குஜராத் முதல்வரும், பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வருமான, நரேந்திர மோடி, அம்மாநிலத்தின் மெக்சனா மாவட்டம், வாத்நகர் கிராமத்தில், 1950 செப்டம்பர், 17ல் பிறந்தார். அவரின் தந்தை பெயர், தாமோதர் தாஸ் முல்சந்த், தாயார் பெயர், ஹிரா பா. மளிகை கடை வியாபாரியான, தாமோதர் தாஸ் முல்சந்திற்கு, மொத்தம் ஆறு பிள்ளைகள். அவர்களில், மூன்றாவதாகப் பிறந்தவர் மோடி.
மோடியுடன் பிறந்த ஐந்து பேரும், அவரின் சொந்த கிராமமான வாத்நகர் உட்பட, மாநிலத்தின் பல பகுதிகளில் வசித்தாலும், அவர்களுடன் மோடிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதே உண்மை.நம்நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகள், குடும்ப நலனையே பெரிதாக கருதும் நிலையில், 1967ம் ஆண்டில், குடும்பத்தினரை விட்டு பிரிந்த மோடி, அதன்பின், அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை; பல நிகழ்ச்சிகளுக்கு, குடும்பத்தினர் அழைப்பு விடுத்தும், அவர் செல்லவில்லை. மாநிலம் மற்றும் கட்சியின் நலனிலேயே அக்கறை காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோமாபாய் மோடி, 70: முதல்வர் மோடியின் மூத்த சகோதரர்; மாநில அரசின் சுகாதாரத் துறையில், இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தான் பிறந்த கிராமமான, வாத் நகரில், முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த முதியோர் இல்லத்திலேயே, அலுவலர்களுக்கான, ஒரு அறையில் தங்கியுள்ளார். பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டது குறித்து, சோமாபாய் கூறுகையில், என் சகோதரர் பிரதமர் வேட்பாளரானது, அவருக்கு நல்லது எனில், குடும்பத்திற்கும் நல்லதே. நாங்கள் மகிழ்ச்சி அடைவோம், என்றார்.
அம்ருத்பாய், 68: முதல்வர் மோடியின் இரண்டாவது மூத்த சகோதரர்; சோமாபாய்க்கு இளையவர். ஆமதாபாத்தில் வசிக்கிறார். இவர் வசிக்கும் வீட்டு விலாசத்தையே, நரேந்திர மோடி, வாக்காளர் பட்டியலில் கொடுத்துள்ளார். ஆமதாபாத் நரோடா பகுதியில் உள்ள, அனில் ஸ்டார்ச் மில்லில் பணியாற்றியவர்; நான்கு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார்.
நரேந்திர மோடி, 64: குஜராத் முதல்வர்; தற்போது, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர்.
பிரகலாத் மோடி, 58: ஆமதாபாத்தில் வசிக்கும் இவர், நியாயவிலைக் கடை முகவர்கள் சங்கத்தின் தலைவராக உள்ளார். பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவதற்கு, சற்று முன், இவரை நிருபர்கள் சந்தித்தபோது, பா.ஜ.,வில் கருத்து வேறுபாடுகள் இருப்பதால், இப்போதைக்கு, என் சகோதரர் பற்றி, நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டேன். மேலும், இந்த விவகாரம் பற்றி, நான் எதுவும் பேசக்கூடாது என, நரேந்திர மோடி தடை விதித்து உள்ளார். அதனால், அவரிடம் கேட்ட பின்னரே பேசுவேன் என்றார்.
பசந்திபென், 55: வாத் நகர் கிராமத்திலிருந்து, 12 கி.மீ., தொலைவில் உள்ள, விஸ்நகரில், அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். முதல்வர் மோடியின் ஒரே சகோதரி இவர்.
பங்கஜ் மோடி, 52: மோடியின் நான்கு சகோதரர்களில், இளையவரான இவர், காந்தி நகரில், தகவல் துறையில், பணியாற்றி வருகிறார். மோடியின் தாயார் ஹிரா பா, இவருடன்தான் வசிக்கிறார். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து, இவர் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார். முதல்வர் மோடியின் தாயார் ஹிரா பாவுக்கு தற்போது, 94 வயது. ஒரே ஒரு முறைதான், மோடி தன் தாயாருடன் பொது நிகழ்ச்சியில் தோன்றியுள்ளார். அதுவும், 2012 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின், தன் தாயாருடன் அவர் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.