அக்டோபர் 9, புதன் அன்று ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் 1965 இந்தியா, பாக்கிஸ்தான் போரில் நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்த, பரம்வீர் சக்ரா விருது பெற்ற இராணுவ வீரர் ஷஹீத் அப்துல் ஹமிட் அவர்களது மனைவி ரசூலன் பீபீ ஜி அவர்களை சந்தித்தார், . ரசூலன் பீபீ ஜி அவர்கள் தேச சேவை மற்றும் இந்திய மக்களுக்கு நல்லது செய்ய தனது வாழ்த்துக்களை திரு மோடி அவர்களுக்கு தெரிவித்தார். திரு மோடி ஜி, ரசூலன் பீபீ ஜி அவர்களுக்கு ஒரு சால்வை வழங்கினார்.
ரசூலன் பீபீ அவர்கள் உத்தர பிரதேசத்தில் காஜிபுரில் வசித்து வருகிறார், அவரது உடல்நிலை சரியில்லாத போதிலும், தனது இரண்டு மகன்களுடன், ஸ்ரீ மோடி அவர்களை சந்திக்க வந்திருந்தார். இந்த சந்திப்பை பற்றி ரசூலன் பீபீ ஜி அவர்கள் கூறும்போது, ரிவாரி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் பேசியதை தொலைக்காட்சியில் பார்த்ததாகவும், பின்னர் அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்பியதாகவும் , தற்பொழுது இந்த சந்திப்பின் மூலம் தனது ஆசை நிறைவேறியதாகவும் அவர் கூறினார்.
நன்றி தமிழில் ; தாமரை கண்ணன்
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.