர்ச்சியை பெற்றது. இதற்கென அந்த கூட்டணி அரசு பணியாற்றியது. தற்போதைய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. வாஜ்பாய் வட கிழக்கு மாநிலங்களை கவனிப்பதற்கென தனி அமைச்சரை நியமித்திருந்தார்.
சமீபத்திய மாணவன் கொலை வெட்கப்பட வேண்டியது ஆகும். இதில் காங்கிரஸ் அரசியல் விளையாடக்கூடாது. நான் இன்று மணிப்பூர் மாணவர்கள் பலரை சந்தித்தேன். இந்த தேசம் உங்களுடன் இருக்கும் என உறுதி அளித்தேன். மணிப்பூரில் நடக்கும் போதை பொருள் கடத்தல் தடுக்கப்பட வேண்டும். இதில் அரசு தோல்வி அடைந்து விட்டது. எல்லை பாதுகாப்பில் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இங்கு போதிய தண்ணீர், மின்சாரம் கிடைக்கவில்லை. 5 வருடத்தில் உலகையே மாற்ற முடியும்; ஆனால் 23 ஆண்டுகளில் பிரதமர் எதையும் செய்யவில்லை வடகிழக்கு பகுதியின் நிலையை மாற்ற; எல்லை தாண்டிய ஊடுருவலையும் நிறுத்த காங்கிரஸ் ஏதும் செய்யவில்லை; இங்கு தகவல் தொழில் நுட்பம் இன்னும் வளர்ச்சியடையவில்லை இது எதனால் என்பதை என்னால் புரிய முடியவில்லை. யூனியன் பிரதேசங்களில் பெரும்பாலான மக்கள் மியான்மரை சேர்ந்தவர்களாக உள்ளனர்; இது நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் எதிரானது; இது அரசின் இயலாமையையே காட்டுகிறது. இளைஞர்கள் நலனுக்கென இங்குள்ள மாநில அரசு எதுவும் செய்யவில்லை. இளைஞர்கள் முன்னற்றத்திற்கு தேவையான உதவிகள் நான் வழங்குகிறேன் என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். மகளிர் போலீஸ் அதிகாரிகளை குஜராத்திற்கு அனுப்புங்கள் நாங்கள் வேலை வாய்ப்பு தருகிறோம். இங்கு அடிப்படை கட்டமைப்புகள் படு மோசமாக உள்ளது.
அரசு பணம் அனைத்தும் ஆளும்கட்சியின் கஜானாவிற்கு செல்கிறது; மத்திய அரசின் திட்டங்கள் காகித அளவில் மட்டுமே உள்ளது; மணிப்பூரில் பஞ்சாயத்துராஜ் திட்டமும், ஊரக வேலைவாய்ப்பு திட்டமும்ய தோல்வி அடைந்துள்ளது; நீங்கள் காங்கிறசிற்கு 60 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தும் அது எதுவும் செய்யவில்லை; மணிப்பூர் மக்கள் வெளி மாநிலங்களுக்கே வேலை தேடிச் செல்ல வேண்டி உள்ளது; கிராமங்களும், தேவாலயங்களும் வெளிநாடுகளுக்கு சென்று கொண்டுள்ளன; பார்லி., ஒப்புதல் பெறாமலேயே பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் மட்டும் கேட்டு விட்டு மணிப்பூர் முதல்வர் மியான்மருடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். இவ்வாறு மோடி பேசினார்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.