நல்லாட்சி ஏழைகளுக்கும், கீழ்த்தட்டு மக்களுக்கும், தலித்துகளுக்குமே முக்கியமாகத் தேவை”

February-21-14

வளர்ச்சியில் நாட்டின் கிழக்குப் பகுதிகள் மேற்குப் பகுதிகளுக்கு நிகராகக் கொண்டு வரப்படும். பாரத அன்னையின் ஒரு தோள் வலிவாகவும் மற்றொரு தோள் வலிவிழந்தும் இருக்கலாமா? பீகாரோ வங்காளமோ , அசாமோ,,ஜார்கண்டோ ,வட கிழக்கு மாநிலங்களோ,, ஒடிசாவோ , உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிகளோ இங்கெல்லாம் வளர்ச்சிக்கான கனவை நாம் நனவாக்கி முன்னேற்றத்தை நோக்கி வீறு நடை போடுவோம்.
நாடு முன்னேற வேண்டுமானால் மாநிலங்களின் அபிலாஷைகளைத் தடைகளாக நினைக்கக் கூடாது.டில்லியில் இருக்கும் அரசுகளும், தலைவர்களும் இதை ஏதோ தங்களது ஆட்சிக்கு ஒரு அச்சுறுத்தல் போல் பார்க்கின்றனர் . நாட்டின் வெவ்வேறு பாகங்களில் உள்ள மக்களின் விருப்பங்களை நாம் மதிக்க வேண்டும். நாட்டை வெறும் நிர்வாகத்தால் மட்டும் ஆட்சி செய்ய முடியாது.அது கூட்டாட்சி உணர்வுடன் நடத்தப் பட வேண்டும்.

டில்லியில் வாஜ்பாய் அவர்களின் தோழமையான, இணக்கமான அரசு மற்றும் இப்போது உள்ளது போன்ற அரசும் எப்படி இருக்கும் என்று நான் பார்த்தும் அனுபவித்தும் இருக்கிறேன். இதனாலேயே மாநிலங்களின் கஷ்டங்களை என்னால் உணர முடிகிறது.

அதனாலேயே மாநிலங்களின் மற்றும் முதல் அமைச்சர்களின் இன்னல்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.பாஜக அரசு கூட்டாட்சி அமைப்பை பலப் படுத்தும். இப்போது டில்லியில் உட்கார்ந்திருக்கும் தலைவர்கள்’ நாங்கள் கொடுக்கிறோம்,மாநிலங்கள் வாங்கிக் கொள்கின்றன’ என்று நினைக்கின்றனர். இது நல்லதல்ல. இதை மாற்றுவோம் என்று நாங்கள் உறுதி அளிக்கிறோம்.

இங்கு யாரும் பெரியவன் என்றோ சிறியவன் என்றோ கிடையாது. எல்லோரும் தோளோடு தோள் நின்று பாரத அன்னையின் நலனுக்காகப் பாடுபட வேண்டும்.

இப்போது எப்படி இருக்கிறதென்றால் பிரதமரும் அவரது சகாக்களும்தான் நாட்டை வழி நடத்த வேண்டும் என்பது போல் ஒரு தோற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

ஆனால் நான் வேறு விதமாகச் சிந்திக்கிறேன். பிரதமரும் மாநிலங்களின் முதல் அமைச்சர்களும் ஒருகுழு போல இணைந்து செயல் பட்டால் நாடு இன்னும் வேகமாக வளர்ச்சியை நோக்கிச் செல்லும்.
மத்திய மந்திரி சபையும் மாநில மந்திரி சபைகளும் இணைந்து செயல்பட வேண்டும்.மத்திய அரசு அதிகாரிகளும் மாநில அரசின் அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,
இவ்வாறு பணியாற்றினால் நாம் நமது கனவுகளை நனவாக்கலாம்.
.
இப்போது தேவை நல்லாட்சி. இப்பொது மோசமான ஆட்சி நடை பெறுகின்றது. நாம் இதை மாற்ற வேண்டும். செல்வந்தர்களுக்கு நல்லாட்சி பற்றிய கவலை இல்லை. அவர்கள் அரசையே விலைக்கு வாங்கி விடலாம்.நல்லாட்சி ஏழைகளுக்கும், கீழ்த்தட்டு மக்களுக்கும், தலித்துகளுக்கும் முக்கியமாகத் தேவை.ஆட்சி நல்லாட்சியாக இருக்குமானால் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைக்கு கல்வி கற்க மேலும் சிறந்த வாய்ப்புக் கிடைக்கும்.

நாம் மேடைப் பேச்சுக்கள் மீது நம்பிக்கை வைக்க முடியாது; நம்முடைய சாதனைகள் மீதுதான் நம்பிக்கை வைக்க முடியும். நமக்குத் தேவை மசோதாக்கள் அல்ல . ஆனால் தேவை மன உறுதி மற்றும் எண்ணம். நாம் நிறைய சட்டங்களைப் பார்த்து விட்டோம் ; நமக்கு இப்போது வேண்டுவது செயல்; நாம் வேண்டுவது தேர்தலில் வோட்டுகளைப் பெற இலவசங்கள் அல்ல ; ஆனால் நாம் வேண்டுவதோ வளர்ச்சியும், அது மக்களைச் சென்றடைதலுமே .

நன்றி நரேந்திர மோடி

நன்றி தமிழில் ஸ்ரீதரன்


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service