குஜராத் முதல்வர் திரு.நரேந்திர மோடி அவர்கள் 2013 ஆம் ஆண்டின் ரக்க்ஷா பந்தன் விழாவை காந்தி நகரில் வெகு விமரிசையாக கொண்டாடினார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வந்திருந்த ஐயாயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு ராக்கி அணிவித்து தங்கள் சகோதர அன்பை வெளிப்படுத்தினர்.
திரு.மோடி அவர்கள், அங்கு வந்திருந்த அனைத்து சகோதரிகளுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இந்த நாட்டின் பெண்கள் அனைவரும், பாரத மாதாவை பேணி பாதுகாத்திட உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திரு.மோடி அவர்கள் மேலும் கூறியதாவது, இந்த நாட்டின் பெண்கள் தன் மீது வைத்துள்ள பாசமும், ஆதரவும் தனக்கு கவசம் போன்று பக்க பலமாக இருக்கிறது என்று பெருமிதம் அடைந்தார். இந்த பலத்தை கொண்டு எத்தனை இடர்கள் வந்தாலும், அவற்றை முறியடித்து, நாட்டின் பாதுகாப்பிற்க்காகவும், நாட்டு மக்களின் நல் வாழ்வுக்காகவும் தாம் தொடர்ந்து பாடுபடுவேன் என்று கூறினார். அத்துடன் நாட்டின் அத்துனை மகளிருக்கும் நன்றி தெரிவித்து தன்னுடைய ரக்ஷா பந்தன் உரையை நிறைவு செய்தார்.
தமிழில் ; ப. நடராஜன்
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.