நரேந்திர மோடியே பிரதமர் என்ற கோஷத்துடன் தீவிரபிரச்சாரம்”

December-25-13

 நரேந்திர மோடியே பிரதமர் என்ற கோஷத்துடன் தீவிரபிரச்சாரம்நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் சிலமாதங்களே உள்ள நிலையில் நரேந்திர மோடியே பிரதமர் என்ற கோஷத்துடன் நாடு முழுவதும் தீவிரபிரச்சாரம் செய்ய பாஜக முடிவுசெய்துள்ளது.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் சிலமாதங்களே உள்ளன. இதில் பாஜக சார்பில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற 5 மாநில சட்ட சபை தேர்தலில் பாஜக.,வுக்கு குறிப்பிடத்தக்க வெற்றிகிடைத்தது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல்பிரசார வியூகம் மற்றும் நடப்பு அரசியல் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, டெல்லியில் இன்று பாஜக தலைவர்களின் முக்கிய ஆலோசனைகூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங், பிரதமர் பதவிவேட்பாளர் நரேந்திரமோடி, முதலமைச்சர்கள்; சிவராஜ் சிங் சவுகான், ராமன் சிங், மனோகர் பாரிக்கர், வசுந்தரா ராஜே, உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பொதுச் செயலாளர் அனந்தகுமார், மோடியே பிரதமர் என்ற கோஷத்துடன் இந்தியா முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும், நாடுமுழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். இதற்காக மக்கள் தங்கள்பங்களிப்பாக ரூபாய் 10 முதல் 1000 வரை நன்கொடையாக வழங்கலாம் என்றும் தெரிவித்தார்.


  • நேரலை

    Stay Tuned For Live Events

  • நிர்வாகம்

  • செய்திகள்

    மோடியின் டாக் ...

    நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

    காணொளி

  • கட்டுரைகள்

  • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service