உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற இந்தியாவிற்கான பிரிட்டன் ஹை கமிஷனர் ஜேம்ஸ் பேவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குஜராத் முதல் மந்திரி மோடி குறித்து அவர் கூறியதாவது:-
குஜராத் ஒரு முக்கியமான அரசு. நரேந்திர மோடி அந்த அரசின் முதல் அமைச்சராக உள்ளார். மற்ற மாநிலங்களை போல் குஜராத்தும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே. இந்த அரசு இந்தியா பிரிட்டனுக்கும் இடையே உள்ள சிறந்த உறவுகளை மேம்படுத்த உதவ முடியும்.
இந்தியாவுடன் ஒரு வலுவான உறவை மேம்படுத்த விரும்பினால், நாம் குஜராத்தை புறந்தள்ள முடியாது. இல்லையா?. இந்திய ஜனநாயகத்தில் நாங்கள் நம்பிக்கை வைத்து இருக்கிறோம். நரேந்திர மோடி எதிர்கட்சியின் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பற்றி விமர்ச்சிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.