நாட்டின் முதுகெலும்பான விவசாயத்துக்கு முதுகெலும்பாக இருக்கும் மோடி”

September-9-13

விவசாயம் ! நமது பாரத தேசத்தின் அடையாளம். ஆனால் அதன் நிலையோ கண்ணீர்க்கதையாக மாறிக்கொண்டிருக்கிறது. உலகிற்கே உணவளிக்க வல்லமை படைத்த நமது தேசம் மற்ற உலக நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டயாத்திற்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். காரணம் ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கு..! அனைத்திலும் ஊழல்!

இப்படிப்பட்ட நிலையிலே தான் ஒரு முன்னோக்கு சிந்தனையுள்ள தலைவர்/ஆட்சியாளர் தேவை படுகிறார்.! ஆம் மோடி அவர்களைப் பற்றிதான் சொல்ல வருகிறேன்.

நவீன தொழில்நுட்பங்களை அதிகமாக பயன்படுத்தி மக்களுக்கு பயனுறும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் கண்டவராக அறியப்பட்ட மோடி அவர்கள், நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதை ஊக்குவிப்பது மிகவும் ஆச்சர்யம் என்றால் அது மிகை அல்ல.
குஜராத்தின் விவசாயப் பரட்சியைப் பார்த்து இந்தியாவே ஏன் உலகமே பாராட்டி கொண்டிருக்கிறது . இந்த பாராட்டு அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை..ஆம் பல ஆண்டுகளின் கடுமையான மற்றும் உண்மையான உழைப்பு தான் கரணம் என்றால் அது மிகை அன்று.

Agriculture Summit-2013

இதோ அதற்கு அச்சாரமாக Vibrant Gujarat Global Agriculture Summit-2013 என்கிற உலகளாவிய விவசாய உச்சி மாநாட்டை செப் 9 மற்றும் 10 நடத்திக் கொண்டிருக்கிறார் நமது மோடி. நரேந்திர மோடி அவர்கள் Lab to Land என்கிற தாரக மந்திரத்தின் மூலம் விவசாயப் பல்கலைக் கழகங்களின் அறிவு வளங்களுக்கும் விளை நிலங்களுக்குமான அதாவது விஞ்ஞானிகளுக்கும் விவசாயிகளுக்குமான தொடர்பை ஏற்படுத்தி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் . இதை ‘கிருஷி மகோத்சவ்’ என்கிற விவசாயத் திருவிழாவை, விழாவாக ஆண்டிற்கொருமுறை அந்த மாநிலமே கொண்டாடுகிறது.
இன்று பாரத தேசத்தில் ‘மண் சுகாதார அட்டை’(Soil Health Card) திட்டத்தை மிகச் சிறப்பாக பின்பற்றும் மாநிலங்களில் குஜராத்துக்கு தான் முதலிடம். இந்தத் திட்டமானது மண்ணின் திடம் அறிந்து, அந்த மண்ணிலே நன்றாக வளரும் பயிர் என்ன என்பதை விவசாயிகளிடம் எடுத்துக் கூறி அதற்கேற்றார் போல் பயிர் செய்து இன்று விவசாயிகள் அதிக மகசூலும் அதிக லாபமும் ஈட்ட முடிகிறது.
இந்த இடைவிடாத முயற்சியின் பலன் கடந்த பல ஆண்டுகளாக 10% என்கிற விகித்ததிலே விவசாய வளர்ச்சியானது வளர்ந்து கொடிருக்கிறது! இதில் வேடிக்கையான ஒன்று நமது பாரதத்தின் குறிப்பாக பெரும்பாலான பாரதிய ஜனதா அல்லாத மாநிலங்களின் சராசரி வளர்ச்சி வெறும் 3-4% தான்.
முதல் பசுமைப்புரட்சிக்கு காரணமான விவசாய விஞ்ஞானி சுவாமிநாதன் அவர்களும், மத்திய அரசின் விவசாய உற்பத்திக் கொள்கை ஆணைக்குழுவின் தலைவர் Dr. அசோக் குலாதி அவர்களும் குஜராத்தின் இத்தகு வளர்ச்சியை கண்டு வியந்து போய் நிற்கிறார்கள். இதோடு மட்டுமின்றி உலக நாடுகளும் இதை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் என்று கூட சொல்லலாம்.

