திருவனந்தபுரம்: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி இன்று கேரளாவில் நடைபெற்ற மாதா அமிர்தானந்த மயிதேவியின் 60வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டார்.
பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நாடு முழுவதும் தொடர் பிரசாரங்களைமேற்கொண்டு வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேற்று அத்வானி, ராஜ்நாத்சிங், சிவ்ராஜ்சிங் செளகான் ஆகியோருடன் ஒரே மேடையில் மோடி பங்கேற்றார். கேரளாவில் மாதா அமிர்தானந்த மயிதேவியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க்க நேற்று சிறப்பு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றடைந்தார் மோடி. அவர் தங்கியிருந்த ஹோட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து முற்பகல் நடைபெற்ற மாதா அமிர்தானந்த மயி தேவியின் 60வது பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டார். இதில் பேசிய நரேந்திர மோடி, மெக்காலே கல்வித் திட்டம் நமது சன்னியாசிகள், சாதுக்கள் பற்றி தவறான கற்பிதத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. அவர்கள் சமூகத்துக்கு சேவையாற்றவே வாழ்கின்றவர்கள். இந்த நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் சன்னியாசிகள், சாதுக்கள் ஆக்கப்பூர்வமான
செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். நாம் விவேகானந்தரையோ, அரவிந்தரையோ நேரில் பார்த்தது இல்லை. ஆனால் மாதா அமிர்தானந்த மயிதேவி போன்றோரை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த பிறந்த நாள் விழா சுயநலத்துக்கானது அல்ல.. சமூக நலனுக்கானது என்றார்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.