நரேந்திர மோடியே அடுத்த பிரதமர் 52% பேர் ஆதரவு”

August-21-13

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே இருக்கின்றன. அரசியல் கட்சிகள் முண்டாசு கட்ட ஆரம்பித்து விட்டன. பி.ஜே.பி-யின் பிரசார குழுத் தலைவர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். ‘இந்தியாவின் பாதுகாப்பே கேள்விக்குறியாக

இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான கடுமையான நிலைப் பாட்டை பிரதமர் ஏன் எடுக்கவில்லை. இதுபற்றி என்னுடன் நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா?’ என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சவால் விடுகிறார் மோடி.

அரசியல் மேகங்கள், தேர்தல் சூறாவளியாக மாறத் தொடங்கிய சூழலில் மக்களின் பல்ஸ் பார்க்க முடிவெடுத்தது ஜூ.வி. ‘மன்மோகன் சிங் – மோடி’ என்ற தலைப்பில் மின்னல் வேகத்தில் ஸ்பெஷல் சர்வே எடுத்தோம். தமிழகம் முழுவதும் 4,490 நபர்களைச் சந்தித்தது நமது டீம். இதில் பெண்கள் 1,400 பேர்.

‘அடுத்த பிரதமராகும் தகுதி யாருக்கு இருக்கிறது’ என்ற முக்கியமான முதல் கேள்விக்கு நரேந்திர மோடிதான் என்று 52.85 சதவிகிதம் பேர் டிக் அடித்திருந்தனர். ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் இருப்பது ஷாக் அடிக்கும் ரிசல்ட். அதிலும், கடைசி இடம்தான் மன்மோகன் சிங்குக்கு கிடைத்திருக்கிறது. கடந்த மே மாதம் ஜூ.வி. நடத்திய ‘மக்கள் மனசு’ சர்வேயில் மன்மோகன் சிங்குக்கு 5.16 சதவிகிதம் ஆதரவுதான் இருந்தது. இந்த முறை அதைவிட அதிகம் கிடைத்திருக்கிறது. மோடிக்கு அப்போது 58.26 சதவிகித ஆதரவு இருந்தது. இப்போது அதைவிடக் குறைவுதான். ஜெயலலிதாவுக்கு அப்போது கிடைத்த ஆதரவு சதவிகிதம் 9.54. இப்போதோ 16.19.

பாரதிய ஜனதா கட்சி மோடியை முன்னிலைப்படுத்துவதையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். குஜராத்தில் நடந்த மதக் கலவரம், மோதல்களை மோடிக்கு எதிரான அஸ்திரமாக காங்கிரஸ் சொல்லிவரும் நிலையில், மோடி பிரதமர் ஆனால் மதமோதல்கள் ஏற்படுவதை விட, மாற்றங்கள் நிகழும் என்று மக்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர். இப்படி, மோடிக்கு ஆதரவான மனநிலை தமிழகம் முழுக்க இருப்பதை உணர முடிந்தது. அதைப்போலவே, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனோபாவம் அதிகமாக இருந்தது.

நான்கரை வருட காங்கிரஸ் ஆட்சி மோசம் என்றே ஏராளமானோர் கருத்துச் சொல்லி யிருக்கிறார்கள். பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வுகள், ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, காமன்வெல்த் போட்டி, ஹெலிகாப்டர் போன்ற ஊழல்கள் காங்கிரஸின் மீது பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம் என்றும் பெரும்பாலானோர் தீர்ப்பளித்துள்ளனர். அடுத்த பிரதமர் யார் என்பதை தங்களது வாக்குகளின் மூலமாக முன்னோட்டம் கொடுத்துள்ளனர் தமிழக மக்கள்.


 • நேரலை

  Stay Tuned For Live Events

 • நிர்வாகம்

 • செய்திகள்

  மோடியின் டாக் ...

  நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.

  காணொளி

 • கட்டுரைகள்

 • © Copyright 2013 Narendramodi.in All Rights Reserved. | Disclaimer | Privacy Policy | Terms of Service