• விவசாயத்தின் மூலம் மாநிலத்திற்கான வருவாய் 9000 ஆயிரம் கோடியில் இருந்து பன்மடங்கு அதிகரித்து இன்று 1 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து நிற்கிறது!
• 1991ல் 106 லட்சம் ஹெக்டேராக இருந்த விவசாயப் பரப்பானது இன்று 145 லட்சம் ஹெக்டேராக உயர்ந்து நிற்கிறது .
• 108 மெட்ரிக் டன்னாக இருந்த விவசாய உற்பத்தி இன்று 241 மெட்ரிக் டன்னாக உயர்ந்து நிற்கிறது
இந்த வளர்ச்சியானது வெறும் 10 ஆண்டுகளில் அடைந்திருப்பது தான் பெருமையிலும் பெருமை
இதற்கான முழு முதற் காரணம் புதுப்புது யுத்திகளை கையாளுகின்ற விவசாயிகளும் அதற்கு வழி செய்து கொடுக்கின்ற அரசும் அதன் அதிகாரிகளும், அதை வழிநடத்துகிற மாநில முதல்வரான நமது மோடி தான் என்று சொன்னால் அது மிகையன்று.

இது மட்டுமா இதோ இன்னும் சில :

• இந்தியாவின் மொத்த நிலக்கடலை உற்பத்தியில் 30% த்தை குஜராத் உற்பத்தி செய்கிறது
• இந்தியாவின் 80% (Castor)ஆமணக்கு
• சீரக (Cumin) உற்பத்தியிலே முதலிடம்
• 80% வெங்காய பத்தபடுத்தும் (onion dehydration )கூடங்களும் அங்கே தான்
• இந்தியாவின் 33% பருத்தி உற்பத்தி அங்கே தான்
• இந்தியாவின் 50% பருத்தி ஏற்றுமதி குஜராத்திலிருந்து தான்
• கடந்த பத்து ஆண்டுகளுக்குள் 5 மடங்கு கோதுமை உற்பத்தி
• 2010-2011 ல் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி . அதற்காக மத்திய அரசின் ‘கிருஷி கார்மன் கமென்டேஷன்’ விருது
• 7 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்தில் நவீன வேளாண் தொழில்நுட்பங்களை செயல்படுத்தி இருக்கிறது
தற்போது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உச்சிமாநாடு நவீன விவசாய உத்திகள், தொழில்நுட்பங்கள் , புதிய கண்டுபிடிப்புகள், இயந்திரங்கள் மற்றும் மாநில விவசாயிகளின் அறிவு ஆகியவற்றை உலக தரத்திற்கு முன்னேற்றுவது என்கிற நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது
15 நாடுகளின் 100க்கும் மேற்பட்ட நிறுவங்கள் தங்களின் வேளாண்மைத் துறை சார்ந்த அறிவையும், நிபுணத்துவத்தையும் இந்திய விவசாயிகளிடம் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் மாபெரும் கண்காட்சி இந்த மாநாட்டிலே ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. அந்த மாநிலத்தை சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட விவசாயிகளும் 5000க்கும் மேற்பட்ட மற்ற மாநில விவசாயிகளும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த மாநாட்டில் விவசாயத்தில் நிபுணத்துவம் பெற்ற நாடுகளான இஸ்ரேல், டென்மார்க், நெதர்லாந்து போன்ற நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் அறிவை நமது பாரத விவசாயிகளிடம் பகிர்ந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது .

நன்றி ; தர்மராஜ் முரளிகிருஷ்ணன்


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service