நாட்டில் அரசியல்தீண்டாமை அதிகரித்து வருகிறது”

April-25-13

சமூக சீர்திருத்தங்களை கொண்டுவர முயற்சிகள் நடந்து வரும் போதிலும், நாட்டில் அரசியல்தீண்டாமை அதிகரித்துவருகிறது என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி வேதனைதெரிவித்துள்ளார்.
கேரளவின் சிவகிரியில் அமைந்துள்ள மடத்தில் நாராயணகுரு பரிஷத்தின் 51ஆவது ஆண்டுவிழாவை நரேந்திரமோடி புதன்கிழமை தொடங்கிவைத்தார். முன்னதாக அவரதுவருகைக்கு கேரள மாநில காங்கிரஸ் கூட்டணியும், எதிர்க் கட்சியான இடதுசாரி கூட்டணியும் எதிர்ப்புதெரிவித்து, இந்நிகழ்ச்சியை புறக்கணித்தன. அதை பொருட் படுத்தாமல் நிகழ்ச்சியில் நரேந்திர மோடி பேசியது:

இப்போது நாடுசந்திக்கும் முக்கியமான இருபிரச்னைகள் பயங்கரவாதமும், புவிவெப்பமாதலும் தான். நாராயணகுரு போன்ற துறவியர்களின் உபதேசங்களை நாடு பின்பற்றி இருந்தால் இப்பிரச்னைகள் தவிர்க்கப் பட்டிருக்கும்.

குஜராத்மாநிலம் அனைவருக்கும் பொதுவானது. நாராயணகுருவின் உபதேசங்களை எங்கள் மாநிலத்துக்குவந்து பரப்புமாறு அனைவரையும் அழைக்கிறேன். கேரளமாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டம் அல்லது ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் மலையாளிகள் இடம் பெயர்ந்து குஜராத்தில் குடியேறியுள்ளனர். குஜராத்தின்வளர்ச்சி ஒரு கால கட்டத்தில் கேள்விக்குரியதாக இருந்தபோது, மாநிலத்தை கட்டமைப்பதில் மலையாளிகள் கடுமையாக உழைத்தனர் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

கல்வியறிவுவிகிதம் அதிகமாக இருப்பதாலும், நாராயணகுரு போன்றோரின் போதனைகளாலும் நாட்டின் முன்பும் உலகின்முன்பும் கேரளம் உயர்ந்து நிற்கிறது. சமூக சீர்திருத்தங்களை கொண்டுவர முயற்சிகள் நடந்து வரும் போதிலும், நாட்டில் அரசியல்தீண்டாமை அதிகரித்துவருகிறது என்றார் மோடி.

 


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service