நல்ல அரசாங்கம்- மக்களுக்காக, மக்களால்!!”

October-10-13

நாடு சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் கடந்த பின்னும் ஒரு இந்தியக் குடிமகன் முழுமையான பொருளாதார மற்றும் சமூகச் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை!.
பொதுத் துறைகளின் பொறுப்பற்ற போக்கினால் 2013 கணக்கீடுகளின் படி நம்மில் பாதி பேர் ஏதோ ஒரு அரசாங்க அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்திருப்பது தெரிய வந்துள்ளது! இது மொத்த உலகின் லஞ்சக் குற்றங்களைப் போல் இரு மடங்காகும்!

திரு. மோதி தலைமையிலான குஜராத் அரசு பிரச்சினைகளின் வேரான லஞ்சததைக் கண்டறிந்து நீக்கி ”குறைந்த தலைய்யீட்டுடன் , நிறைவான அரசை”த் தரும் கொள்கையுடன் இயங்கத் துவங்கியது!! வெறும் நல்ல அரசாங்கம் மட்டும் போதாது, அது மக்கள் சார்புடையதாகவும், மக்களின் பங்கலிப்பொடு கூடியதாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த திரு. மோதி, ”நல்ல அரசாங்கம் என்பது, மக்களை நடுநாயகமாகக் கொண்டது” என்று தெளிந்தார்!! அதன் மூலம் அவர் கண்ட மந்திரம்தான் ”நல்ல அரசாங்கம்-மக்களுக்காக, மக்களால்” என்பதாகும்.

இந்தப் பதிவில், எப்படி குஜராத் அரசு மக்கள் சார்பாக மாற்றப்பட்டது என்பதைப் பார்ப்போம்!!

அணுகுமுறை 1: குஜராத் மக்களின் பிரச்சனைகளை திறம்பட எதிர்கொள்ள அரசு ஆரம்பித்த திட்டம்தான் SWAGAT (State Wide Attention on Grievance through Application of Technology). கிராம மக்கள் வரை அணுகுவதற்கு எளிய முறையான இந்த திட்டதால், திரு. மோதி தவறு செய்யும் அதிகாரிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவர் என்னும் நம்பிக்கையை மக்கள் மனத்தில் விதைத்தார்,. ஒவ்வொரு வியாழக் கிழமையிலும் திரு. மோதி தானே அமர்ந்து மக்களின் குறைகளைக் கேட்பதை வாடிக்கையாய்க் கொண்டதொடு அதற்கான உரிய நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படுகின்றனவா என்பதையும் தனது நேற்பார்வையில் கவனித்தார்!! இதனால், வெறும் காகிதத் திட்டமாக இல்லாமல் 92% மக்கள் பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட்டன!! ஐநா சபையின் ”சிறந்த பொதுச் சேவைத் திட்டத்திற்கான” விருதை இந்தத் திட்டம் பெற்றதில் ஆச்சரியம் ஏதும் இல்லை!!

கிராமங்கள் வரை அரசின் அத்தனை திட்டமும் நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக எளிய முறையில் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்லாது!! மேலும் இணையம் , மற்றும் சமூக வளைத் தளங்களின் மூலம் முதல்வருடன் நேரடியாக கருத்துக்கள், தகவல்களும் பரிமாற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது!!

அணுகுமுறை 2: Aapno Taluko, Vibrant Taluko (ATVT) என்னும் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு தாலுகாவும் வலுப்படுத்தப்பட்டு,நிலையான வளர்ச்சியைப் பெற தூண்டப்படுகிறது!. தாலுகா வரையிலும் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரம் வேகமான, . மக்கள் சார்ந்த வளர்ச்சிக்கு உறுதி செய்தது! இந்தத் தூண்டுதல் தாலுகாக்களுக்கு இதையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி, அதன் மூலம் ஒட்டு மொத்த வளர்ச்சியையும் சாத்தியமாக்கியது!! ஒவ்வொரு தாலுகாக்கள் அதன் தேவை, பிரச்சனைகளுக்கு ஏற்ப திட்டமிட்டு அதன் மூலம் நல்ல வளர்ச்சியை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறது!

3.செயல் திறன்மேம்பாடு: திறமையான நிர்வாக்த்துக்கு முதல்வரின் அலுவலகமே சான்று! அனைத்துத் துறைகளும், அதன் ஆவணங்களும் கணினி வாயிலாக இணைக்கப்பட்டு அனைத்துக் கோப்புகளின் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்பட்டுள்ளது! தரத்ிற்காக வழங்கப்படும் ISO 9001 சான்று பெற்றுள்ளது முதல்வர் அலுவலகம்.

அதுபோல், நியாய விலைக் கடைகளிலும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு மக்களுக்கு சரியான எடையுடன் கூடிய தரமான பொருட்கள் கிடைக்க வழி வகை செய்ததோடு நியாய விலைக் கடைகளின் விற்பணையும் வியக்கத்தக்க வண்ணம் உயர்ந்திடச் செய்துள்ளது! . ஐநா சபையின் உலக உணவுத் திட்டதால் அங்கீகரீக்கப்பட்ட இந்தத் திட்டததைப் பின்பற்றி மதிய அரசும், மற்ற மாநிலங்களும் செயல்பட நமது உச்ச நீதிமன்றம் அறிவுறுததியது இதன் வெற்றியை எடுத்துரைக்கும்!

4. புதுமை: தாமதிக்கப்பட்ட நீதியும், கிடைக்காத நீதியும் ஒன்று!! இதை உணர்ந்து, விரைவான நீதி அனைவருக்கும் கிடைக்க திரு. மோதி தலைமையில்லான குஜராத் அரசு நாட்டிலேயே முதன் முறையாக ”இரவு நீதிமன்றங்களை” ஆரம்பித்தது! அதுபோல், ”மகளிர் நீதிமன்றங்கள்” ஆரம்பித்து அனைவருக்கும் விரைவான நீதி கிடைக்க வழி செய்தத்தோடு, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு அனைவரும் மெச்சும் வண்ணம் செயல்பட்டு வருகிறது!!

5. ஒரு மாநிலத்தின் வெற்றியே, அதன் குடிமக்களை எந்த அளவிற்கு கொள்கை அளவில் ஈடுபடுத்துகிறார்கள் என்பதிலததான் உள்ளது! இந்தியாவிலேயே அந்தந்த இடங்களிலேயே, இணைய வாயிலாக மக்கள் வாக்களிக்கும் உரிமையை வழங்கிய முதல் மாநிலம் குஜராத் தான். அரசின் திட்டங்கள் மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்த்த பெருமை திரு. மோதி அரசுக்கே சேரும்!

வெறும் வாய்ச் சொல்லில் வீரம் காட்டுவது போலன்றி, திரு. மோதி தலைமையிலான குஜராத் அரசு கடந்த பத்தாண்டுகளில் ”லஞ்சம்” என்பதை அரசின் செயல்பாடுகளில் இருந்து அறவே நீக்கிக் காட்டி சாதனை புரிந்துள்ளது! திறமை வாய்ந்த மற்றும் வெற்றிகரமான இத்தகைய திட்டங்களை தேசீய அளவில் செயல்படுத்துவத்தின் மூலம் மட்டுமே ஒளிமயமான ஒரு எதிர்காலத்தை இளைய இந்தியாவுக்கு வழங்க முடியும்!!

நன்றி தமிழில் ; அசோக் ரஞ்சித்

 


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service