நரேந்திர மோடி, குஜராத்தில் உயர்கல்வி துறை சார்பில் ‘உயர் கல்வியில் தர மேம்பாடு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கின் ன் நிறைவு விழாவில் நாட்டின் வளர்ச்சிக்கு பல்கலைகழகங்களின் அறிவுக்களஞ்சியத்துடன், மனித வளத்தை ஒருங்கிணைக்க அழைப்பு விடுத்தார்.
நாளந்தா, டாக்சாஷிலா மற்றும் வல்லபி போன்ற பல்கலைக்கழகங்கள் 1,800 ஆண்டுகள் பழமையானது என்று நினைவு கூர்ந்தார். முரண்பாடாக, சிறந்த கட்டுரை மையங்கள் இடைக்காலத்தில் படையெடுப்புகள் நடந்த 800 ஆண்டுகளில் கூட தங்கள் தனித்துவத்தை நிலைநாட்டியது , ஆனால் துரதிருஷ்டவசமாக பிந்தைய சுதந்திர காலத்தில் அவை தம் ஆன்மாவை இழந்துவிட்டன என்று கூறினார்
போதனை மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த நிர்வாக இணக்கமின்மை சுமையில் இருந்து பல்கலைக்கழகங்களை விடுவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அவர் பல்வேறு துறைகளில்(குறிப்பாக பாதுகாப்பு உபகரணங்கள், கப்பல் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில்) உள்ள இடைவெளிகளை பட்டியலிட்டு, அவற்றை நிரப்புவதன் அவசியத்தை எடுத்துரைத்தார், மேலும் இதன் அவசியத்தை உணர்ந்து குஜராத் அரசு திறன் வளர்ச்சி பயிற்சி திட்டங்களை அறிமுகப்படுத்தியுல்லது என்று குறிப்பிட்டார்.
21 ஆம் நூற்றாண்டில் உயர் கல்வியில் புதிய சிந்தனைகளை செயலாக்க ,விஞ்ஞான கருத்தரங்கு நடந்துகொண்டுள்ள, இதே நாளில் (செப்டம்பர் 11) 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவை கவர்ந்த சுவாமி விவேகானந்தரின் ‘வாசுதைவ குடும்பகம்’ பற்றிய எழுச்சி மிக்க ஆன்மிக உரையை நினைவுகூர்ந்தார்- மாறாக 20ஆம் நூற்றாண்டில் இதே நாளில் (செப்டம்பர் 11) மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதல் அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .
அவர், பல்கலைக்கழகங்கள் சுயசார்புடன் க்ரிஷி மகோத்சவ் மற்றும் ஜ்யோதிக்ரம் திட்டங்கள் போன்ற நிகழ்வுகள் மூலம் அறிவை பகிர்ந்துகொள்ள வேண்டும், உலகம் முழுவதும் அறிவு வளர்ச்சி பெருகுவதற்கு உலகில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் இணைந்து செயல்படவேண்டும் என்று கூறினார்.
கருத்தரங்கில் பேசிய லார்ட் பிக்கு பரேக் , கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல் மூலம் உயர் கல்வி தரத்தை மேம்படுத்த குஜராத் அரசின் முயற்சியை வரவேற்றார். மாணவர்கள் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு வெளிநாடு செல்லவும், இந்திய மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இடையே துறைகளின் பரிமாற்றம் செய்துகொள்ளவும் ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார்
ஒரு நாள் கருத்தரங்கில் கலந்துகொண்ட மற்றவர்கள்: குஜராத் கல்வி அமைச்சர் புபெந்த்ரா சின்ஹ் சுடாஸ்மா, தொழில் அமைச்சர் சவுரப் படேல், மாநில கல்வி அமைச்சர் வாசுப்டின் திரிவேதி , பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் , கல்வியாளர்கள் மற்றும் பதிவாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
நன்றி தமிழில் ; கண்ணன்
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.